Published:Updated:

போலீஸ் கமிஷனரும் ஒரு ரௌடியும்!

போலீஸ் கமிஷனரும் ஒரு ரௌடியும்!

போலீஸ் கமிஷனரும் ஒரு ரௌடியும்!

போலீஸ் கமிஷனரும் ஒரு ரௌடியும்!

Published:Updated:
##~##

ருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாச்சாத்தி கிராமத்தில் தயாராகிவருகிறது, 'வாச்சாத்தி’ திரைப்படம். சமீபத்தில் வெளியான நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டு உருவாகும் இப்படத்தின் இயக்குநர், ரவித்தம்பி.      

இயக்குநர் பிஸியாக இருக்க, படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துவரும் 'பெசன்ட் நகர்’ ரவி மற்றும் 'மீசை’ ராஜேந்திரன் ஆகியோரிடம் கொஞ்சம் கலகலப்பாகப் பேசியபோது...

'உங்களை யாருங்க சினிமாத் துறைக்குள்ள விட்டது? (சும்மா தமாஷ§க்குத்தாங்ணா!)'

ரவி: ''நடிக்க ஆசைப்படுறவங்க கோடம்பாக்கம் தேடிப் போவாங்க. ஆனா, கோடம்பாக்கமோ என்னைத் தேடி வந்தது. என் வீடு பெசன்ட் நகர்ல இருக்கு. அங்கே நிறைய படப்பிடிப்பு நடக்கும். அப்பப்ப ஷூட்டிங்ல தலைகாட்டுவேன். நமக்கு பாக்ஸிங், பளு தூக்குறது, பாடி பில்டிங் எல்லாம் கைவந்த கலைங்கிறதால அப்படியே ஒட்டிக்கிட்டேன். சினிமாவுல எனக்கு குரு 'ஸ்டன்ட்’ பாண்டியன். முதல் படம் 'லக்கிமேன்’. உண்மையிலேயே நான் ரொம்ப லக்கிமேன்தான்!''

ராஜேந்திரன்: ''என் அப்பா சண்முகநாதனுக்கு எம்.ஜி.ஆர்., சிவாஜி மாதிரி வரணும்னு பயங்கர வெறி. அதுக்காக சென்னையில ஒரு ஸ்டுடியோ விடாம ஏறி, இறங்கினார். வேலைக்கே ஆகலை. அந்தக் கோபத்துல ஊருக்குத் திரும்பி, உழைச்சுப் பணம் சேர்த்து 'ஸ்ரீ சண்முகா’ தியேட்டரைக் கட்டினார். அவருக்காக நான் நடிகனாக முடிவு எடுத்தேன். ஏ.ஆர்.முருகதாஸின் 'ரமணா’வில் ஆரம்பிச்சு இப்போ பல மொழிகளில் 94 படங்கள் முடிச்சிட்டேன்!''

போலீஸ் கமிஷனரும் ஒரு ரௌடியும்!

'சினிமாவுல எல்லோரையும் மிரட்டுற உங்களை நிஜமாவே யாராவது மிரட்டியது உண்டா?'

ரவி: ''சார், நான் ஒரு பச்சப்புள்ளைங்க. உருவம் மட்டும்தான்  மிரட்டல் தோரணை. ஆனா, யாராவது மிரட்டினா... விட மாட்டேன். அழுதுருவேன்!''

ராஜேந்திரன்: ''ஒருமுறை நுங்கம்பாக்கம் சிக்னல்ல சிவப்பு விளக்கைக் கவனிக்காம கோட்டைத் தாண்டிட்டேன். ரெண்டு போலீஸ்காரங்க விரட்டி வந்து என் காரை மடக்கிட்டாங்க. காரை விட்டு இறங்கிய என்னைப் பார்த்ததும், 'என்னப்பா நம்ம கமிஷனரையே நிறுத்திட்டீங்க’னு கிண்டல் அடிச்சி, 'இனிமேல் சிக்னலை கவனிச்சு வண்டி ஓட்டுங்க கமிஷனர் சார்’னு அனுப்பிவெச்சாங்க!''

'சினிமா வாழ்க்கை எப்படி இருக்கிறது?'

போலீஸ் கமிஷனரும் ஒரு ரௌடியும்!

ரவி: ''போலீஸ் ரோல் கிடைச்சாலும் எனக்குக் 'கெட்ட போலீஸ்’ வாய்ப்புதான் கிடைக்குது. ராஜேந்திரன் அண்ணன் கான்ஸ்டபிள்ல ஆரம்பிச்சு கமிஷனர் வரைக்கும் பொளந்து கட்டுறார். அவரைப் பார்க்கும்போதுதான் கொஞ்சம் பொறாமையா இருக்கு!''

ராஜேந்திரன்: ''சும்மா கெடங்க அண்ணாச்சி! கதாநாயகியைக் கையப் புடுச்சு இழுக்கறீங்க. தோள்ல தூக்கிவெச்சு சுத்துறீங்க. ரேப் பண்ணுறீங்க... இந்தப் பாக்கியம் எல்லாம் எனக்கு எங்கே வாய்க்குது?''  

'மறக்க முடியாத விபரீதம்?'  

ரவி: ''உருவ ஒற்றுமையால் ஒருமுறை என்னை 'அயோத்திகுப்பம் வீரமணி’னு நினைச்சு போலீஸ் நெத்தியில் பிஸ்டலை வெச்சிடுச்சு. வெலவெலத்துப் போயிட்டேன். விவரம் தெரிஞ்சு அப்புறம் விட்டுட்டாங்க. அடுத்த மாசமே வீரமணியைச் சுட்டுட்டாங்க. நல்லவேளை தப்பிச்சேன்!''

ராஜேந்திரன்: ''ஒரு படத்துல 50 அடி உயரத்துல நிற்கிற என்னை ஒருத்தர் சுடுவார். அங்கு இருந்து விழுகிற காட்சியில் கீறல்கூட இல்லாம டூப் ஒருத்தர் விழுந்து நடிச்சிக் கொடுத்துட்டார். நான் அஞ்சு அடி ஸ்டூலில் இருந்து விழணும். ஆனா, எக்குத்தப்பா விழுந்து பல் உடைஞ்சு, உதடு கிழிஞ்சுப் போச்சு!''  

பேசிக்கொண்டு இருக்கும்போதே ''சார், ஷாட் ரெடி...'' குரல் வர, ஓடோடிச் செல்கிறார்கள் கமிஷனரும் ரௌடியும்!

  • வாச்சாத்தி வழக்குக்காகத் தொடர்ந்து போராடிய சி.பி.எம். கட்சி சார்பில் மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம்,  எம்.எல்.ஏ டில்லிபாபு இருவரும்தான் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் துவக்கி வைத்தவர்கள்.
  • தமிழில் 10 ஆண்டுகளுக்கு முன்பே 'ரிக்ஷா தம்பி’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார் ரவித்தம்பி. அது சரியாகப் போகவில்லை. 'பனியில் பூத்த மலர்கள்’, 'உயிரே என்னோடு கலந்துவிடு’, 'உள்ளம் உருகுதடி’ என்ற படங்களை இயக்கி முடித்திருக்கிறார். இதில் 'உயிரே என்னோடு கலந்துவிடு’ விரைவில் திரைக்கு வருகிறதாம்!
     
  • மலையாளத்தில் இவர் இயக்கி வெளியான 'ஒன்னறை கள்ளன்’ கேரள மக்கள் வரவேற்பைப் பெற்ற படம்.

- எஸ்.ராஜாசெல்லம்
படங்கள்: எம்.தமிழ்செல்வன்