போலீஸ் இன்ஸ்பெக்டர், தமிழ்ப் புலவர், ஆன்மிக சொற்பொழிவாளர், ஆராய்ச்சி மாணவர்... இத்தனை அவதாரத்தையும் ஒருவரே எடுக்கிறார். அவர்தான்  மதுரை மதிச்சியம் இன்ஸ்பெக்டர் குணசுந்தரம்.

பக்தி போலீஸ்!
##~##

கரடுமுரடான வழக்குகளுக்கு இடையில் தினமும் பகவத் கீதை வாசிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் இந்தப் பக்திமான் போலீஸ். தமிழ் ஆர்வத்தில் மதுரை தமிழ்ச் சங்கத்தில் புலவர் பட்டம் பெற்றிருக்கிறார். நெற்றி நிறைய பட்டையைப் போட்டுக்கொண்டு, மானாமதுரை பஞ்சமுக பிரத்தியங்கரா தேவி கோயிலில் ஆஸ்தான ஆன்மிக சொற்பொழிவாளராகவும் வலம்வருகிறார். மதுரை வானொலியில் 'சான்றோர் சிந்தனை’ நிகழ்ச்சியிலும் ஆன்மிக மணம் பரப்புகிறார். இவருடைய ஆன்மிகப் பணிகளுக்காக, 'ஆன்மிக அருள்நெறிச் செல்வர்’ என்று இவருக்குப் பட்டம் வழங்கியிருக்கிறார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். 'அரசியலில் பெண்களின் ஆளுமை’ என்ற ஆய்வுக் கட்டுரைக்காக, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அண்மையில் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.

பக்தி போலீஸ்!

'கடுமையான காவல் பணிகளுக்கு நடுவில் எப்படி இதற்கெல்லாம் உங்களுக்கு நேரம் கிடைக்கிறது?’ என்று கேட்டால், ''பணிச்சுமை காரணமாகத்தான் காவல் துறையினர் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அதில் இருந்து மீள,  மென்மையான விஷயங்களில் மனதைச் செலுத்தவேண்டும். நான் அந்தப் பாதைக்கு ஆன்மிகத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறேன். ஆண்டவனைத் தவிர, வேறு யாரால் நம்மைக் காப்பாற்ற முடியும்?'' - பக்திப் பழமாகப் பதில் கொடுக்கிறார் இன்ஸ்பெக்டர் ஆஃப் போலீஸ்!

 - குள.சண்முகசுந்தரம்
படம்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு