Published:Updated:

உன்னையே நீ அறி!

உன்னையே நீ அறி!

உன்னையே நீ அறி!

உன்னையே நீ அறி!

Published:Updated:
##~##
உன்னையே நீ அறி!

ஆர்.எம்.கே.வி-யுடன் திருநெல்வேலி மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் வேணுவம் ரோட்டரி சங்கம் இணைந்து, 'கிடிவல் 2011’ என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை செம ரகளையாக நடத்தினார்கள். பாளையங்கோட்டை சாராள் டக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிதான் ஸ்பாட். நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டப் பள்ளிகளில் இருந்து சுமார் 1,100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் உற்சாகமாகக் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சிக்குள் செல்லும் முன் கிடிவல் பற்றி நாலு வரி...

உன்னையே நீ அறி!

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டப் பள்ளிகளில் பயிலும் எல்.கே.ஜி. முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் தனித் திறமையை வெளிக்கொண்டு வர, ஆர்.எம்.கே.வி- நிறுவனம் நடத்தும் போட்டி இது. போட்டியில் அதிக புள்ளிகள் பெறும் பள்ளி, சுழற் கோப்பையைத் தட்டிச் செல்லும். பேச்சு, நடனம், கட்டுரை, ஓவியம், ஃபேஷன் ஷோ, க்விஸ், கையெழுத்துப் போட்டி என, 23 போட்டிகள் நடந்தன.

மாறுவேடப் போட்டியில் கதக் டான்ஸர், கிருஷ்ணர், போலீஸ் அதிகாரி, பாரத மாதா, நீதி தேவதை, எம்.ஜி.ஆர்., மனீஷா கொய்ரலா என விதவிதமாகக் கலக்கி எடுத்தார்கள் மாணவர்கள். கத்தரிக்காய், வெண்டைக்காய், பீட்ரூட், பீன்ஸ், உருளைக் கிழங்கு, கறிவேப்பிலை எனக் காய்கறிகளால் நெய்த ஆடைகள் அணிந்து அமர்க்களப்படுத்தினான் ஒரு மாணவன். மாதேஷ் என்கிற மாணவன் ட்ராகுலா உடை அணிந்து வந்தபோது பின்னணியில் 'இவர் கோரைப்பல் இல்லா ட்ராகுலா... கொள்ளைகொள்ளும் இவர் உலா!’ என்று பயமுறுத்தாமல் அறிமுகப்படுத்தினார்கள்.

தனி நபர் நடனத்தில் மாரியம்மாள் என்ற மாணவி மண், விதை, உரம், கலப்பை கொண்டு விவசாயம் பற்றிய விழிப்பு உணர்வு பாடலுக்கு ஆடி அசத்தினார். 'மழைத் துளி மழைத் துளி மண்ணில் சங்கமம்’ பாடலுக்கு ஒரு காலை மடக்கி வைத்துக்கொண்டு ஒற்றைக் காலோடு முழுப் பாட்டுக்கும் ஆடி அசத்தினார் நந்திதா.

மாணவிகளுக்கான ஃபேஷன் ஷோ போட்டியில் மாணவி ஏஞ்சல், தேவதை உடையிலேயே வந்து பரிசைத் தட்டிச் சென்றார். வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்க மேடை ஏறினார் விஜய் டி.வி 'நீயா? நானா?’ கோபிநாத். ''உண்மையிலேயே இதுதான் திருவிழா. பாடப் புத்தகப் படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் இதுவும் ஒரு படிப்புதான். 'உன்னையே நீ அறி’னு விவேகானந்தர் சொன்னார். அதே மாதிரி இன்னிக்கு உங்களைப் பத்தி நீங்க தெரிஞ்சுக்கிட்டீங்க. இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போதுதான், நாட்டுநடப்புத் தெரியும். நல்ல தொடர்புகளும் கிடைக்கும். குழந்தைகளுக்கு எதன் மேல் ஆர்வம் இருக்கோ அந்த ரூட்ல அவங்களை சுதந்திரமாச் செயல்பட அனுமதிக்கணும். அதுதான் முழுமையான கல்வி. ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகளை 'படி’, 'படி’னு நச்சரிச்சா, அவங்ககிட்டே இருக்கிற தனித் திறமை வெளியே வராது. நம்ம ஆசையை அவங்க மேல திணிக்கக் கூடாது. அவங்களுக்குப் பிடித்த துறையில் அவங்களை சந்தோஷமா அனுப்பி வைக்கணும்!'' என்றார்.  

உன்னையே நீ அறி!

64 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்த டவுன் லிட்டில் ஃப்ளவர் பள்ளி, சுழற்கோப்பையைத் தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை 54 புள்ளிகளுடன் சங்கர் நகரைச் சேர்ந்த ஜெயந்திரா பள்ளியும், மூன்றாவது இடத்தை 51 புள்ளிகளுடன் பாளையங்கோட்டை பெல் மெட்ரிக்குலேஷன் பள்ளியும் வென்றன.

பரிசுகளோடும் நல்ல அனுபவங்களோடும் கலைந்து சென்றார்கள் மாணவர்களும் ஆசிரியர்களும்!

உன்னையே நீ அறி!
உன்னையே நீ அறி!
  • சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளாக அரசியல் கட்சிக் கொடிகள் எதுவும் பறப்பது இல்லை. இங்கே கட்சிக்காரர்கள் இருந்தாலும் கொடி மரங்கள் வைத்தால் தேவையில்லாதப் பிரச்னைகள் வரும் என்று பேசி முடிவு செய்து, தடை விதித்துவிட்டார்கள். இங்கே  காந்தி மற்றும் காமராஜருக்கு மட்டும் சிலைகள் உண்டு. வேறு அரசியல் தலைவர்களுக்கு இங்கு சிலைகள் இல்லை!
     
  • ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில், கடந்த 40 ஆண்டுகளாக யானை இல்லாமல் இருந்தது. சமீபத்தில் அசாம் மாநிலத்தில் இருந்து எட்டு வயது பெண் யானைக் குட்டியை வாங்கி, நன்கொடையாக வழங்கி உள்ளார் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகி வெங்கடாச்சலம். ஜெயமால்யதா என்ற பெயருடைய இந்த யானையைப் பார்ப்பதற்கு என்றே பக்தர்கள் கூட்டம் தினமும் கோயிலுக்கு வர ஆரம்பித்திருக்கிறது!

- ஆ.கோமதிநாயகம், பி.எஸ்.முத்து
படங்கள்: எல்.ராஜேந்திரன், எல்.முருகன்