Published:Updated:

"இந்தியாவைச் சுற்றி ஏவுகணைகள்!"

"இந்தியாவைச் சுற்றி ஏவுகணைகள்!"

##~##

டந்த 25-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோவிலில் உள்ள நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரி மாணவர்களின் முகத்தில் ஏக சந்தோஷம். காரணம், மாணவர்களுடன் 'இன்றைய அறிவியலும் நாளைய அறிவியலும்’ என்ற தலைப்பில் கலந்துரையாட வந்திருந்தார் சிவதாணுப் பிள்ளை. இந்தியப் பாதுகாப்பு ஆய்வு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரியான இவருடைய பேச்சில் ஏவுகணையின் சீற்றமும் சீறலும் தெரிந்தன. 

"இந்தியாவைச் சுற்றி ஏவுகணைகள்!"

நிகழ்ச்சியின் தொடக்கமாக மைக் பிடித்த கல்லூரி முதல்வர் உமையருபாகன், ''இந்தியப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் அக்னி, ப்ரமோஸ், ப்ருத்வி ஏவுகணைகளை வடிவமைத்து ராணுவத்திடம் கொடுப்பது இவருடைய  டி.ஆர்.டி.ஓ நிறுவனம்தான். எனவே, உங்கள் மனதில் உள்ள சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்!'' என்று அழைப்பு விடுத்தார்.

''அறிவியல் துறையில் சாதிக்க எவ்வாறு நம்மை தயார் செய்துகொள்ள வேண்டும்?''  என்று யாசினா பேகம் என்ற மாணவி கேட்க, ''குழந்தைப் பருவத்திலேயே எதிலும் ஏன், எதுக்கு, எப்படி?னு கேள்வி கேட்கும் குழந்தைகள்தான், பிற்காலத்தில் அறிவியல் விஞ்ஞானிகளாக உருவாகுவார்கள். கேள்வி கேட்கும் திறனும் அதற்கு விடைதேடும் முயற்சியும் இருந்தாலே அறிவியல் துறையில் சாதிக்கலாம்!'' என்பது சிவதாணுப் பிள்ளையின் பதில்.

"இந்தியாவைச் சுற்றி ஏவுகணைகள்!"

''திடீர்னு போர் வந்தா என்ன பண்ணுவீங்க? நம்ம நாட்டுக்கு யார் எதிரி?'' இது மகேஷின் கேள்வி. ''எதிரி பக்கத்தில்தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. இன்னிக்கு நட்போட இருக்கிற நாடு, நாளைக்கே எதிரியா மாறலாம். இந்தியாவைச் சுற்றி 17 நாடுகளில் ஏவுகணைகள் இருக்கு. எதிர்கால யுத்தங்கள் ஆயுதப் போராக இல்லாமல், அறிவு சார்ந்த போராகத்தான் இருக்கும். நீங்க பயப்படாம படிக்கிறதைக் கவனிங்க!'' என்று தைரியம்கொடுத்தார் சிவதாணுப் பிள்ளை.

''தென் மாவட்ட மக்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?'' என்ற கேள்விக்கு, ''தென் மண்டலம்தான் தமிழ் வளர்த்த பூமி. இயல்பாகவே இங்கு உள்ளவர்கள் கொஞ்சம் புத்திசாலிகள். மரபணுவிலேயே போராட்டக் குணமும் கொள்கைப் பிடிவாதமும் நிரம்பி இருக்கும். வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ.சி,  பொதுவுடமைவாதி ஜீவா என, சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில்

"இந்தியாவைச் சுற்றி ஏவுகணைகள்!"

தொடங்கி இன்றைக்கு அப்துல் கலாம் வரை உயரம் தொட்டவர்களில் பலரும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்!'' என்ற சிவதாணுப் பிள்ளை யின் பதிலுக்கு, மாணவர்களிடையே ஆரவார வரவேற்பு!

  • 'பம்பரம்’ என்ற படத்தை இயக்கிவரும் நடிகை ரோகிணி, இந்தப் படத்தில் நடிக்கவைக்க பறை, உருமி, பம்பை, தவில் போன்ற வாத்தியக் கருவிகளை வாசிக்கும் கலைஞர்களை தென் மாவட்டங்களில் தேர்வு செய்துகொண்டு இருக்கிறார்!

- என்.சுவாமிநாதன்
படம்: ரா.ராம்குமார்

அடுத்த கட்டுரைக்கு