Published:Updated:

ரயில் ஜாக்கிரதை!

ரயில் ஜாக்கிரதை!

##~##

துரை ரயில் நிலையத்தில் ரயிலை விட்டு இறங்கி வெளியே வந்தால், ரயில் நிலைய வெளி வளாகத்தில் 'க்க்கூ...கூச்...கூச்...கூச்!’ என்று சத்தம்! ஆச்சர்யத்துடன் நிமிர்ந்து பார்த்தால் ரயில்வே சாரணர்களும் பள்ளி மாணவர்களும் ரயில் விளையாட்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். என்னவென்று விசாரித்தால், ''ரயில்வே லெவல் கிராசிங்குகளில் நடைபெறும் விபத்துகளைத் தடுக்க, விழிப்பு உணர்வு தெரு நாடகம் போடுகிறோம்!'' என்றார்கள். 

இந்த விழிப்பு உணர்வு முகாமை வழி நடத்திக்கொண்டு இருந்த கோட்ட ரயில்வே மேலாளர் ஏ.கே.கோயல், ''பெரும்பாலான ரயில் விபத்துகள், லெவல் கிராசிங்குகளில்தான் நடக்கின்றன. மதுரை கோட்டத்தில் மட்டும் லெவல் கிராசிங் விபத்துகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் 14 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள். மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி, ரயில்வே லெவல் கிராசிங்கை வாகனத்தில் கடக்கும்போது லெவல் கிராசிங்குக்கு ஐந்து மீட்டருக்கு முன்னால் வாகனத்தை நிறுத்திவிட்டு, இருபுறமும் ரயில் வருகிறதா என்று பார்த்துவிட்டு லெவல் கிராசிங்கைக் கடக்க வேண்டும். ஆனால், வாகன ஓட்டுனர்கள் இந்த விதிமுறையை மீறும்போதுதான் விபத்துகள் நிகழ்கின்றன. இந்த விஷயத்தில் சாலை உபயோகிப்பாளர்களின் ஒத்துழைப்பை நாடி, இந்தச் சிறப்பு முகாமை ஒரு மாதத்துக்கு நடத்துகிறோம்!'' என்றார்.

ரயில் ஜாக்கிரதை!

கோயல் உட்பட பல ரயில்வே அலுவலர்கள், விழிப்பு உணர்வு துண்டறிக்கைகளை ஆட்டோ ஓட்டுனர்கள், பேருந்து ஓட்டுனர்கள், பயணிகளுக்கு வழங்கி அதைப் பற்றி விளக்கினார்கள். ''ரயில் பாதையை 'பெர்மனென்ட் வே’ என்பார்கள். தற்காலிகமாக அதில் பயணிப்பவர்கள்தான் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்!'' என்றார் ரயில்வே ஊழியர் ஒருவர்.

உண்மைதான்... நம் பாதுகாப்பு நம் கண் ணில்!

- ராதா

அடுத்த கட்டுரைக்கு