Published:Updated:

ஒரு துளி... உயிர்த் துளி!

ஒரு துளி... உயிர்த் துளி!

##~##

ந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களுடைய உதிரத்தைக் கொடுத்து மனித உயிர்களைக் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார்கள் மதுரையில் உள்ள 'உயிர்த் துளி’ அமைப்பினர்!

ஒரு துளி... உயிர்த் துளி!

''1998-ல் ரஜினி பிறந்த நாளுக்காக, மதுரை அப்போலோ மருத்துவமனையில் 16 பேர் ரத்த தானம் செய்தோம். அதில் இருந்து எங்களுக்கு அடிக்கடி ரத்த தான அழைப்புகள் வரும். நாங்க யாருக்காக ரத்தம் கொடுத்தோமோ அந்தக் குடும்பத்தினரின் முகத்தில் தெரியும் நிம்மதியும் மகிழ்ச்சியுமே எங்களை முழுநேர ரத்த தான சேவைக்கு இழுத்துச்சு. எங்கள் நண்பர்களை உறுப்பினர்களாக்கி, 2000-ம் ஆண்டு 'உயிர்த் துளி’ அமைப்பை உருவாக்கினோம். இப்போ எங்க அமைப்பில் மதுரை, பரமக்குடி, காரைக்குடி கிளைகள் அனைத்திலும் சேர்த்து 1,000 உறுப்பினர்கள் இருக்காங்க. இதுவரை 11 ஆயிரம் யூனிட் ரத்தம் தானம் செய்திருக்கோம்!'' என்கிறார் 'உயிர்த் துளி’யின் அமைப்பாளர் ரமேஷ்.

'உயிர்த் துளி’யில் உள்ள 20 சதவிகித உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் என்பது ஆச்சர்யமான செய்தி.

''ரத்தம் தேவைப்படுபவர்கள் 94433 54053 என்ற எண்ணுக்கு அழைத்தால் போதும்... நாங்களே சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு எங்களது டோனர்களை அனுப்பிவைப்போம். 24 மணி நேரமும் எங்களை அழைக்கலாம். அரசு மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை உண்டு.

ஒரு துளி... உயிர்த் துளி!
ஒரு துளி... உயிர்த் துளி!

பல சமயம் ரத்த சொந்தங்‑களே ரத்தம் கொடுக்க மறுக்கிறார்கள். ரத்த தான முகாம்கள் நடத்தும்போது பொது மக்கள் ஆர்வமாகக் கலந்துகொள்வது இல்லை. இதுபோன்ற நிலைமைகள் மாற வேண்டும். பரவை சத்தியமூர்த்தி நகரில் வசிக்கும் பழங்குடி இன மக்கள், ஆண்டுக்கு 150 யூனிட் ரத்தத்தைத் தானமாகக் கொடுக்கிறார் கள். மதுரை 'கோனார் மெஸ்’ உரிமையாளரும் தொழிலாளர் களும் எங்கள் சேவையை அறிந்து இப்போது 'உயிர்த் துளி’ டோனர்களாகி இருக்கிறார்கள். இதே ஆர்வம் எல்லோருக்கும் வந்தால் இன்னும் நிறைய மனித உயிர்களைக் காப்பாற்ற முடியும்!'' என்கிறார் 'உயிர்த் துளி’யின் செயலாளர் சந்தோஷ்.

  • மதுரை கார்ப்பரேஷன் கமிஷனர் நடராஜனுக்கு புகார் கூற யார் போன் செய்தாலும், அவர்களை லைனிலேயே இருக்கச் சொல்லிவிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்து, அந்தக் குறையை எவ்வளவு நாட்களுக்குள் சரிசெய்ய முடியும் என்கிற பதிலை போன் செய்தவருக்குச் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்!

- குள.சண்முகசுந்தரம்
படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி  

அடுத்த கட்டுரைக்கு