Published:Updated:

ஜஸ்ட் மிஸ்! - வேலூர் ஸ்பெஷல்

ஜஸ்ட் மிஸ்! - வேலூர் ஸ்பெஷல்

##~##

''உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்து மீண்ட அனுபவம் சொல்லுங்கள்' என்று இவர்களிடம் கேட்டபோது...  

ஜஸ்ட் மிஸ்! -  வேலூர் ஸ்பெஷல்

விஜயகுமார், தனியார் நிறுவன ஊழியர்: ''போன வாரம் கன்டெய்னர் லாரியில், ஆம்பூர் மேம்பாலத்தில் போய்க்கிட்டு இருந்தோம். திடீர்னு இறக்கத்தில் பிரேக் பிடிக்கலை. வண்டியை நிறுத்தலாம்னு பார்த்தா சக்கரத்தில் உள்ள போல்ட் எல்லாம் கழன்று கீழே விழுது. மனசுக்குள்ள திக்... திக்னு அடிக்குது. நல்லவேளை, ஆண்டவன் புண்ணியத்தில் வண்டி நின்னுடுச்சி. வீட்டுக்கு வந்து குடும்பத்தைப் பார்த்த பிறகுதான் உயிர் திரும்பவந்தது!''

மெய்யழகன், ஓவியர், குடியாத்தம்: ''கல்லூரியில் படிக்கும்போது நானும் ஒரு நண்பனும் பைக்கில் ஏலகிரி மலைக்குப் போனோம். மழை கொட்டோ கொட்டுனு கொட்டிட்டு இருந்ததால், சாலையில் இருந்த வேகத் தடை கண்ணுக்குத் தெரியலை. அதில் ஏறி நிலைதடுமாறி ரெண்டு பேரும் மரத்தில் மோதி விழுந்துட்டோம். தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டுது. கண் விழிச்சுப் பார்த்தா கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் இருக்கோம். இன்னும் ஆச்சர்யமா இருக்கு... எப்படிப் பிழைச்சோம்னு!''

ஜஸ்ட் மிஸ்! -  வேலூர் ஸ்பெஷல்

சரவணன், அரசு அருங்காட்சியக காப்பாளர், வேலூர்: '2004-ல் நாகப்பட்டினத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். கீழே நின்னு பேசிட்டு அப்போதான் மாடியில் இருந்த வீட்டுக்கு ஏறிப் போனேன். அடுத்த அஞ்சு நிமிஷத்துல சுனாமி. ஆயிரக்கணக்கானவங்களை வாரிச் சுருட்டிட்டுப் போகுது சுனாமி. என் கண் முன்னாடி அவ்வளவு மரணங்கள். நான் மட்டும் அந்தச் சுனாமியில் மாட்டாம தப்பிச்சதை ஆச்சர்யம்னு சொல்லணும்!''

அசோகன், லாரி டிரைவர்: ''போன வருஷம் லாரியில் மஹாராஷ்டிரா காட்டுப் பகுதியில் போய்ட்டு இருந்தப்போ, திடீர்னு கொள்ளைக்காரர்கள் எங்களை ஜீப்பில் துரத்த ஆரம்பிச்சுட்டாங்க. கையில் நாட்டுத் துப்பாக்கி வேற. விரட்டிப் பிடிச்சு தலையில் துப்பாக்கிவெச்சு எங்ககிட்ட இருந்த பணத்தை எல்லாம் எடுத்துக்கிட்டு ஓடிட்டாங்க. பணம் போனாப் போகுதுங்க... உயிர் பிழைச்சோமேன்னு திரும்பி வந்தேன்!''  

ஜெய்கணேஷ், நிதி நிறுவன மேலாளர்: ''ஆறு வருஷத்துக்கு முன்னால பஸ்ல போய்ட்டு இருந்தப்ப... எதிரில் வந்த லாரி மோதி பஸ்  தலைக்குப்புற கவிழ்ந்துடுச்சி.  நல்லவேளை யாருக்கும் பெரிய அடி இல்லை. ஆனாலும், அந்த ஒரு நிமிஷம் கண்ணு முன்னாடி எமன் வந்துட்டுப் போன மாதிரி இருந்தது!''

-கே.ஏ.சசிகுமார்
படங்கள்: ச.வெங்கடேசன்

அடுத்த கட்டுரைக்கு