Published:Updated:

``அரசுப் பள்ளிக்காக இந்த 'கேம் சேலஞ்ச்'' - மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் லாவண்யா

``அரசுப் பள்ளிக்காக இந்த 'கேம் சேலஞ்ச்'' - மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் லாவண்யா
``அரசுப் பள்ளிக்காக இந்த 'கேம் சேலஞ்ச்'' - மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் லாவண்யா

``அரசுப் பள்ளிக்காக இந்த 'கேம் சேலஞ்ச்'' - மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் லாவண்யா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``அரசுப் பள்ளிக்காக இந்த 'கேம் சேலஞ்ச்'' - மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் லாவண்யா

இந்தியாவில் கல்வியறிவுப் பெற்றவர்களின் சதவிகிதம் அதிகரித்ததில், அரசுப் பள்ளிகளின் பங்களிப்பே முதன்மையானது. ஆனால், தனியார் பள்ளிகளின் வரவால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைய ஆரம்பித்தது. அதனால், பள்ளிகள் மூடப்படுவது தொடர்கிறது. இதைத் தடுக்க, தன்னால் இயன்ற உதவியாக, அரசுத் தொடக்கப் பள்ளிகளில் கே.ஜி வகுப்புகள் கொண்டுவர வேண்டும் என்றதுடன், சென்னையின் ஒரு பள்ளியில், கேஜி வகுப்பாசிரியருக்கான ஒரு வருட ஊதியத்தொகையை ஏற்றுக்கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார். இந்தத் திட்டத்தின் பணிகளில் இயங்கியவர்களில் லாவண்யா அழகேசன் முக்கியமானவர். (அமெரிக்காவின் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்) இந்தத் திட்டத்தை இன்னும் பரவலாக்க புதிய கேம் சேலஞ்ச் ஒன்றுக்கு அழைப்புவிடுத்துள்ளார் லாவண்யா. அதுகுறித்து அவரிடம் பேசினேன்.

``நான் பிறந்தது, படித்தது எல்லாம் சேலம். இலவசக் கல்வி வழியாகவே படித்தேன். சில ஆண்டுகள் ஆசிரியராகவும் பணியாற்றினேன். பிறகு, அமெரிக்காவில் வேலை கிடைத்தது. இங்கே, பாலாஜி குலசேகரன் என்ற பையன், கார் விபத்தில் இறந்துவிட்டார். அவர் உடலை இந்தியாவுக்கு எடுத்துச்செல்ல நடவடிக்கை எடுத்தோம். இதற்கு 14 நாள்கள் ஆகிவிட்டன. இவ்வளவு நாளாகிறதே என நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து ஒரு வாட்ஸ்அப் குழு ஆரம்பித்தோம். பிறகு, ஒரு பெண் இறந்தபோது நான்கே நாளில் உடலை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தோம். அதன்பின், பல விஷயங்கள், ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு நிதி திரட்டல் எனத் தொடர்கிறது.

டெல்லியில் இருக்கும் குணசேகரன், தமிழகத்தில் என்ன மாதிரியான பணிகளைச் செய்யலாம் என ஆலோசனைத் தருவார். தமிழகத்தின் 800-க்கும் மேற்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் செய்தியைக் கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாக இருந்தது. இதற்கு என்ன செய்யலாம் என யோசித்தோம். அந்தப் பள்ளிகளில் கே.ஜி வகுப்புகள் தொடங்கினால், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் எனத் தோன்றியது. ஏனென்றால், எல்.கே.ஜி வகுப்புக்காகத் தனியார் பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்கள், அங்கேயே படிப்பைத் தொடர்ந்துவிடுகின்றனர். அதையே அரசுப் பள்ளியில் செய்தால் பலன் இருக்குமே. இந்த முயற்சியை வரவேற்ற ஜி.வி.பிரகாஷ் குமார், உடனே செயலில் இறங்கிவிட்டார். சென்னையின் ஒரு பள்ளிக்குச் சென்றுவந்து, வெளியிட்ட வீடியோ மூலம், பலரும் எங்களைத் தொடர்புகொள்கின்றனர். இதை இன்னும் பரவலாக்க ஒரு சேலஞ்ச் வீடியோ பதியலாம் என நினைத்தேன். அதன்மூலம், நானும் ஓர் அரசுப் பள்ளியில் கே.ஜி வகுப்பு ஆசிரியருக்கான ஒரு வருட ஊதியத்தை ஏற்றுக்கொண்டேன். என் நண்பர்கள் இருவரையும் அந்தச் சவாலுக்கு அழைத்துள்ளேன். இதைப் பார்க்கும் நீங்களும் உங்களின் நண்பர்களுக்கு அழைப்புவிடுங்கள். இது பொறுப்பும் கடமையும் மிக்க பெரிய வேலை. ஊர் கூடியே செய்ய வேண்டும்" என்கிறார் லாவண்யா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு