Published:Updated:

உடலை வலுவாக்க... உணவை மருந்தாக்குங்கள்!

உடலை வலுவாக்க... உணவை மருந்தாக்குங்கள்!

உடலை வலுவாக்க... உணவை மருந்தாக்குங்கள்!

உடலை வலுவாக்க... உணவை மருந்தாக்குங்கள்!

Published:Updated:
உடலை வலுவாக்க... உணவை மருந்தாக்குங்கள்!

மிழகத்தின் மூலிகை மருத்துவமே போதி தர்மர் மூலம் சீனாவின் கொள்ளை நோயைத் தீர்த்தது என்கிறது '7-ஆம் அறிவு’ திரைப்படம்! அது கற்பனையோ அல்லது நிஜமோ... ஆனால், தற்போது கடலூர் மாவட்டம் சாலியந்தோப்பு கிராமத்தில் தயாராகும் சித்த மருந்துகள் சீனா, மலேசியா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும் இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது என்பது 100 சதவிகிதம், கற்பனை கலக்காத நிஜம்!

உடலை வலுவாக்க... உணவை மருந்தாக்குங்கள்!
##~##

சித்த மருத்துவமனை, மூலிகை உணவுப் பொருள்கள் தயாரிப்பு மற்றும் சித்தா பார்மா நடத்திவரும் சித்த வைத்தியர் குருநாதனைச் சந்தித்தோம்.

''சித்த மருத்துவம் என்பது தமிழ்நாட்டுக்கே உரிய, தமிழர்களுக்குச் சொந்தமான மருத்துவம்.மூலிகைகள் என்று அறியாமலே கீரைகளைச் சாப்பிட்டபோதும் நம் மண்ணுக்கு ஏற்ற கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற உணவு வகைகளைச் சாப்பிட்டபோதும் நம் உடலும் நலமாக இருந்தது. உழைப்பும் உடல்நலத்துக்கு உரம் சேர்த்தது. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக நாம் நம் மண்ணுக்கேற்ற உணவு வகைகளை மறந்துபோனதுதான் விதவிதமான நோய்களை விருந்தாளி ஆக்கின. இன்னொருபுறம் நம் உடல் உழைப்பும் குறைந்துபோனது. நம்முடைய பூர்வீக மருத்துவத்தைப் புரிந்துகொள்வது அவசியம்.  

எங்களைப் போலவே பல சித்த மருத்துவர்கள் தமிழகத்தில் பரம்பரை பரம்பரையாக மருத்துவம் பார்த்துவருகிறார்கள். சரியான சித்த மருத்துவரைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது மிக முக்கியமானது. தமிழக அரசு எங்களின் சித்த மருத்துவத்தைச் சோதனைசெய்து மருத்துவச் சான்றும், எனக்கு மருத்துவர் பட்டமும் வழங்கி உள்ளது. மூலிகை சித்த மருந்துகள் தயாரித்து சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசும் அனுமதி வழங்கி உள்ளது.

இன்று இருக்கும் இயந்திர வாழ்க்கையில் சாதாரண தலைவலி என்றால் கூட நூற்றுக்கணக்கில் செலவழித்து ஆங்கில மருத்துவரையோ ஆங்கில மருந்துகளையோ தேடி ஓட வேண்டிய நிலை. ஆனால், கிராமத்துப் பாட்டிகளைக் கவனித்தால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்... ஒற்றைத் தலைவலியோ, இரட்டைத் தலை வலியோ... எந்த இடத்தில் வலிக்கிறதோ அங்கே வெற்றிலையைக் கிள்ளிவைத்துவிட்டு, வேலை யைப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.

'உணவே மருந்து; மருந்தே உணவு’ என்பது தான் சித்த வைத்தியத்தின் தாரக மந்திரம். 25 மிளகு, 25 வேப்பிலை காம்பு இரண்டையும் சேர்த்து கஷாயம்வைத்துக் குடித்தால் எவ்வளவு பெரிய தலைவலி, காய்ச்சலும் வந்த வழி தெரி யாமல் போய்விடும். வாழ்க்கையின் அவசர கோலத்தில் தமிழனின் மூலிகை வைத்தியத்தை மறந்ததுதான் நம் பிரச்னைகளின் அடிப்படை.

உடலை வலுவாக்க... உணவை மருந்தாக்குங்கள்!

சித்த மருந்து உட்கொண்டால் பத்தியம் இருக்கவேண்டும் என்பதற்காகவே,  பயந்துகொண்டு பலர் சித்த வைத்தியத்தின் பக்கமே வருவது இல்லை. ஆனால், நம் ஆரோக்கியத்தைப் பதப்படுத்தத்தான் பத்தியங்கள்.

தினமும் ஒரு செம்பருத்திப் பூ சாப்பிட்டால் குளிர்ச்சியும் இதயத்துக்குப் பலமும் சேரும். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் செம்பருத்திப் பூ குளிர்பானத்தை அருந்தலாம். அதேபோல் இன்னொரு ஆரோக்கியமான இயற்கை பானம் கொள்ளுச் சாறு. இது ரத்தச் சோகையைத் தீர்க்கவும் பெருத்த உடல் சிறுக்கவும் உதவுகிறது. மேலும் கிட்னியில் உள்ள கல்லைக் கரைக்கும் வலிமையும் கொள்ளுச் சாறுக்கு உண்டு. மூலிகைகள் என்றவுடன் முகம் சுளிக்கத் தேவையில்லை. கற்றாழை, நெல்லிக்காய், செம்பருத்தி என்று நாம் நன்கு அறிந்த பொருட்களையே தொடர்ச்சியாக உட்கொண்டால் நல்லது.

ஆங்கில மருந்துகள் நோய்களை உடனடியாகத் தீர்க்கும்தான். ஆனால், நம் சித்த மருந்துகளோ நோயை எப்போதும் வராமல் காக்கும்!'' என்கிறார் குருநாதன். 

  • பச்சை மிளகாய், மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களைத் துளி எண்ணெய் இல்லாமல் தயாரிக்கிறார்கள்!
     
  • இயற்கையாக விளையும் பொருள்களைக்கொண்டு கற்றாழை ஜாம், செம்பருத்தி ஜாம், நெல்லிக்காய் தேன் சிரப், ஆடாதொடை துளசி சிரப் ஆகியவற்றை இவர்கள் தயாரிக்கிறார்கள்!

-க.பூபாலன்
படங்கள்: எஸ்.தேவராஜன்