Published:Updated:

இது அன்புத் திருமணம்!

இது அன்புத் திருமணம்!

##~##

'சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து வாழ்த்த வேண்டும்’ என்ற திருமண அழைப்பிதழ்களைப் பார்த்திருப்போம். ஆனால், சுற்றங்கள் எதுவுமற்ற, ஆதரவற்ற குழந்தைகளைச் சுற்றமும் நட்புமாக நினைத்து அழைத்து மகிழ்ந்த ஆச்சர்யத் திருமணம் அது! 

இது அன்புத் திருமணம்!

சென்னையில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணிபுரியும் சாந்திக்கும் அமெரிக இன்ஜினீயர் ராம்குமாருக்கும் திருவண்ணாமலை கணேஷ் மகாலில் திருமணம். சாந்தியிடம் பேசினேன்.

''பொதுவாக நமது விசேஷ நிகழ்ச்சிகளில் மீந்துபோன உணவை ஆதரவற்றோர் இல்லங்களுக்குக் கொடுப்பதும், திருமண நாள் அன்றோ பிறந்த நாள் அன்றோ அந்தக் குழந்தைகளுக்கு ஒருவேளை உணவு அளிப்பதும் வழக்கம். ஆனால், இவை எல்லாம் நமக்கு ஆத்ம திருப்தியை அளிக்குமே தவிர, அந்தக் குழந்தைகளுக்கு மனநிறைவு அளிக்குமா? என்று நாம் கவலைப்பட்டது இல்லை. ஆனால், சொந்தங்களோடு சொந்தங்களாக அவர்களையும் அழைத்துவந்து திருமண விழாவை நடத்தினால், நன்றாக இருக்குமே என்று எனக்குத் தோன்றியது.

இது அன்புத் திருமணம்!

'ஆடம்பரத் திருமணம் நடத்துவதைவிட, இப்படி ஒரு அன்புத் திருமணம் நடத்தலாம்’ என்று அப்பாவிடம் சொன்னதும் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டார். காருண்யா இல்லத்துக்குச் சென்று அந்தக் குழந்தைகளுக்கு அழைப்பிதழ் வைத்தேன். அவர்களும் இரண்டு நாட்கள் வந்திருந்து எங்கள் உறவினர்களோடு இயல்பாகப் பழகினார்கள். திருமணம் முடிந்ததும் அவர்களுக்கும் தாம்பூலப் பை கொடுத்து வழி அனுப்பினோம். எனது உறவினர்களின் எண்ணிக்கை இப்போது ஏகத்துக்கும் அதிகரித்து இருக்கிறது. 'யு ஹாவ் டன் எ எக்சலன்ட் ஜாப்!’ என்று 'அவரும்’ பாராட்டினார்!'' திருமண பூரிப்பையும் தாண்டி சந்தோஷம் மிளிர்கிறது சாந்தியின் முகத்தில்!

- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு