Published:Updated:

''ஸ்கர்ட் அண்டு கிராப் என் ஃபேவரைட்!'' - 'ஈரமான ரோஜாவே' பவித்ராவின் ஃபேஷன் பக்கங்கள்

வெ.வித்யா காயத்ரி
''ஸ்கர்ட் அண்டு கிராப் என் ஃபேவரைட்!'' - 'ஈரமான ரோஜாவே' பவித்ராவின் ஃபேஷன் பக்கங்கள்
''ஸ்கர்ட் அண்டு கிராப் என் ஃபேவரைட்!'' - 'ஈரமான ரோஜாவே' பவித்ராவின் ஃபேஷன் பக்கங்கள்

விஜய் டிவியின் 'ஈரமான ரோஜாவே' சீரியலில் நாயகியாக நடிப்பவர், பவித்ரா. இன்ஸ்டாகிராமில் இவருடைய ஃபேஷன் பக்கங்கள் அசரவைக்கும். அவரிடம் சில டிப்ஸைக் கேட்க, ''என்னுடைய லைஃப்ல ஃபேஷன் ரொம்பவே முக்கியம். முதலில், நம்மளுடைய தோற்றம்தான் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். ஃபேஷன் இல்லாத லைஃப்பை நினைச்சும் பார்க்கமுடியலை'' எனப் புன்னகையுடன் தொடங்குகிறார் பவித்ரா.

ஃபேவரைட் காஸ்டியூம் :

எனக்குச் சேலை கம்பர்ஃடபிள் கிடையாது. சேலை கட்டினால் ரொம்ப கவனமா நடக்கவேண்டியிருக்கும். எனவே, ஆல்டைம் ஃபேவரைட் ஸ்கர்ட் அண்டு டாப்ஸ். கிராப் டாப்பாக இருந்தாலும் போடுவேன். அது தவிர்த்து, ஜீன்ஸ் அண்டு டாப்ஸ், குர்தா போடுவேன்.

சீரியல் காஸ்டியூம் :

சீரியலில் இதுக்கு முன்னாடி வரை சல்வார், சேலை என மாறி மாறி போட்டுட்டிருந்தேன். இப்போ சேலையே காஸ்டியூமா ஆகிருச்சு. பக்கா ஹோம்பி லுக் என்பதால், ரெண்டு, மூணு செயின், பெரிய கம்மல்னு போடுவேன்.

ஜாக்கெட் தேர்வு :

நார்மலா சேலைக்கு ஏற்ற ஜாக்கெட் செலக்ட் பண்ணுவேன். போட் நெக், ஸ்லீவ்லெஸ் நெக் பிடிக்கும். சேலை முழுக்க டிசைன் இருந்தால், சாதாரணமா பிளவுஸ் ஸ்டிட்ச் பண்ணிப்பேன். பிளைன் சேலைக்கு, ஹெவி ஒர்க் பண்ணி, பிளவுஸ் டிசைன் பண்ணிப்பேன். மேக்ஸிமம் சேலைக்கும், ஜாக்கெட்டுக்கும் மிஸ்மேட்ச் ஆகுற மாதிரியே செலக்ட் பண்ணுவேன். இப்போ, இதுதான் டிரெண்ட்.

அக்ஸசரீஸ் தேர்வு :

சேலை கட்டினால், ஜிமிக்கி, குந்தன் செட் போன்ற டிரடிஷனல் அக்ஸசரீஸைத் தேர்ந்தெடுப்பேன். லெஹங்கா, குர்தா மாதிரியான உடைகளுக்கு, நெக் பீஸ் போடமாட்டேன். மேக்ஸிமம் பெரிய கம்மல் போட்டால், நெக் பீஸ் அவாய்டு பண்ணிடுவேன். சின்ன கம்மலாக இருந்தால், பெரிய சோக்கர் போடுவேன். அது நல்ல லுக் கொடுக்கும். குர்தா, லெஹங்கா போடும்போது, ஒரு கை முழுக்க வளையலும் இன்னொரு கையில் ரிங் மட்டும் போட்டுப்பேன்.

ஷாப்பிங் தேர்வு :

மேக்ஸிமம் எந்த இடத்தில் பார்க்கிறேனோ அங்கே வாங்கிடுவேன். அக்ஸசரீஸைப் பொறுத்தவரை, சின்ன கடை, பெரிய கடை எனப் பார்க்கறதில்லை. எனக்குப் பிடிச்சிருந்தா வாங்கிடுவேன். பெங்களூரில் நிறைய கலெக்‌ஷன்ஸ் கிடைக்கும். இது தவிர்த்து, அதிகமா ஆன்லைனில் ஷாப்பிங் பண்ணுவேன்.

வார்ட்ரோப் கலெக்‌ஷன் :

சீரியலுக்காக அதிகமாகச் சேலையே வாங்கறேன். காட்டன், சிந்தடிக்னு எல்லா வெரைட்டியும் வைச்சிருக்கேன்.

பவித்ராவுக்கு சில ஆடைகளை பிரத்யேகமாக டிசைன் செய்துகொடுக்கும் 'யோஷ்னாஸ் பொட்டிக்' உரிமையாளர், இலவஞ்சி. அவரிடம் பேசினோம்.

பழைய காலத்திலிருந்தே தங்களுக்குத் தேவையான டிசைனில் அவங்களே ஸ்டிட்ச் பண்ணி போட்டுக்கும் வழக்கம் பலரிடம் இருந்துச்சு. ராயல் ஃபேமிலியைச் சேர்ந்தவங்க, இதுக்காகவே ஒரு டீம் வெச்சு அவங்க மூலமா தேவையான டிசைன்களை தைத்துப் போட்டுப்பாங்க. அப்போவெல்லாம் காட்டன் ஆடைகளே நம் ஊரில் ஃபேமஸாக இருந்துச்சு. வெவ்வேறு நாடுகள் பகுதிகளிலிருந்து படையெடுத்து வந்தவங்க அறிமுகப்படுத்தியதுதான் சில்க், சில்க் திரெட் போன்றவை.

பெண்களுக்கும் அழகா இருக்கணும் என்கிற எண்ணம் இயல்பாகவே இருக்கும். மீடியாவில் உள்ளவங்க, இன்னும் வித்தியாசமான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பாங்க. அவங்களைப் பார்த்துதான் பலரும் ஃபாலோ பண்ணுவாங்க. முன்னாடி சினிமா நாயகிகளுக்கு இருந்த முக்கியத்துவம், இப்போ சின்னத்திரை நாயகிகளுக்குமமிருக்கு. டிவியில் வர்றவங்களை ரோல் மாடலா நிறைய பேர் ஃபாலோ பண்றாங்க. பவித்ராவுக்கு  சீரியலுக்காக சேலை மட்டும் டிசைன் பண்ணிக்கொடுக்கிறேன். அதைத் தவிர்த்து, லெஹங்கா, குர்தா போன்றவற்றை பர்சனலுக்காக ஸ்டிட்ச் பண்ணுவேன். அவங்க ஹைட்டா இருந்தாலும், ரொம்ப பிட்டா உடம்பை மெயின்டெய்ன் பண்றாங்க. அவங்களுக்கு அனார்கலி சூப்பரா சூட் ஆகும். கொஞ்சம் ஹேம்லி லுக்கில் தெரிவாங்க. ரொம்ப கிளாமரா இல்லாத மாதிரி டிரெஸ் பண்ணினால், இன்னும் அழகா இருக்கும்'' என்கிறார்.