Published:Updated:

"கட்டை வண்டி நடையழகி... கடுகுத் துண்டு இடையழகி!"

"கட்டை வண்டி நடையழகி... கடுகுத் துண்டு இடையழகி!"

"கட்டை வண்டி நடையழகி... கடுகுத் துண்டு இடையழகி!"

"கட்டை வண்டி நடையழகி... கடுகுத் துண்டு இடையழகி!"

Published:Updated:

'டைம் மெஷின்’ மூலம் அப்படியே 50 வருடத்துக்குப் பின்னால் பயணித்து மதுரை வீதிகளில் உலா வந்தால் எப்படி இருக்கும்? அன்று அப்படி இருந்தது மதுரை காந்தி மியூசிய மைதானம்! கொசுவம் வைத்த கண்டாங்கி சேலை கட்டி பெண்கள் நடமாட, முண்டாசும் கோவணமுமாக ஆண்கள் மேல் சட்டை இல்லாமல் நடந்துகொண்டு இருந்தார்கள். கிராமிய அழகுத் திருவிழாவில்தான் இந்த அலப்பறை!

"கட்டை வண்டி நடையழகி... கடுகுத் துண்டு இடையழகி!"
##~##

67 வயது ஆன அழகு சேர்வை என்கிற விவசாயி ஒரு தோளில் கலப்பை, மற்றொரு தோளில் நோக்கால்(நுகத்தடி), மண்வெட்டி, தூக்குச்சட்டி கஞ்சி என்று, சுமார் 60 கிலோ எடையைச் சுமந்து வந்து ஆச்சர்யம் கொடுத்தார். தனிப்பாடல் போட்டியில் பலர் திருவிழாப் பாடல்களைப் பாட, சில சீனியர் சிட்டிசன்களோ இளமை ரசம் சொட்டும் கிராமத்துக் காதல் பாடல்கள் பாடி, பரவசம் ஊட்டினார்கள். 'கட்டைவண்டி நடையழகி, கடுகுத் துண்டு இடையழகி...’, 'வயக்காட்டு வரப்பு மேல போற பொண்ணே... வாலிபன் நானும் வாரேன் கொஞ்சம் நில்லேன்...’ என்பது எல்லாம் உதாரணங்கள்தான்!

திண்டுக்கல் மாவட்ட முத்துலிங்கபுரத்தைச் சேர்ந்த பெரியவர் முனியாண்டி, 'அங்கே இடி முழங்குது’ பாடல் மெட்டில் விளைநிலங்கள் வீட்டுமனை ஆகி வருவதைப் பற்றிப் பாடியபோது, நிஜமாகவே மழை வந்துவிட்டது.

எருமார்பட்டி கிராமத்தில் இருந்து வந்திருந்த பரமசிவம் குழுவினர், சாமி ஆட்டத்தை மேடையில் அரங்கேற்றியபோது, சில பெண்கள் அருள் வந்து ஆடித் தீர்த்தார்கள். பொட்டல்பட்டி இளைஞர் ஜெயபிரகாசம், தான் ஆடாமல் தன் தசைகளை மட்டும் ஆட்டி 'கிராமத்து பெல்லி டான்ஸ்’ காட்டினார்.

ஆண்கள் அழகுப் போட்டியைவிட, பெண்கள் போட்டியில் அதிக சுவாரஸ்யம். அழகாகத் தெரியவேண்டும் என்று ஓவர்லோட் மேக்-அப்பில் வந்திருந்தார்கள் பாட்டிகள். ''மாமோய் நான்... கம்மஞ்சோறு கொண்டுவந்திருக்கேன். சாப்பிட வர்றீகளா?'' என்று ஒரு பாட்டி இழுக்க, பார்வையாளர்களிடம் இருந்து 'நான் வாரேன்...’, 'நான் வாரேன்...’ என்று ஏக ரெஸ்பான்ஸ். கண்டாங்கிச் சேலை, தண்டட்டி, வாயில் வெற்றிலைக்கறையுடன் அசல் பாட்டி போலவே வந்த கல்லூரி மாணவி அம்பிகா, நகைச்சுவையாகப் பேசி கலகலக்கவைத்தார்.

"கட்டை வண்டி நடையழகி... கடுகுத் துண்டு இடையழகி!"

சந்திரா, ஜெயமேரி, சரசு ஆகியோர் கிராமத்துப் பூக்களைச் சூடிக்கொண்டு 'கேட் வாக்’கியபோது, மேடை முழுக்க செவ்வந்தி, பச்சைமல்லி, மரிக்கொழுந்து வாசம். விழாவில் ஒட்டுமொத்தப் பெண்களையும் ஆச்சர்யப்படுத்தியவர், 70 வயது பாட்டி முத்தாபரணம்தான். அழகுப் போட்டியில் தன் கணவர் அருள்சாமியோடு கைகோத்து வந்த இவர், கிராமிய நடனப் பிரிவில் கரகாட்டம் ஆடியபோது அசந்துவிட்டார்கள் பார்வையாளர்கள். மூட்டு வலி முடக்கும் வயதில், அவர் துள்ளித் துள்ளி ஆடியது அட்றாசக்கை அப்ளாஸ் அள்ளியது! ''எப்படி இந்த வயதில் டான்ஸ் ஆட முடியுது?'' என்று ஒருவர் கேட்க, ''கம்பு, சோளம்னு கிராமத்துச் சாப்பாடு சாப்பிடுய்யா... பலம் தானா வரும்!'' என்றார் முத்தாபரணம்.

"கட்டை வண்டி நடையழகி... கடுகுத் துண்டு இடையழகி!"

இந்தக் குதூகலக் குறும்புகளை மதுரை கலெக்டர் சகாயம் தன் மனைவி, குழந்தைகளோடு கடைசிவரை பார்த்து ரசித்ததோடு சிறந்த போட்டியாளர்களை மேடையிலேயே பாராட்டவும் செய்தார்.

''மதுரை மாவட்ட மக்களுக்காக நடத்தப்பட்ட இந்தப் போட்டியில், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் ஆர்வமாகப் பலர் கலந்துகொண்டு இருப்பதால், பொங்கல் திருநாள் சமயத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டு இருக்கிறார்!'' என்று நல்ல செய்தி சொன்னார் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயசிங் ஞானதுரை.

"கட்டை வண்டி நடையழகி... கடுகுத் துண்டு இடையழகி!"

ஆகவே, மதுரை மக்களே... அந்த விழாவை தவறவிட்டுறாதீங்க!

  • அமைச்சர் செல்லூர் ராஜு பையில் எப்போதும் ஜெயலலிதா படமும் கோயில் திருநீறும் வைத்திருக்கிறார். அவருடைய காரில் எப்போதும் ஜாதகம் இருக்கும். அடிக்கடி கேரள பணிக்கர்களைச் சந்தித்துப் பரிகாரம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். என்ன பிரச்னையோ?

- கே.கே.மகேஷ்
படங்கள்: பா.காளிமுத்து