Published:Updated:

ஒரு கோடி ரூபாய் செலவில் நாய் பூங்கா..! - குவியும் பாராட்டுகளும் விமர்சனங்களும்

ஒரு கோடி ரூபாய் செலவில் நாய் பூங்கா..! -  குவியும் பாராட்டுகளும் விமர்சனங்களும்
News
ஒரு கோடி ரூபாய் செலவில் நாய் பூங்கா..! - குவியும் பாராட்டுகளும் விமர்சனங்களும்

ஒரு கோடி ரூபாய் செலவில் நாய் பூங்கா..! - குவியும் பாராட்டுகளும் விமர்சனங்களும்

இந்தியாவில் முதல்முறையாக, நாய்களுக்கு என்று பிரத்யேகப் பூங்கா ஹைதராபாத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.


 

தெலங்கானா மாவட்டம் கொண்டாபூர் என்னும் பகுதியில், 1.3 ஏக்கரில் நாய்களுக்கான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்னர், அந்த இடத்தில்  குப்பைக்கிடங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பூங்கா, ஹைதராபாத் மாநகராட்சியால் 1 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. 

நாய்கள் விளையாடுவதற்கான நீச்சல் குளம், புல்வெளி, கஃபே என சகல வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் கருவிகள் பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன.  அதற்கெனத் தனிப் பயிற்சியாளரும்  அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளார். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz


 

நாய்களுக்கென பிரத்யேகப் பூங்கா அமைக்க வேண்டும் என்ற இத்திட்டத்தை முதலில் முன்னெடுத்தது, ஹைதராபாத் மாநகராட்சியின் மண்டல ஆணையாளர் டி.ஹரிச்சந்தனா தான். இதுகுறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஹரிச்சந்தனா, ‘இந்தியாவில் முதல் பிரத்யேக மற்றும் சான்றளிக்கப்பட்ட நாய்களுக்கான பூங்கா இதுதான். எனக்கு நாய்கள் என்றால் கொள்ளப் பிரியம். வெளிநாடுகளுக்கு நான் சென்றபோது, நாய்களுக்கென தனிப் பூங்கா இருப்பதைப் பார்த்துள்ளேன். நம் நாட்டில் ஏன் இப்படி எதுவும் இல்லை என்று எனக்கு தோன்றியது. அதன் விளைவாகவே, தற்போது சர்வதேச தரத்தில்  இப்படியொரு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக நாங்கள் பல்வேறு வலுநர்களிடம் ஆலோசனை பெற்றோம். செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு இந்தப் பூங்கா மகிழ்ச்சியைக்கொடுக்கும். இப்போது, நாய்களுக்காக மட்டுமே இந்தப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. பூனைகளுக்கென்று தனி இடம் இந்தப் பூங்காவினுள் ஒதுக்கப்படலாம். இன்னும் 10 நாள்களில் இந்தப் பூங்கா செயல்பாட்டுக்கு வரும்’ என்றார்.


 

நாய்களுக்கு பிரத்யேகப் பூங்கா அமைத்த ஹைதராபாத் மாநகராட்சிக்குப் பாராட்டுகள் குவிகின்றன. அதே சமயம், இணையத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த நெட்டிஸன்கள் சிலர், ‘இங்கு பலருக்கு வசிப்பிடம்கூட இல்லாமல் சாலையின் ஓரத்தில் உண்டு உறங்குகின்றனர். நாய்களுக்கென்று ஒரு கோடி ரூபாய் செலவில் இந்தப் பூங்கா தேவையா?’ என்று விமர்சித்து வருகின்றனர். மேலும் சிலர்,  ‘விலை உயர்ந்த செல்லப் பிராணிகளை வாங்கி வளர்ப்போருக்குதான் இந்தப் பூங்கா உபயோமாக இருக்கும். மற்றபடி இது தேவையில்லாத செலவுதான்’ என்றும் விமர்சித்துள்ளனர்.