ஒரு புக்

ஆசிரியர் : எரின் என்டிரடா கெல்லி. (32 பக்கங்கள், 8-12 வயது சுட்டிகளுக்கு.)

ஹாலோ, பிரபஞ்சமே

எதிர்பாராத நட்புகள், கொஞ்சம் அன்பு, நிறைய சாகசம் இதுதான் இந்த ஹலோ, யுனிவெர்ஸ் (ஹலோ, பிரபஞ்சமே) புத்தகம். ஒருவரின் பலவீனத்தை வைத்துக் கேலி, கிண்டல் செய்வது, அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குவது, பள்ளிப் பருவத்தில் அவ்வப்போது நடக்கும் ஒரு தவறான நிகழ்வு. அதனால் நிகழும் விபரீதங்கள், அதைச் சரிசெய்ய நடக்கும் போராட்டம், நட்பின் வெற்றி, இதுதான் இந்தப் புத்தகம் சொல்லும் கதையின் சாராம்சம். இரண்டு சிறுவர்கள், இரண்டு சிறுமிகள் என நான்கு கோணத்தில் பயணிக்கும் கதை ஒருகோட்டில் இணைந்து, சுவாரஸ்ய சாகசக் கதையாக விரிகிறது.

ஒருவன் கூச்ச சுபாவம் உடையவன், இரக்க குணம் கொண்டவன், ஒரு சிறுமி மாற்றுத்திறனாளி. கேட்கும் திறன் சற்றுக் குறைவு. ஆனால், புத்திசாலி, மிகவும் தைரியமானவள். மற்றொரு சிறுமி வித்தியாசமான மன ஆற்றல் கொண்டவள். அவளின் குட்டித் தங்கை எப்போதும் அவளைப் பின்தொடர்வாள். மற்றொருவன் கூடைப்பந்தாட்டப் பிரியன். அவன் செய்யும் ஒரு செயல், கூச்ச சுபாவம் உடையவனையும் அவன் வளர்ப்புப் பன்றியையும் ஒரு மிகப்பெரிய ஆபத்தில் மாட்டிவிடுகிறது. இதிலிருந்து அவர்கள் மீள நம் குட்டீஸ் படை உதவுகிறது. அவர்களுக்கு இந்தப் பிரபஞ்சமும் எதிர்பாராத வகையில் உதவுகிறது. எளிய ஆங்கில நடையில், சுட்டீஸ் படிக்கும் வகையில் எழுதப்பட்டிருப்பது சிறப்பு.

ஒரு கேட்ஜெட்

டிஸ்னி டேப்லெட்!

டிராகன் டச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த டேப்லெட் PC யின் சிறப்பம்சமே இது முழுக்க முழுக்கக் குழந்தைகளுக்கு என்றே தயாரிக்கப்பட்ட ஒன்று என்பதுதான். 7 அங்குலத் திரை, 1 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ், 1024x600 ஸ்க்ரீன் ரெசல்யூஷன், 2 மெகாபிக்ஸல் வெப்கேமரா என்று அசத்தல் வசதிகளுடன்வருகிறது. குழந்தைகள் பயன்படுத்துவதற்காக என்றே 50 கிராம் எடையுடன், சிலிக்கான் பாதுகாப்பு கேசிங்குடன் கிடைக்கிறது. ‘Kidoz’ என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கான இயங்குதளம் ஒன்றின் உதவியுடன் செயல்படும் இது, அவர்களுக்கான விஷயங்களை மட்டுமே காட்டும். டிஸ்னி வெர்ஷனாகக் கடந்த நவம்பர் மாதம் வெளிவந்த இந்த கேட்ஜெட்டில் டிஸ்னியின் 20 கதை புத்தகங்களும், 10 ஆடியோ புத்தகங்களும், 3 கல்வி தொடர்பான ஆப்களும் இலவசமாகப் பதிவேற்றப்பட்டுள்ளன. 12 வயதைத் தாண்டிய குழந்தைகளுக்குச் சிறந்த பிறந்தநாள் பரிசு இது.

ஒரு படம்

ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடாய்

‘ஸ்டார் வார்ஸ்’ படத் தொடர் என்றாலே விண்வெளி சாகசங்களுக்குப் பஞ்சமிருக்காது. இதுவரை ஸ்டார் வார்ஸ் உலகை வைத்து வந்த படங்களில் தனிக்கதைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது அந்த உலகின் எட்டாவது படம். 1999-2005 காலகட்டத்தில், இந்தப் படங்களுக்கு முன்னர் நடந்த கதையைக் கூறுகிறேன் என்று ஒரு மூன்று படங்கள் எடுத்தனர். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், முதல் மூன்று படங்களைப்போல இல்லை என்று ஸ்டார் வார்ஸ் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர். வளர்ந்துவிட்ட அந்த சுட்டீஸ்களைத் திருப்திப்படுத்தவே, தற்போது 2015 முதல் ஸ்டார் வார்ஸ் உலகத்தை மீண்டும் தூசுதட்டி வருகிறார்கள்.

ஸ்டார் வார்ஸ்: தி லாஸ்ட் ஜெடாய் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் இந்தப் படம், பழைய ஸ்டார் வார்ஸ் நடிகர்கள் இல்லாவிட்டாலும், இளைஞர் படைகொண்டு வெற்றிபெற முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். ஜெடாய் சாகசங்கள், அசத்தும் கிராஃபிக்ஸில், அதுவும் 3டியில் அரங்கேறும் அந்த விண்வெளி சாகசங்கள், யுத்தக் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. பார்க்க வேண்டிய படம்!

ஒரு கேம்

கரடியுடன் விளையாட்டு..!

“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது, காட்டுயிர்களைக் காப்பது போன்ற சமூக அக்கறைகொண்ட விஷயங்கள், நம்மைப் போன்ற மனிதர்களின் கடமை அல்லவா?” என்று விளையாட்டாகவும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு, சுவாரஸ்யமாகவும் கேள்வி எழுப்புகிறது இந்த கேம் ஆப். பனிக்கரடி ஒன்றை விளையாடும் குழந்தைக்குத் தத்துக் கொடுத்துவிடுவார்கள். அந்த உலகில் ஆங்காங்கே உலாவும்போது, கரடியின் உயிரைக் காக்க, சிறந்த செயல்களான தண்ணீரைச் சேமிப்பது, மின்சாரத்தைச் சேமிப்பது, மரங்கள், செடிகளைக் காப்பது போன்றவற்றைச் செய்யவேண்டும். உங்கள் தம்பி, தங்கைகளுக்குச் சிறுவயதிலேயே சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையைப் பேண வேண்டும் போன்ற பாடங்களைக் கற்றுத் தர இது எளிய வழியாக இருக்கும்.