பொருளாதார நெருக்கடி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும், வாகன விற்பனையில் பாதிப்பு ஏற்படுகிறது என்று அவ்வளவு எளிதாகக் கூறிவிட முடியாது. அதற்குத் தகுந்தார்ப்போல வாடிக்கையாளர்களும் இருசக்கர வாகனங்களை வாங்காமல் இல்லை.
ஆகஸ்ட் மாதம் அதிகமாக விற்பனையான டாப் 10 டூ வீலர்களின் பட்டியலில் ஹோண்டாவின் ஆக்டிவாதான் முன்னிலையில் உள்ளது. கடந்த மூன்று மாதங்களாகவே விற்பனையில் முன்னிலையில் இருப்பதும் ஆக்டிவாதான். இந்த மாதம், மொத்தம் 3,10,851 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த மாதம் 2,86,380 என இருந்த எண்ணிக்கை இந்த மாதம் அதிகரித்துள்ளது. அடுத்தபடியாக, ஹீரோ ஸ்ப்ளெண்டர். HF டீலக்ஸ், ஹோண்டா சிபி ஷைன், ஹீரோ பேஷன், பஜாஜ் சிடி 100, ஹீரோ கிளாமர், பஜாஜ் பல்சர் ஆகியன உள்ளன. டாப் 10-ல் டிவிஎஸ்ஸின் XL சூப்பர் மற்றும் ஜூபிட்டர் ஸ்கூட்டரும் உள்ளன.
இதில், கடந்த மாதம் 86,160 டூ வீலர்கள் மட்டுமே, விற்பனையான ஹோண்டா சிபி ஷைன் மாடலில், இந்த மாதம் 1,08,790 டூ வீலர்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆகஸ்ட் மாதம் விற்பனையான டாப் 10 டூ-வீலர்கள்!
மாடல் | யூனிட் |
---|---|
ஹோண்டா ஆக்டிவா | 3,10,851 |
ஹீரோ ஸ்ப்ளெண்டர் | 2,47,116 |
ஹீரோ HF டீலக்ஸ் | 1,83,716 |
ஹோண்டா சிபி ஷைன் | 1,08,790 |
ஹீரோ பேஷன் | 82,681 |
பஜாஜ் சிடி 100 | 82,424 |
டிவிஎஸ் ஜூபிட்டர் | 79,223 |
ஹீரோ கிளாமர் | 74,097 |
டிவிஎஸ் XL சூப்பர் | 70,883 |
பஜாஜ் பல்சர் | 70,051 |