Published:Updated:

கோயில் யானைகள் வழக்கு! - இந்து அறநிலையத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

கோயில் யானைகள் வழக்கு! - இந்து அறநிலையத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
கோயில் யானைகள் வழக்கு! - இந்து அறநிலையத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

யானைகளை வனப்பகுதியில் இருந்து கோயில் உள்ளிட்ட பிற பகுதிகளுக்குக் கொண்டுசெல்லக் கூடாது எனக் கோரிய வழக்கில், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் விரிவான பதில்மனு தாக்கல்செய்ய மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆண்டனி என்பவர் தாக்கல்செய்த மனுவில், " சமயபுரம்  கோயிலில் மசினி என்ற 9 வயது குட்டி யானையைப்  பாகன் கஜேந்திரன் பராமரித்துவந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யானைப்பாகன் கஜேந்திரனை திடீரென தூக்கி வீசி மிதித்துக்கொன்றது. அந்த யானை, திருச்சி வனப்பகுதியில் இருந்த யானை, அதுவும் குறிப்பிட்ட சில மாதங்களில்தான் கொண்டுவரப்பட்டது. காட்டில் வளர்ந்த யானையை கோயிலுக்குக் கொண்டுவரவும்தான், அதற்கு திடீரென்று கோபம் ஏற்பட்டு பாகனைக் கொன்றது. மேலும், பல பக்தர்களையும் காயப்படுத்தியது .

எனவே, யானைகளை வனப்பகுதியில் இருந்து பிரிப்பதால் மதம் பிடிக்கிறது. எனவே, யானைகளை வனப்பகுதி தவிர மற்ற இடங்களுக்குக் கொண்டுசெல்ல தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் விரிவான பதில் மனுவைத் தாக்கல்செய்ய உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.