Published:Updated:

`ஏவுகணை தளங்களை மூடுவதாக கிம் ஜாங் சொல்லிவிட்டார்'- தென்கொரிய அதிபர் மகிழ்ச்சி

`ஏவுகணை தளங்களை மூடுவதாக கிம் ஜாங் சொல்லிவிட்டார்'- தென்கொரிய அதிபர் மகிழ்ச்சி
`ஏவுகணை தளங்களை மூடுவதாக கிம் ஜாங் சொல்லிவிட்டார்'- தென்கொரிய அதிபர் மகிழ்ச்சி

வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வடகொரியாவில் உள்ள முக்கிய ஏவுகணைச் சோதனை தளங்கள் மற்றும் ஏவுதளங்களை மூட தென்கொரிய அதிபர் மூன் இன் சம்மதம் தெரிவித்துள்ளார். 

வடகொரியாவும் தென்கொரியாவும் இடையே அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கடும் பகை இருந்து வருகிறது. இருநாடுகளுக்கிடையே நடைபெற்றுவரும் தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து இருநாடுகளுக்கிடையே சுமுகமான முடிவுகள் எட்டப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து தென்கொரியாவில் பியாங்சாங் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்று தென்கொரியாவின் நட்பைப் பலப்படுத்தத் தொடங்கியது. மேலும், வடகொரிய அதிபர் கிம் ஐாங் அன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஸே இன்னும் இருநாட்டு எல்லையில் உள்ள கிராமம் ஒன்றில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தச் சந்திப்பு இருவருக்கும் இடையே இணக்கமான முறையில் நடந்தது. வடகொரியா வட கொரியத் தலைவர் கிம் ஜாங் அன்னும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினார்கள். இந்த நிலையில், வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னுடன் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் இருநாடுகளுக்கிடையே பல்வேறு உடன்படிக்கைகள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகளுக்குப் பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், ‘தாங்சாங்-ரி ஏவுகணைப் பரிசோதனைத் தளம் மற்றும் ஏவுகணைத் தளத்தை நிரந்தரமாக மூட வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். இதை இருநாட்டு வல்லுநர்கள் முன்னிலையில் செயல்படுத்துவதாகவும் கிம் ஒப்புக்கொண்டுள்ளார்’ எனத் தெரிவித்துள்ளார்.