Published:Updated:

''பிறருக்காக செய்வதுதான் பிரார்த்தனை!'' - ஏ.வி.எம்.சரவணன்

''பிறருக்காக செய்வதுதான் பிரார்த்தனை!'' - ஏ.வி.எம்.சரவணன்

''பிறருக்காக செய்வதுதான் பிரார்த்தனை!'' - ஏ.வி.எம்.சரவணன்

''பிறருக்காக செய்வதுதான் பிரார்த்தனை!'' - ஏ.வி.எம்.சரவணன்

Published:Updated:
''பிறருக்காக செய்வதுதான் பிரார்த்தனை!'' - ஏ.வி.எம்.சரவணன்
##~##

''விகடனின் தாரக மந்திரமே 'எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே’ என்கிற தாயுமானவரின் வரிகள்தான்! என் வாழ்நாளில் நான் கடைப்பிடிக்கும் ஆரோக்கிய மந்திரமும் அதுதான்!'' - சிரித்தபடியே பேச ஆரம்பிக்கிறார் ஏவி.எம்.சரவணன்.

 ''விடிந்தும் விடியாத பனி மூடிய அதிகாலைப் பொழுதில் எழுவது என் வழக்கம். அதாவது 3.30 மணிக்கு... சீக்கிரமே எழுவது சிரமமானதுதான்; ஆனால், ஒரு வாரம் போராடி அப்படி எழுந்து பாருங்கள்... அதன் பிறகு நீங்களே தூங்க நினைத் தாலும் அதிகாலை உங்களை எழுப்பிவிடும். விழித்தெழுந்ததும், நான் செய்யும் முதல் வேலை... என்னிடம் தங்கள் குறைகளையும், வேதனைகளையும் பகிர்ந்துகொள்பவர்களை நினைத்துப் பார்த்து, அவர்களுக்காக ஒரு நிமிடம் கண்மூடி கடவுளைத் தியானிப்பதுதான். காலைக் கடன்களை முடித்துவிட்டு, காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு,  தெலுங்கு சேனல் ஒன்றில் மூழ்கிவிடு வேன். அதில், தினந்தோறும் அற்புதமாய் ஒளிரும் ஸ்ரீஷீர்டியின் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் அன்றைய நாள் முழுவதும் என்னை மலர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகின்றன. மனத்தை ஒருநிலைப் படுத்தும் இந்த நிகழ்ச்சி தியானத்துக்கு நிகரான உணர்வை ஏற்படுத்தும். இறைவனிடம் நான் வேண்டுவது, உட னடியாக நடந்துவிடுவதை எண்ணி பலமுறை பிரமித்திருக்கிறேன். நமக்காக வேண்டுவதைக் காட்டிலும் பிறருக்காக பிரார்த்தனை செய்யும்போது, ஆத்ம திருப்தியை நிச்சயம் உணரமுடியும். அதற்கான பலனையும் ஆண்டவன் அருளுவான்!'' - நெஞ்சம் தொட்டுச் சொல்கிறார் ஏவி.எம்.சரவணன்.

''உண்ணும் உணவில் கட்டுப்பாட் டைக் கடைப்பிடிப்பவன் நான். 'ஏற்ற மிகு வாழ்க்கைக்கு நாக்கே பிரதானம்’ என்பார்கள். ஒரு மனிதனை வாழ்க்கை யின் உயரத்துக்குக் கொண்டு செல்ல வும், அதல பாதாளத்துக்குத் தள்ளிவிட வும், ஆரோக்கியமாகவும், நோயாளியாக வும் ஆக்கவும் நாக்கால் முடியும்!

மூன்று வேளையும் இட்லி, காய்கறிகள்தான் என் உணவு. 'ஒரே டேஸ்ட் போர் அடிக்கலையா?’ என்பார்கள் சிலர். நான் எப்போதுமே ருசிக்காக சாப்பிடுவது இல்லை. பசிக்காகத்தான் சாப்பிடுகிறேன். ஆரோக்கியத்துக்காக அளவோடு சாப்பிடுகிறேன். எந்தக் கல்யாணத்திலும் சாப்பிடும் பழக்கமும் எனக்கில்லை.

'யாகாவாராயினும் நா காக்க’. நாவைக் கட்டுப்படுத்தினால் போதும். நம் வாழ்க்கையையே காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்ற ஆழமான அர்த்தத்தில்தான் சொல்லி இருக்கிறார் வள்ளுவர். உணவில் மட்டுமல்ல, இனிமையாகப் பேசவும் நாக்கை பழக்கப்படுத்திவிட்டால், அதைவிட பேரின்பம் வேறில்லை.

எனக்கு இப்போது 71 வயதாகிறது. இதுவரை எந்த இடத்திலும் எந்த நிலையிலும் நிதானத்தை இழக்கா தவன் நான். வாயைக் கட்டாவிட்டால் வயிறு கெடு வது போல, நாக்கைக் கட்டாவிட்டால் வாழ்க்கை கெடும் என்பது என் கருத்து. பேசுவதிலும் சரி, உணவு விஷயத்திலும் சரி. நாக்குதான் நமக்கு நண்பன்.

அமெரிக்கா எடுத்த ஒரு சர்வேயில், முன்னணியில் வெற்றிகரமாகத் திகழ்பவர்களில் 70 சதவிகிதத்தின ரின் வெற்றிக்கு, அவர்களின் திறமையைப் போலவே பேச்சுவன்மையும் ஒரு காரணமாம்.

வார்த்தைகள் வைரமாக இருக்கவேண்டும்! பேசும் சொற்களில் சுகம் இருக்கவேண்டுமே தவிர, சூடு இருக்கக்கூடாது. சூடு இருக்கக்கூடாது என்பதற்காகத் தானோ என்னவோ, ஈரமான இடத்தில் நாக்கை வைத்திருக்கிறான் இறைவன். எனக்குத் தெரிந்து பலபேர் தன் இனிய சொல்லாலும், நா வன்மையாலும் வாழ்க்கையில் வெற்றிச் சிகரத்தைத் தொட்டிருக்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்து, வீடுவீடாக நடந்து போய் தபால்களைப் பட்டுவாடா செய்து வந்த கணேசன்,  இன்று வீடுகளைக் கட்டும் 'கான்ட் ராக்ட்’ தொழிலில் முத்திரையைப் பதித்து முன்னணி யில் இருக்கிறார். தபால் போடப் போன இடத்தில் ஒரு பில்டரின் நட்பு, தொழில் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளத் துணைபுரிந்தது.

''பிறருக்காக செய்வதுதான் பிரார்த்தனை!'' - ஏ.வி.எம்.சரவணன்

ஒரு எழுத்து பிசகினாலும் அர்த்தமே மாறிப்போகும். 'கோவலனைக் கொண்டு வா’ என்பதற்குப் பதில் 'கோவலனைக் கொன்று வா’ என்று சொன்னதால் ஏற்பட்ட விளைவுகளால்தான் மதுரையே கண்ணகியால் எரிக்கப்பட்டது என்று ஒரு கருத்து உண்டு. வெற்றிகரமான விளைவுகளைத் தரக்கூடிய நாக்கு விபரீத விளைவுகளையும் தரமுடியும்! 'எவன் ஒருவன் நாவை வெல்லுகிறானோ, அவன் இறப்பை வென்றவன் ஆகிவிடுகிறான்’ என்கிறார் கிருபானந்த வாரியார்.

நம் பேச்சு எப்போதும் ஒருவரை பண்படுத்தவேண்டுமே தவிர, புண்படுத்தக்கூடாது.

என் தந்தை அடிக்கடி, 'நல்ல நட்பு நன்மை பயக்கும். எளிமை ஏகாந்தத்தைத் தரும். நண்பர்கள் அதிகம் இருந் தால், தீமை என்பது நம்மை தீண்டிக்கூடப் பார்க்காது. ஆகவே, நிறைய நண்பர்களை வளர்த்துக் கொள்’ என்று அறிவுரை சொல்வார்.

தொழிலாளி முதல் தொழிலதிபர்கள் வரை எனக்கு இன்றும் ஏராளமான நண்பர்கள் உண்டு. அன்றாடம் சந்திக்கும் மனிதர்களுக்கு என்னால் முடிந்த வரை உதவுவதைக் கடமையாகவே கருதுகிறேன். தினமும் காலையில், என் இனிய நண்பர்களான முரளி, ரகு இருவருடனும் இணைந்து வாக்கிங் செல்வேன்.

அமரர் நாகிரெட்டி, அமரர் எஸ்.எஸ்.வாசன் மற்றும் என் தந்தை அமரர் மெய்யப்பன்... இந்த மூவருமே எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள். இந்த மூவரையும் அருகில் இருந்து பார்த்து வியந்ததன் விளைவால், என்னையும் எளிமை தொற்றிக் கொண்டது. அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் சிலவற்றையும் ஞாபகார்த்தமாய் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். எஸ்.எஸ்.வாசன் பயன்படுத்திய கார் என்னிடம்தான் இருக்கிறது. அதைப் பார்க்கும்போதெல்லாம், கதர் வேஷ்டி- சட்டையில் காரில் கம்பீரமாக அவர் அமர்ந்து வரும் அழகு இன்றைக்கும் என் கண்முன் னால் விரிகிறது.

'மனைவி அமைவது என்பது இறைவன் கொடுத்த வரம்!’ என் மனைவியும் ஆடம்பரத்தை விரும்பாதவள். காதுக்கு தோடு, கைக்கு வளையல், கழுத்துக்கு செயின், வாட்ச் இதுதான் அவளது மொத்த நகைகள். எப்போதும் காட்டன் புடவைதான் கட்டுவாள். நகைகள் சேர்ப்பதிலோ, பட்டாடை உடுத்துவதிலோ ஆர்வமில்லாதவள். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், தூய உள்ளத்துடன், உடுத்தும் உடையிலும் எளிமையைக் கடைப்பிடித்தால், ஆசையும் ஏக்கமும் கிட்டேயே நெருங்காது.

பச்சைக் களிமண்ணாலான குடத்தில் வைக்கப்பட்ட தண்ணீ ரைப் போல ஒவ்வொரு விநாடியும் நம் ஆயுள் குறைந்துகொண்டே போகிறது. நாம் இந்த மண்ணில் இருக்கும் காலம்வரை, சிந்தனை யைச் சிதறவிடாமல், உள்ளும் புறமும் தூய பக்தியோடு தினமும் இறைவனை வழிபட்டால், வாழ்வு இனிக்கும்; வளம் பெருகும்!'' - மெலிதான புன்னகையுடன் முடிக்கிறார்.

               - ரேவதி
படங்கள்: பொன்.காசிராஜன்