Published:Updated:

பொலிவான சருமத்துக்கு...

பொலிவான சருமத்துக்கு
News
பொலிவான சருமத்துக்கு

காஸ்மெடிக்ஸ்கானப்ரியா

ருபது வயதிலிருந்து அறுபது வயது வரை ஆண் பெண் என அனைவரும் தங்களை மெருகேற்றிக்கொள்வதற்கு, ஏராளமான அழகு சாதனப் பொருள்களை வாங்கி, டிரஸ்ஸிங் டேபிளில் குவித்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் சில சருமப் பராமரிப்பு மற்றும் காஸ்மெடிக் அயிட்டங்கள் இதோ...

1. நைகா பெயின்ட்ஸ்டிக்ஸ்
(Nykaa Paintstix)


நைகாவின் லேட்டஸ்ட் லிப்ஸ்டிக் இந்த `பெயின்ட்ஸ்டிக்ஸ்’. அடர்த்தியான சாயப் பொருளைக்கொண்டுள்ளதால், அதிகம் தீட்டத் தேவையில்லை. ஒரே ஒரு ஸ்ட்ரோக் போதும். ஊதா, நியூட் உள்ளிட்ட 12 வகையான ஷேடுகளில் கிடைக்கும் இந்த 4.5 கிராம் பெயின்ட்ஸ்டிக்கின் விலை 425 ரூபாய்.

2. ஃபேஸஸ் டெனிம் கலெக்‌ஷன்
(Faces Denim Collection)


ஆறு வகையான பிரத்யேக நீல நிற ஷேடுகளைக்கொண்டு விற்பனைக்கு வந்துள்ளது இந்த ஃபேஸஸ் டெனிம் நெயில் பாலிஷ். வித்தியாசமான இரண்டு க்ளிட்டர் டெக்‌ஷர்களைக்கொண்ட இந்த 6 மி.லி நெயில் பாலிஷின் விலை 275 ரூபாய்.

பொலிவான சருமத்துக்கு...

3. கலர்பார் அமினோ ஸ்கின் ரேடியன்ட் ஃபவுண்டேஷன்
(Colorbar Amino Skin Radiant Foundation)


தண்ணீர் உட்புகாத இந்த அமினோ ஸ்கின் ரேடியன்ட் ஃபவுண்டேஷன்தான் இப்போது பலரது சாய்ஸ். இதிலுள்ள `லைசின்’ எனப்படும் ஒருவகையான அமினோ அமிலம், சீரான நிறத்தைக் கொடுக்க உதவுகிறது. கோல்டன் டீப், லோட்டஸ் டீப், ரோஸ் மைல்ட் போன்ற எட்டு வகையான ஷேடுகளில் வரும் 15 கிராம் பாட்டிலின் விலை 1,200 ரூபாய்.

4. எஸ்டீ லாடர் ரெக்கவரி ஐ மாஸ்க்
(Estee Lauder Recovery Eye Mask)


சோர்ந்த கண்களை மீண்டும் பொலிவடைய வைக்கும் எஸ்டீ லாடர் ரெக்கவரி ஐ மாஸ்க், இந்த ஆண்டின் சூப்பர் பியூட்டி அப்டேட். கருவளையம், வறண்ட கண்கள் போன்றவற்றை அகற்றும் சக்தி கொண்ட இந்த மாஸ்க்கின் விலை 750 ரூபாய்.

5. மேபிலின் புஷ் அப் டிராமா மஸ்காரா
(Maybelline Push Up Drama Mascara)


நீண்ட, அடர்த்தியான மற்றும் வளைவான இமைகளைப் பெற்றிட, மேபிலின் தயாரிப்பாக வந்துள்ளது புஷ் அப் டிராமா மஸ்காரா. சுமார் 45 டிகிரி அளவுக்கு இமைகளை உயர்த்தி நிற்கவைக்கும் இந்த 9.5 மி.லி மஸ்காராவின் விலை 550 ரூபாய்.

6. ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் ஹேர் க்ளென்சர்
(Forest Essentials Hair Cleanser)


பல வகை இயற்கைப் பொருள்களைக்கொண்டு, தலைமுடியைச் சுத்திகரிப்பதற்காகவே மார்க்கெட்டில் அறிமுகம் செய்ததுதான் இந்த ஃபாரஸ்ட் எசென்ஷியல்ஸ் ஹேர் க்ளென்சர். பிரிங்கராஜ் மற்றும் சீயக்காய் முதலிய பொருள்களை உபயோகித்திருப்பதால் பொடுகு, முடி உடைதல் போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை பெறலாம். 200 மி.லி பாட்டிலின் விலை 1,175 ரூபாய்.

7. மேபிலின் மிக்செல்லர் வாட்டர்
(Maybelline Micellar Water)


அடர்த்தியான மேக்கப்பை முற்றிலும் அகற்றி, சருமத்தைச் சுத்தம் செய்து ஈர்ப்பதத்தைத் தக்கவைப்பதற்காக உற்பத்தி செய்ததுதான் இந்த மேபிலின் மிக்செல்லர் வாட்டர். ஆல்கஹால் ஃப்ரீயான இது, அதிகப்படியான எண்ணெய்ப் பசை முழுவதையும் நீக்கி, பொலிவான சருமத்தைத் தரும். அனைத்து அழகு சாதனக் கடைகளிலும் கிடைக்கும் இதன் விலை 425 ரூபாய்.

பொலிவான சருமத்துக்கு...

8. லேக்மீ அப்சல்யூட் ஸ்கின் கிளோஸ் ஜெல் க்ரீம்
(Lakme Absolut Skin Gloss Gel Cream)


ஆரோக்கியமான மிளிரும் சருமத்துக்கு, அப்சல்யூட் ஸ்கின் கிளோஸ் ஜெல் க்ரீமை அறிமுகப்படுத்தியிருக்கிறது லேக்மீ. இது சரியான ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தைச் சுத்தம் செய்கிறது. ஆயில் சருமம்கொண்டவர்களுக்கு சரியான தேர்வு இந்த ஜெல் க்ரீம். இதன் விலை 430 ரூபாய்.

9. ஓரிஃப்ளேம் மில்க் அண்டு ஹனி கோல்டு பாடி க்ரீம்
(Oriflame Milk and Honey Gold Body Cream)


ஓரிஃப்ளேம் மில்க் அண்டு ஹனி கோல்டு பாடி க்ரீமில் உள்ள பால் மற்றும் தேனின் நற்குணம், சருமத்தை மிருதுவாக்குவது மட்டுமின்றி, ஊட்டச்சத்தையும் அளிக்கிறது. கண்டிஷனராகவும் செயல்படும் இந்த 250 மி.லி டப்பியின் விலை 649 ரூபாய்.

10. ஜூசி கெமிஸ்ட்ரி காபி அண்டு கிரீன் டீ ஐ க்ரீம்
(Juicy Chemistry Coffee and Green Tea Eye Cream)

அழகைக் குலைக்கும் கருவளையங் களை ஜூசி கெமிஸ்ட்ரி ஐ க்ரீமில் இருக்கும் கஃபயின் (Caffine) கொண்டு அகற்றிடலாம். 100 சதவிகிதம் இயற்கைப் பொருள்களைக்கொண்டு தயாரான இந்த 10 கிராம் ஐ க்ரீமின் விலை 450 ரூபாய்.