Published:Updated:

அழகே பேரழகே!

அழகே பேரழகே!
பிரீமியம் ஸ்டோரி
News
அழகே பேரழகே!

அழகுலக்ஷ்மி

திருமணம், ஒரு  பெண் மனதளவில் மட்டுமல்லாமல்,    தன் அழகிலும் ஆரோக்கியத்திலும்கூட கவனம்கொள்ள வைக்கும் வைபவம். ஆனால், மணநாளுக்கு முன்னிரண்டு நாள்களில் இவை கிடைத்துவிடாது. ஓராண்டுக்கு முன்பே கவனம் செலுத்தவேண்டிய விஷயங்கள் இவை. இதுகுறித்து சென்னை பிரான்ஸர் மேக்கோவர் நிறுவனத்தை நடத்திவரும் மேக்கப் ஆர்டிஸ்ட் விஜி கே.என்.ஆர். ஆலோசனை வழங்குகிறார்.     

அழகே பேரழகே!

சருமம் பத்திரம்

திருமணத்துக்கு ஓராண்டுக்கு முன்பே உங்கள் சருமத்தைப் பராமரிப்பது அவசியம். சரும அழகுக்கான சிகிச்சைகளோடு, ஆரோக்கியத்துக்கான உணவு களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். செயற்கைத்தனமான பளிச் தோற்றத்தைத் தவிர்த்து, ஆரோக்கியமான அழகுக்கு மாறிட இவற்றை ஓராண்டு காலமாவது கடைப்பிடிக்க வேண்டும்.

நேரம் ஒதுக்குதல்

திருமணத்துக்குப் பின்பும் பெண்கள் தனது அழகைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் நேரம் ஒதுக்கினால் மட்டுமே, எப்போதும் புதுமணப் பெண்ணாக ஜொலித்திட முடியும். அதனால் உங்கள் சருமத்தை ஸ்பெஷலாகப் பராமரிக்கத் தவறாதீர்கள்.

மாயம் செய்யும் மாஸ்க்

சோர்வான முகத்தை உடனடியாக பொலிவடைய செய்யக்கூடியது ‘ஃபேஸ் மாஸ்க்’. வறண்ட சருமத்தினர் மாதத்தில் இரண்டு முறையும் எண்ணெய் சருமத்தினர் வாரத்தில் மூன்று முறையும் முகத்துக்கு மாஸ்க் பயன்படுத்தலாம். இது முகத்தில் உள்ள மாசு மருக்களை நீங்கச் செய்வதுடன் தளர்வான சருமத்தை இறுகச்செய்யும்.

மேக்கப் பிரஷ்... எப்பவும் ஃபிரெஷ்

நீங்கள் பயன்படுத்தும் மேக்கப் பிரஷ்ஷை நீண்ட நாள்களுக்கு சுத்தம் செய்யாமல் பயன்படுத்தி வந்தால் சரும அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் குறைந்தபட்சம், வாரம் ஒருமுறையாவது ஷாம்பூ கலந்த தண்ணீரில் பிரஷ்களை மூழ்கவிட்டு பத்து நிமிடங்கள் ஊற வைத்து அலச வேண்டும்.

அழகே பேரழகே!எண்ணெய்  சருமப் பராமரிப்பு

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அடிக்கடி ‘ஃபேஸ் வாஷ்’ உபயோகிப்பது அவசியம். இவர்கள் மித மான ஃபேஸ் வாஷ் உபயோகிப்ப துடன் டோனரைத் தவிர்த்து விட்டு லைட் வெயிட் ஆயில் ஃப்ரீ மாய்ஸ்சரைசர் பயன்படுத்தினால், சருமத்தில் எண்ணெய் வழிவது கட்டுப் படுவதுடன் எப்போதும் புத்துணர்ச்சியுடன் மிளிரும்.

ரெகுலர் பேசியல்

திருமணம் நிச்சயமானதும் முகத்தின் அழகை மெரு கேற்ற மாதம் ஒரு பேஷியல் செய்திருப்பீர்கள். அந்த மெருகு குலையாமல் காக்க, தொடர்ந்து பேசியல் செய்வது நல்லது. இது அழகைப் பாதுகாப்பதற்கு மட்டுமல்ல... புதுப்புது உறவுகள், அவை தரும் கூடுதல் பொறுப்புகளினால் மன அழுத்தத்தை மறக்கச் செய்திடும். 

மேக்கப் ரிமூவர்


திருமணத்துக்குப் பிறகு உங்கள் துணையுடன் அடிக்கடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது, பளிச் தோற்றத்துக்காக மேக்கப் போட்டுக்கொண்டு செல்வீர்கள். ஆனால், வெளியி லிருந்து வீட்டுக்கு வந்ததும், தரமான மேக்கப் ரிமூவர் கொண்டு மேக்கப்பைக் கலைத்த பிறகுதான் முகத்தைக் கழுவ வேண்டும்.

இதழ்களுக்கு இதம்

உதடுகள் வறண்டு வெடிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பதற்கு spf30 கொண்ட ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம். இது வெயில், மழை, பனி என அனைத்துக் காலங்களிலும் உதடுகளைப் பாதுகாக்கும். இதுதவிர தினசரி படுக்கைக்குச் செல்லும் முன்பு, உதடுகளின் மீது ஃபிரெஷ்ஷான வெண் ணெயைத் தடவி வரலாம்.

கண்களும் பளிச்

 இரவு படுக்கைக்குச் செல்லும் முன்பு, வெள்ளரி அல்லது உருளைக்கிழங்குத் துருவல் இவற்றில் ஏதாவது ஒன்றைக் கண்களின் மீது வைத்து, கண்களைச் சுத்தமான ஒரு காட்டன் துணியினால் கட்டிக்கொண்டு படுக்கவும். தொடர்ந்து செய்துவர தூக்க மின்மையால் ஏற்படும் கருமை நீங்குவதுடன், கண்கள் எப் போதும் பளிச்சென மின்னும்.

தண்ணீர் அழகு மந்திரம்

அனைத்து சருமத்தினரும் சருமத்தைத் துவண்டுவிடாமல் பாதுகாத்திட நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழ வகைகளும் இளநீரும் சருமத்தை வறட்சியடையாமல் பாதுகாக்கும்.