Published:Updated:

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: கடைசி ஓவரில் பாகிஸ்தான் 'த்ரில்' வெற்றி 

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: கடைசி ஓவரில் பாகிஸ்தான் 'த்ரில்' வெற்றி 
ஆசியக் கோப்பை கிரிக்கெட்: கடைசி ஓவரில் பாகிஸ்தான் 'த்ரில்' வெற்றி 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில்  ‘சூப்பர் 4’ சுற்றில் ஆப்கானிஸ்தானை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிப்பெற்றது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுப்போட்டிகள் முடிவடைந்த நிலையில், ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இன்று நடைபெற்ற போட்டில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். நிதானமாக விளையாடிய ஆப்கான் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பு 256 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஷகிதி விக்கெட் இழக்காமல் 97 ரன்களை குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் கடைசி பந்தில் தொடக்க ஆட்டக்காரர் ஃபகார் ஷமான் டக்- அவுட் ஆகி வெளியேறினார். இமாம் உல் ஹக் - பாபர் அசாம் இணை நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த இமாம்-உல்- ஹக் 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த இணை 154 ரன்கள் சேர்த்தது. இதன்பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அனுபவ வீரர் சோயப் மாலிக் மட்டும் தனி ஆளாகப் போராடிக்கொண்டிருந்தார்.கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சோயப் மாலிக் சிக்ஸர், பவுண்டரி விளாசி அணியை வெற்றிபெறச் செய்தார். பாகிஸ்தான் 49.3 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. சோயப் மாலிக் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆப்கான் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.