Published:Updated:

ஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா? #Rafale

ஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா? #Rafale

ஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா? #Rafale

ஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா? #Rafale

ஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா? #Rafale

Published:Updated:
ஊழல் விவகாரம் இருக்கட்டும்... ரஃபேல் குறித்து இந்த விஷயங்கள் தெரியுமா? #Rafale

ட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு எதிராக, காங்கிரஸ் எடுத்திருக்கும் வலுவான அஸ்திரம், ரஃபேல் ஒப்பந்தம். இதுநாள் வரைக்கும் பா.ஜ.க.வின் பல்வேறு பிரச்னைகளை, தனித்தனி திசையில் இருந்து பேசிவந்த காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் ஒரே அலைவரிசையில் நின்று, உரக்கப்பேச வைத்திருக்கிறது இந்த விவகாரம். ஊடகங்களையும், எதிர்க்கட்சிகளையும் சமாளிக்க பா.ஜ.க.வும் நாளொரு விளக்கமும், பொழுதொரு பதிலுமாக சொல்லி நாள்களைக் கடத்திவருகிறது. இன்று இந்த விவகாரம் மொத்தமும் அரசியலாகிவிட்டாலும், அடிப்படையில் இது ராணுவம் தொடர்பானது. சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளைத் தாக்குப்பிடிக்க இந்திய ராணுவத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றுதான் இந்த ரஃபேல் விமானம். எத்தனையோ விமானங்கள் இருக்க, எதற்காக இந்திய ராணுவம் இதைத் தேர்வு செய்தது? பாதுகாப்புத்துறையில் இதன் பங்கு என்ன? ஒரு சின்ன ரீவைண்ட்.

1. 1999-ல் நடந்த கார்கில் போரில் இந்தியாவுக்கு இரண்டு முக்கியமான விஷயங்கள் கிடைத்தன. ஒன்று வெற்றி; இரண்டு அனுபவம். நம்முடைய உளவுத்துறையில் இருந்த குறைகளையும், தளவாடங்களில் இருந்த பற்றாக்குறைகளையும் கார்கில் யுத்தம்தான் வெளிச்சம் போட்டுக்காட்டியது. இதை சரிசெய்ய நாம் என்னவெல்லாம் செய்யலாம், என்ன ஆயுதங்கள் எல்லாம் தேவைப்படும் என அடுத்தடுத்த பணிகள் நடக்க ஆரம்பித்தன. அப்போதுதான் இந்தியாவின் விமானப்படையில் மீடியம் மல்ட்டிரோல் காம்பேட்  விமானங்களின் தேவைகுறித்து விவாதிக்கப்பட்டது. ராணுவத்தின் தரப்பில் இருந்து இவற்றை வாங்க கோரிக்கைகள் எழுந்தன. 

2. பாகிஸ்தான் மற்றும் சீனாவை சமாளிக்க இந்தியாவுக்கு எப்படியும் 42 ஸ்குவாட்ரான்கள் (42 X 18) போர்விமானங்கள் தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டது. ஆனால், அப்போது இந்தியாவின் கைகளில் இருந்தவை 18 ஸ்குவாட்ரான்கள் மட்டுமே. பின்னர் மீதி விமானங்களை வாங்குவதற்கான பணிகள் நடந்தன. 2001-ல் எழுந்த இந்தக் கோரிக்கையானது, நீண்ட தாமதத்துக்குப் பிறகு 2007-ல் அப்போதைய மன்மோகன் சிங் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சரான ஏ.கே.அந்தோணி தலைமையில் 126 (MMRCA) விமானங்களை வாங்குவதற்கான பணிகள் நடந்தன. மொத்தம் 126 விமானங்களுக்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

3. இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றுவதற்காக மொத்தம் ஆறு சர்வதேச நிறுவனங்களின் ஆறு விமானங்கள் போட்டியிட்டன. அவை, ரஷ்யா MiG -35, ஸ்வீடனின் சாப் நிறுவனத்தின் Gripen, லாக்கீட் மார்ட்டினின் F-16s, Eurofighter Typhoon, போயிங் நிறுவனத்தின் F/A - 18s, டசால்ட் நிறுவனத்தின் ரஃபேல். இதில் Typhoon மற்றும் ரஃபேல் ஆகிய இரண்டு மட்டும் இறுதிக்கட்ட பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இறுதியாக ரஃபேல் போட்டியில் வென்றது. இப்படித்தான் இந்தியாவுக்கும், ரஃபேலுக்குமான உறவு தொடங்கியது.

4. 1970-களில் பிரான்ஸ் நாட்டின் விமானப்படையும், கப்பற்படையும் தங்களுடைய தளவாடங்களை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகளில் இறங்கினர். அப்போது இரண்டு படைகளுமே ஒரு வலுவான போர் விமானத்தை உருவாக்கவேண்டியதற்கான அவசியத்தை எடுத்துரைத்தனர். ஆனால், இதைத் தனியாக செய்தால் அதிக செலவாகும் என நினைத்த பிரான்ஸ் தன்னுடைய நட்பு நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளோடு இணைந்து செயல்படத் திட்டமிட்டிருந்தது. அனைவரும் ஒன்றாக இணைந்து MMRCAரக விமானத்தை உருவாக்குவதுதான் திட்டம். ஆனால், அதில் பிரான்சிற்கு சில சிக்கல்கள் எழவே ஆட்டத்தில் இருந்து விலகிக்கொண்டது. தனியாக விமானத்தை உருவாக்கத் திட்டமிட்டது. அப்படி உருவானதுதான் ரஃபேல். மற்ற நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கியது Eurofighter Typhoon. ரஃபேலுடன் போட்டிபோடும் அளவுக்கு டைபூனும் கில்லிதான்.

5. இரட்டை இன்ஜின் கொண்ட மீடியம் மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராஃப்ட் (MMRCA) வகையைச் சேர்ந்தது இந்த ரஃபேல். இதிலேயே மொத்த மூன்று வேரியன்ட்கள் இருக்கின்றன. ரஃபேல் C - ஒரு இருக்கை கொண்டது, ரஃபேல் B - வழிகாட்டி மற்றும் பைலட்டுக்காக இரண்டு இருக்கைகள் கொண்டது; ரஃபேல் M - விமானம் தாங்கி கப்பலில் இருந்து கிளம்பும் திறன்பெற்றது. பிற இரண்டும் தரையிலிருந்து மட்டுமே கிளம்பும் திறன்படித்தவை. இந்தியா B,C இரண்டையும் வாங்குகிறது.

6. வானில் நேரடியாகத் தாக்குதல் நடத்துவது, வானில் இருந்து நிலப்பகுதிகளின் மீது, தளவாடங்களின் மீது தாக்குவது, எதிர்நாடுகளை உளவு பார்ப்பது, ஏவுகணைகளைச் சுமந்து செல்வது, அணுஆயுதங்களைக் கொண்டு செல்வது, வானில் இருந்து தரைப்படைகளுக்கான உதவிகளை வழங்குவது, நீண்டநேர ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவது, கப்பற்படைகளுக்கான உதவிகளை வழங்குவது மற்றும் கப்பலிலேயே தரையிறங்குவது என வான்வெளி தாக்குதலின் அத்தனை அம்சங்களையும் கொண்ட, அஷ்டாவதானி விமானம் ரஃபேல்.

7. இது எதிரிகளின் ரேடாரில் இருந்து முழுமையாகத் தப்பிக்கும் திறன்பெற்றது. எனவே, உளவு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ரஃபேல் கைகொடுக்கும். மேலும், எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க Spectra எனும் தேல்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பை இதில் பயன்படுத்தியிருக்கிறது டசால்ட். இவைதவிர இந்தியா கேட்கும் பிரத்யேக வசதிகளும் புதிய விமானங்களில் சேர்க்கப்படும்.

8. ஆப்கானிஸ்தான், லிபியா, ஈராக், சிரியா, மாலி ஆகிய நாடுகளில் நடந்த ராணுவ நடவடிக்கைகள்,  வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்ட அனுபவம் ரஃபேல்க்கு உண்டு. எனவே, இதை 'Combat Proven' என்கிறது டசால்ட்.

9. 2015-ல் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தபோது மொத்தம் 36 மொத்தம் ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பின்பு 2016-ல் இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கு முன்பு 2014-ல் காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதேபோல கத்தார் (24) மற்றும் எகிப்து (24) ஆகிய நாடுகளும் இதற்கான ஆர்டர்களை வழங்கியுள்ளன. 

10. இந்தியாவில் ரஃபேல் விமானங்களை நிறுத்துவதற்காக இரண்டு தளங்களை தயார் செய்துகொண்டிருக்கிறது இந்திய விமானப்படை. ஒன்று ஹரியானாவின் அம்பலா. புவியியல் ரீதியாக இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புக்கு ஏற்ற மிகமுக்கியமான தளம் என்பதால், இதைத் தேர்வு செய்துள்ளது இந்தியா. இரண்டாவது, மேற்கு வங்கத்தின் உள்ள ஹசிமரா. இந்திய - சீன எல்லைப்பகுதிகளை மனதில் வைத்து இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

11. இந்திய விமானப்படையிடம் SU-30 MKI, Mirage-2000, MiG-29, MiG-27, MiG-21 BISON, Jaguar ஆகிய போர் விமானங்கள் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் அடுத்த வருடம் ரஃபேலும் இணையவிருக்கிறது.