Published:Updated:

உயிரிழந்தது கணவர் என்று அறியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் - சேலத்தில் நிகழ்ந்த பெரும் சோகம்!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
உயிரிழந்தது கணவர் என்று அறியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் - சேலத்தில் நிகழ்ந்த பெரும் சோகம்!
உயிரிழந்தது கணவர் என்று அறியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் - சேலத்தில் நிகழ்ந்த பெரும் சோகம்!

சேலம் மாவட்டம் ஓமலூரில், உயிரிழந்தது கணவர் என்று தெரியாமல் சிகிச்சை அளித்த செவிலியர், கணவர் என்று அறிந்து உடைந்து அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

உயிரிழந்தது கணவர் என்று அறியாமல் சிகிச்சை அளித்த செவிலியர் - சேலத்தில் நிகழ்ந்த பெரும் சோகம்!

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கார் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர், அருகிலிருந்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். தலையில் அடிபட்ட அவரது முகம் முழுவதும் ரத்தமாக இருந்துள்ளது. அப்போது, மருத்துவமனையில் சிவகாமி என்ற செவிலியர் அவருக்கு முதலுதவி சிகிச்சைகளைச் செய்துள்ளார். முகத்திலிருந்த ரத்தத்தை அகற்றும்போது, இறந்திருப்பது தனது கணவர் என்பது தெரியவந்துள்ளது. உடனே, அவர் உடைந்து கதறி அழுதுள்ளார். சுற்றியிருந்த மற்ற செவிலியர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர். இந்தச் சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்தவர் பெயர் சீனிவாசன். அவருக்கு 12 வயது மகள் உள்ளார்.