Published:Updated:

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி!

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி!
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி!

மதிப்புக் கூட்டல் தொடர் - 7

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி!

மதிப்புக் கூட்டல் தொடர் - 7

Published:Updated:
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி!
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி!

“மதிப்புக் கூட்டல் தொழிலில் முதலில் உள்ளூர், மாவட்டம், மாநிலம், நாடு எனப் படிப்படியாகக் கவனித்து, சந்தையில் அதற்கான தேவையும் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொண்டு, முறையாகப் பயிற்சி பெற்றுக்கொண்ட பின்னர் இறங்கினால் வெற்றி நிச்சயம்” என பாசிட்டிவாக ஆரம்பித்தார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரும், விவசாயியுமான செந்தில்குமார். 

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி!

பழனி-கொடைக்கானல் சாலையில், இருக்கிறது செந்திலின் மலைத்தோட்டம். மதிப்புக் கூட்டல் பற்றிய தன் அனுபவங்களை அவர் நம்முடன் பகிர்ந்துகொண்டார். 

“பத்து ஆண்டுகளுக்குமுன் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலம் வாங்கினேன். இயற்கை  விவசாயம் செய்ய வேண்டும் என்ற குறிக் கோளுடன் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். இதுவரையில் நிலத்தில் ‘சில்வர் ஓக்’ என்னும் மரங்கள் 10,000 வரைக்கும் வைத்திருக்கிறேன். மேலும் காபி, எலுமிச்சை நாற்றுகளையும் நானே உருவாக்கி நடவு செய்கிறேன்.

வெறும் விவசாயம் செய்வதோடு என்னுடைய ஆசை நின்றுவிடவில்லை. எலுமிச்சைக்குப் பல நேரம் விலையே கிடைக்காது. ஒரு கிலோ பத்து ரூபாய் அளவுக்கு விலை சரிந்துவிடும். அந்த நேரத்தில் காய் எடுக்கும் கூலிகூட கட்டாது. அந்தச் சமயத்தில்தான், மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் என்ன என்கிற யோசனை உருவானது. இதுகுறித்து பலரிடம் ஆலோசனை கேட்டேன். பலகட்ட சோதனைகளுக்குப்பின், எலுமிச்சைச் சாற்றை எடுத்து கன்டெய்னரில் அடைக்கும் வழியைத் தெரிந்துகொண்டு, விற்பனை செய்து வருகிறேன்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் கொடுத்து இந்தச் சாற்றில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன, எத்தனை நாளைக்குக் கெடாமல் இருக்கும் என்னும் அறிக்கைகளையும் வாங்கிவிட்டேன். பசுமை விகடனில் சொல்லியிருந்தபடி, தஞ்சாவூரில் இருக்கும் பயிர் பதனீட்டுக் கழகத்திற்குச் சென்று சில தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டேன். பிறகு என் நிலத்தில் விளைந்த விவசாயப் பொருள்களுக்கு மதிப்புக் கூட்டும் நோக்கத்தில் இறங்கினேன்.
மைசூரில் உள்ள சி.எஃப்.டி.ஆர்.ஐ மற்றும் தஞ்சாவூரில் உள்ள ஐ.ஐ.சி.பி.டி நிறுவனத்திலும் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பங் களைக் கற்றுக்கொண்டு வந்தேன்.  முறையாகக் கற்ற பிறகு, ஏதாவது ஒரு உணவுப் பொருளை மதிப்புக் கூட்டல் செய்ய எண்ணிய நேரத்தில், எங்கள் தோட்டத்தில் விளையும் எலுமிச்சைச் சாறை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யத் தொடங்கினேன். எலுமிச்சை சாற்றை எடுத்து ஆறு மாதம் கெட்டுப் போகாத வகையில் மதிப்புக் கூட்டி ‘LIMON’ என்ற பெயரில் முதல்முதலாக அறிமுகப்படுத்தினோம்.

ஆரம்பத்தில் சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள சற்றுக் கடினமாகவே இருந்தது. இதற்குக் காரணம், நம் ஊரில் எலுமிச்சை அதிக அளவில் கிடைப்பதுதான். எளிதில் கிடைக்கும் ஒன்றை நாம் மதிப்பு கூட்டுவது தவறு என்று அப்போதுதான் உணர்ந்துகொண்டேன்.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி!

அடுத்தடுத்து எனக்குத் தோல்விகள் வந்தாலும், நான் மனம் வெறுத்து ஒதுங்கிவிடவில்லை. இங்கே விலை கிடைக்காமல், ஒதுக்கப்படும் என்னுடைய பொருளுக்கு வட மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தவிர, வெளிநாடுகளுக்கும் என் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்து வருகிறேன்.

கைகொடுத்த கிரீன் காபி

எலுமிச்சையை அடுத்து, என்னுடைய நிலத்தில் விளையும் காபியை மதிப்புக் கூட்டல் செய்ய நினைத்தேன். எல்லோரும் காபியை மதிப்புக் கூட்டித்தான் விற்பனை செய்கிறார்கள். நாம் எந்த வகையில் விற்பனை செய்ய லாம் என்று மாற்றி யோசித்தேன். அதன் விளைவாகக் கிடைத்த பொருள்தான் கிரீன் காபி என்னும் மதிப்புக் கூட்டல்.

இந்தியாவில் முதன்முறையாக கிரீன் காபியை அறிமுகப்படுத்தி னோம். இதில் கஃபின் கிடையாது. உடல் மெட்டாபாலிசத்தை அதிகப்படுத்தி, தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கிறது. மேலும், உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. 

கிரீன் காபியை பெங்களூரில் உள்ள காபி போர்டு தலைமையகத் தின் உதவியோடு நாடு முழுவதும் சந்தைப்படுத்துகிறோம். அதைத் தொடர்ந்து காய்கனி, பழங்கள் ஆகியவற்றைக் கழுவும் கிரீன்வாஷ் (GREEN WASH) என்னும் முற்றிலும் இயற்கை முறையில் உருவாக்கப் பட்ட லிக்யூட் ஒன்றையும் தயாரித்துச் சந்தைப்படுத்தினோம்.

இத்தகைய மதிப்புக் கூட்டலின் மூலம், வரும் காலத்தில் என் தோட்டத்தில் விளையும் பொருள்கள் மட்டுமல்லாது, எனது நிலத்துக்கு அருகில் உள்ள இயற்கை விவசாயிகளின் பொருள்களுக்கும் தகுந்த வருமானத்தை ஏற்படுத்தித் தரமுடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் உருவாக்கி, என்னை  இன்னும் உத்வேக உழைக்க  வைத்திருக்கிறது. 

மேற்கண்ட மதிப்பு கூட்டப் பட்ட பொருள்கள் அனைத்தும் மக்களின் உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கக் கூடிய வகையில் உள்ளதா என மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுத்தான் தயாரித்து வருகிறோம். மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் எங்களின் லாப நோக்கத்திற்கானது மட்டுமல்ல. மக்களின் உடல்நலத்திலும் அக்கறை கொண்டதும்கூட.

மதிப்புக் கூட்டல் பொருள்களுக்கு மக்களின் ஆதரவுதான் மிக முக்கியம். அதை மனதில்கொண்டு எங்கள் பொருள்களுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கின்றனர். இந்தியாவில் எங்குக் கண்காட்சி நடத்தினாலும், இந்திய காபி போர்டில் வைத்து எங்களுடைய கிரீன் காஃபியை விற்பனை செய்கிறோம்.

எவ்வளவு லாபம் கிடைக்கும்?

என் தோட்டத்தில் விளையும் எலுமிச்சை, கிரீன் காபி என மூலப் பொருள்களை எடுத்துக் கொள்வதால், என்னுடைய மூலப்பொருள்களின் விலை குறைவு. மொத்தமாக எனக்கு மாதம் 8 முதல் 10 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அதில் எல்லா செலவுகளும்போக 30% லாபமாக நிற்கும்.

கிரீன் வாஷ்

எலுமிச்சைச் சாற்றை மூலப் பொருளாகப் பயன்படுத்தி ‘கிரீன் வாஷ்’ கரைசலைத் தயாரிக்கிறேன். இது, ரசாயன உரம், பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்ட காய்கறிகளின் மேல் படிந்திருக்கும் ரசாயனப் பொருள்களைக் கழுவு வதற்குப் பயன்படுகிறது. வெறும் தண்ணியில் இந்தப் படிமானங்களைக் கழுவ முடியாது. இதற்காகச் சந்தையில் சில கரைசல்கள் கிடைக்கின்றன.

ஆனால், அதையும் சில ரசாயனங் களையும் பயன்படுத்தித்தான் தயார் செய்கிறார்கள். ஆனால், நான் தயாரிக்கும் கரைசல் இயற்கை முறை யிலானது. எலுமிச்சைச் சாறு, உப்பு, வினிகர் மூன்றும்தான் மூலப்பொருள்கள். இதையும் பயிர் பதனீட்டுக் கழக ஆய்வுக்கூடம் மூலமாகச் சோதனை செய்து சான்றிதழ் வாங்கியிருக்கிறேன்.

முதல் தர காபி

வழக்கமாக இந்தியாவில் விளையும் முதல் தர காபியை ஏற்றுமதி செய்து விடுவார்கள். உள்ளூர் சந்தைக்கு அது, விற்பனைக்கு வராது. ஆனால், என் தோட்டத்தில் விளையும் முதல் தர காபியை அரைத்து விற்பனை நம் நாட்டிலேயே விற்பனை செய்து வருகிறேன்.  முதல் தர காபி கொட்டைகளையும் தனியாக பாக்கெட் செய்து விற்பனை செய்கிறேன்.

இது எல்லாமே இயற்கை முறையில் விளைவதாலும், சிக்கரி உள்ளிட்ட எந்தக் கலப்பும் இல்லாமல் கிடைக்கும் என்பதாலும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் அதிகமாகி வருகிறார்கள்” என உற்சாகமாகப் பேசி முடித்தார் செந்தில்.

விளைபொருள்களை மதிப்புக் கூட்டினால் விவசாயிகளுக்குக் கூடுதல் லாபம்தான்.

(மதிப்புக் கூடும்)

துரை.நாகராஜன்,


படங்கள்: ரமேஷ் கந்தசாமி

கொஞ்சம் ப்ளஸ்... நிறைய லாபம்! - ஏற்றம் தரும் எலுமிச்சை மற்றும் கிரீன் காபி!

சந்தை வாய்ப்பு!

“ஆரம்பத்தில் எலுமிச்சை சாற்றை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குக் கொடுத்தேன். ‘எல்லோரும் நன்றாக இருப்பதாகச் சொல்லி வாங்க ஆரம்பித்தார்கள். அதன்பின்னர் அதற்காகவே இணையதளம் உருவாக்கி அதில் விவரங்களைப் பதிவுசெய்தேன். அதன் மூலமாக வடமாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் வந்து கொண்டு  இருக்கின்றன.

எலுமிச்சை பழம் கிடைக்காத சீசனில் இந்தச் சாற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்போதைக்கு உள்ளூரில் பெரிய சந்தை வாய்ப்பு இல்லை. அதனால், எலுமிச்சைக்கு விலையில்லாத நேரங்களில் மட்டும் சாறு எடுத்து விற்பனை செய்கிறேன். சாறாக விற்பனை செய்யும்போது நல்ல லாபம் கிடைக்கிறது. மூன்று கிலோ பழத்தில் ஒரு லிட்டர் சாறு கிடைக்கும். ஒரு லிட்டர் சாற்றை 320 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். கிட்டத்தட்ட சந்தை விலையைவிட 30%   கூடுதல் விலை இப்படி செய்து விற்பதன் மூலம் கிடைக்கிறது” என்றார் செந்தில்குமார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism