Published:Updated:

நாட்டின் 100-வது விமான நிலையம் - இன்று திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

கலிலுல்லா.ச
நாட்டின் 100-வது விமான நிலையம் - இன்று திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!
நாட்டின் 100-வது விமான நிலையம் - இன்று திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!

 சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைக்கிறார். 100-வது விமான நிலையம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.


வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்துக்கு இதுவரை விமான போக்குவரத்து இல்லாத நிலையே இருந்துவந்தது. இதற்கு முற்றிப்புள்ளி வைக்கும் வகையில், புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தலைநகர் காங்டாங் நகரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பாக்யாங் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பசுமை விமான நிலையத்தில், கடந்த மார்ச் மாதம் சோதனை முயற்சியாக விமானங்கள் இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விமான சேவை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

இதனால், இமயமலைப் பகுதியில் இருக்கும் சிறிய மாநிலத்துடனான தொடர்பு மேம்படுத்தப்படும்.  பிரதமரால் திறந்துவைக்கப்படும் இந்த விமான நிலையத்தில், அக்டோபர் நான்காம் தேதியில் இருந்து விமானப் போக்குவரத்து இயங்கத் தொடங்கும். முதல்கட்டமாக கொல்கத்தா, டெல்லி, கௌகாத்தி ஆகிய நகரங்களில் இருந்து உள்நாட்டு விமானச் சேவைகள் இயக்கப்பட உள்ளது. இன்று திறந்து வைக்கப்படும் பாக்யாங் விமான நிலையம், நாட்டின் 100-வது விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமான நிலையம், மேற்கு வங்க மாநிலம் பக்டோக்ராவில் இருந்து 124 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.