Published:Updated:

`சினிமா யாரை தூக்கி வைக்கும்; எப்போ கீழ எறியும்னு தெரியாது!' - நடிகை லட்சுமி மேனன்

சு.சூர்யா கோமதி
`சினிமா யாரை தூக்கி வைக்கும்; எப்போ கீழ எறியும்னு தெரியாது!' - நடிகை லட்சுமி மேனன்
`சினிமா யாரை தூக்கி வைக்கும்; எப்போ கீழ எறியும்னு தெரியாது!' - நடிகை லட்சுமி மேனன்

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் எல்லாம் தன்னுடைய பரதநாட்டிய போஸ்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார் நடிகை லட்சுமி மேனன். அவர் பதியும் அத்தனை புகைப்படங்களுக்கும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு இருக்கிறது ரசிகர்களிடம்.

``பரதநாட்டியக் கலை ஒரு கடல்.. அது வாழ்நாள் முழுக்க கத்துக்கிட்டே இருக்க வேண்டிய ஒரு கலை. சினிமாவுல பிஸியா இருந்த நேரத்துல பரதநாட்டியத்துல சரியா கவனம் செலுத்த முடியலை. இப்ப சினிமாவுல ஒரு பிரேக் கிடைச்சிருக்கு. அந்த பிரேக்கை வைச்சு பி.ஏ.சோசியாலஜி முடிக்கப் போறேன். இடைப்பட்ட காலத்துல பெங்களூர்ல பரதம் கத்துகிட்டு அரங்கேற்றம் பண்ணிட்டேன். நிறைய ஸ்டேஜ் ஷோ பண்ணிட்டு இருக்கேன். சினிமா வாய்ப்பு வந்துகொண்டுதான் இருக்கு. இப்போதைக்கு நடனம் தவிர, வேற எந்த பிளானும் இல்ல. அதுக்காக சினிமாவுல இனி நடிக்க மாட்டேனு நினைக்காதீங்க. சினிமா யாரை எப்போ தூக்கி வைக்கும், கீழ எறியும்னு தெரியாது. எல்லா நடிகைகளுமே கொஞ்ச நாளைக்குப் பிறகு ஃபீல்ட் அவுட் ஆகிடுவாங்க. அப்படி ஒரு சூழல் வர்றப்ப அடையாளம் தெரியாமப் போக நான் விரும்பலை. அடையாளம் தெரியாம போறதுங்கிற வார்த்தையை பொருளாதாரத்தோட கனெக்ட் பண்ணிக்காதீங்க. நான் திறமையை சொல்ல வர்றேன். சினிமா என்னை மக்கள் கிட்ட கொண்டு போச்சு. ஆனா எனக்கான அடையாளம் நடனம்தான். இன்னும் பரதத்துல நிறைய கத்துக்க வேண்டியதிருக்கு. அதுக்கப்புறம் ஒரு நடனப் பள்ளி ஆரம்பிக்கணும். அதுதான் என்னோட மிகப் பெரிய ஆசை.