Published:Updated:

’இறந்தவரின் சடலத்தைக் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டோம்' - உயர் மின்னழுத்தக் கம்பியால் அவதிப்படும் கிராம மக்கள்

கு. ராமகிருஷ்ணன்
’இறந்தவரின் சடலத்தைக் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டோம்' - உயர் மின்னழுத்தக் கம்பியால் அவதிப்படும் கிராம மக்கள்
’இறந்தவரின் சடலத்தைக் கொண்டு செல்ல முடியாமல் அவதிப்பட்டோம்' - உயர் மின்னழுத்தக் கம்பியால் அவதிப்படும் கிராம மக்கள்

'உயர் மின்னழுத்தக் கம்பிகளால் எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்துகள் நிகழக்கூடும். அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என தமிழ்நாடு மின்வாரியம் அறிவுறுத்துகிறது. ஆனால் இதில் பணியாற்றும் அலுவலர்களோ, இந்த விஷயத்தில் பொறுப்புடன் பணியாற்றுவதில்லை என குற்றம்சாட்டுகிறார்கள் பொதுமக்கள். பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால் பல ஆபத்துகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஆனால் மின்வாரிய ஊழியர்களும் அதிகாரிகளும் இதில் கொஞ்சம்கூட அக்கறைகாட்டுவதில்லை. தஞ்சை மாவட்டம் வேங்கராயன் குடிகாடு கிராமத்தில் இந்தப் பிரச்னையால் இப்பகுதி மக்கள் பல சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள்.

இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. விவசாய போர்வெல் மற்றும் தெரு விளக்குகளுக்கு செல்லும் உயர் மின்னழுத்தக் கம்பிகள் மிகவும் தாழ்வாகச் செல்வதால், இங்கு வாகனங்கள் செல்வது சிரமமாக உள்ளது. அதிகமாக காற்று வீசும்போது, மின்கம்பிகள் உரசி அடிக்கடி மின்சாரம் தடைப்படுகிறது. இதனால் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்படுகிறது. மிகவும் குறைவான உயரத்தில் மின்கம்பிகள் இருப்பதால், மழை காலங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என அச்சத்துடன் இருப்பதாகவும் இப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகிறார்கள். சில தினங்கள் முன்பு இறந்த ஒருவரின் உடலை வாகனத்தில் கொண்டு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டோம். இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, உயர் மின்னழுத்த கம்பிகளை உயர்த்திக்கட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்துகிறார்கள்.