Published:Updated:

"24 மணி நேரம் வேலை செய்யணுமாம். ஆனா, ஆள் எடுக்க மாட்றாங்க!" புலம்பும் மருத்துவ ஆய்வக நுட்பனர்கள்

"24 மணி நேரம் வேலை செய்யணுமாம். ஆனா, ஆள் எடுக்க மாட்றாங்க!" புலம்பும் மருத்துவ ஆய்வக நுட்பனர்கள்

"24 மணிநேரம் இயங்கும் பணியிடங்களில் ஆட்கள் இல்லாமல் வேலை செய்யவே முடியாது. 6000 பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்பட வேண்டும். ஆனால், ஏற்கெனவே நிரப்பப்படவேண்டிய இடங்களிலேயே 700 பணியிடங்கள் காலியாக உள்ளன."

"24 மணி நேரம் வேலை செய்யணுமாம். ஆனா, ஆள் எடுக்க மாட்றாங்க!" புலம்பும் மருத்துவ ஆய்வக நுட்பனர்கள்

"24 மணிநேரம் இயங்கும் பணியிடங்களில் ஆட்கள் இல்லாமல் வேலை செய்யவே முடியாது. 6000 பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்பட வேண்டும். ஆனால், ஏற்கெனவே நிரப்பப்படவேண்டிய இடங்களிலேயே 700 பணியிடங்கள் காலியாக உள்ளன."

Published:Updated:
"24 மணி நேரம் வேலை செய்யணுமாம். ஆனா, ஆள் எடுக்க மாட்றாங்க!" புலம்பும் மருத்துவ ஆய்வக நுட்பனர்கள்

மிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆய்வக நுட்பனர்கள், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பணியிடங்கள் ஏதும் உருவாக்காமல் மத்திய ஆய்வகம் மற்றும் 24 மணிநேர ஆய்வகங்களை இயக்குவதற்கு வருத்தம் தெரிவித்தும் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் எதிரில் ஆர்பாட்டம் நடத்தினர். 

``ஆய்வக நுட்பனர் காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்தல், தலைமை ஆய்வக நுட்பனர் பதவி உருவாக்குதல், 20 ஆண்டுகள் பணிமுடித்த இரண்டாம் நிலை நுட்பனர்களை முதல்நிலை நுட்பனர்களாகப் பதவி உயர்த்துதல், புதிய மாவட்டத் தலைமை மருத்துவமனைகளிலும், புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் நிலை ஒன்று பணியிடங்களை உருவாக்குதல், அரசாணை 22ன் படி நிலை இரண்டு நுட்பனர் பணியமர்த்தும் விதிகளில் குறைந்தபட்ச தொழில் நுட்பத்தகுதி பட்டயம் எனச் சீரமைப்பு செய்தல், மருத்துவமில்லா விளக்குநர் நியமனத்தில் பி.எஸ்.சி கல்வித் தகுதியுடைய ஆய்வக நுட்பனருக்கு முன்னுரிமை வழங்கிட நியமன விதிகள் சீரமைப்பு செய்தல்” உள்ளிட்ட பல கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன. 

போராட்டம் குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் தலைவர் வீ. பார்த்தசாரதி நம்மிடம் பேசுகையில், ``தமிழக அரசு சுகாதாரத் துறையின் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் இருக்கும் ஆய்வக நுட்பனர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இந்தப் பணியிடங்களை அரசு நிரப்பிட வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் ஆய்வகங்களில் கூட பணியிடங்கள் நிரப்பப்படாமல் செயல்படுகின்றன. கூடுதலாக ஆய்வகப் பணியிடங்களை அரசு அங்கு உருவாக்க வேண்டும். 20 ஆண்டுகளாகப் பணி செய்துவரும் ஆய்வக நுட்பனர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனைத்து ஆய்வக நுட்பனர்களுக்கும் வழங்கிட வேண்டும். பணியில் இருக்கும் ஆய்வக நுட்பனர்களுக்கு பி.எஸ்.சி எம்எல்டி பயிற்சி அளித்து தரம் உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறோம்.

முதல்கட்டமாக, கடந்த பிப்ரவரி மாதம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதற்கு முன்னதாக தமிழக அரசின் செயலாளருக்கு எங்களுடைய கோரிக்கைகளை கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தக் கோரிக்கையை செயலாளர் ஏற்றுக்கொண்டு துறை சார்ந்த இயக்குநர்களுக்குப் பரிந்துரை செய்து தொடர் நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி பேசினோம். ஆனால், இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரண்டாவது கட்டமாக தற்போது ஆர்ப்பாட்டமும் நடத்தி அரசுக்கு முறையீடு செய்கிறோம். ஏற்கெனவே ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளைத்தான் நாங்கள் நிறைவேற்றச் சொல்கிறோம். இதை அரசு நிறைவேற்றாத பட்சத்தில் எங்களுடைய தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கம் அடுத்தகட்ட போராட்டத்தைத் தொடங்கும். காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், வேறு சில பணியிடங்களுக்கு இந்தப் பிரச்னை வந்தபோது, `அந்தப் பணியிடங்கள் இல்லாமல் மருத்துவமனைகளில் பிரதான பணிகள் நடக்காது' என நீதிமன்றத்தில் முறையிட்டு விலக்கு பெற்றுள்ளனர். அதே போல எங்கள் விஷயத்திலும் அரசு முடிவெடுக்க வேண்டும். ஆனால், எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து ஆய்வகப் பணியாளர்களுக்குப் பல்வேறு பிரச்னைகளைத்தான் அரசு தொடர்ந்து கொடுத்துவருகிறது. புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மிகவும் குறைந்த அளவிலான பணியாளர்களை வைத்துத்தான் இயங்கிவருகிறது. எல்லாக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறோம் என்று கூறுகிறார்களே தவிர முறையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. பல போராட்டங்களை நடத்தியும் பார்த்துவிட்டோம். ஆனால், பயனில்லை. 

24 மணிநேரம் இயங்கும் பணியிடங்களில் ஆட்கள் இல்லாமல் வேலை செய்யவே முடியாது. 6000 பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்பட வேண்டும். ஆனால், ஏற்கெனவே நிரப்பப்படவேண்டிய இடங்களிலேயே 700 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆய்வகத்துக்கு நோயாளி வந்தால், அவர்களின் உடல்நிலையைப் பரிசோதிக்க ஆட்கள் வேண்டும், `என்ன நோயிருக்கிறது?' என்பதைக் கண்டறிய ஆட்கள் வேண்டும், சிகிச்சை அளிக்க ஆட்கள் வேண்டும், முடிந்தபின் சரியாகிவிட்டதா என்று பார்க்க ஆட்கள் வேண்டும். மருத்துவர் தேவைப்படும் அளவுக்கு, ஆய்வகர்களும் தேவைப்படுகிறார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில் மருத்துவத் தரம் சிறப்பாகத்தான் உள்ளது. எனினும், இன்னும் சிறப்பான சிகிச்சையை மக்களுக்குக் கொடுக்க எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவேண்டும்” என்று கூறினார்.

சில நாள்களுக்கு முன்பாக காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சுப்பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதும் இங்குக் கவனிக்கத்தக்கது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கும் சமூகச் சூழலில் அரசின் பெரும்பாலான பணியிடங்கள் காலியாக இருப்பதும், அது நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பதும் வேதனைக்குரிய ஒன்றே!