Published:Updated:

``நவி பாப்பா பார்க்கும் முதல் படமே அப்பாவின் படம்” - பூரிக்கும் மாரி செல்வராஜ் மனைவி

நவி பாப்பா பிறந்து 65 நாள்தான் ஆகுது. முதல் முதலா படம் பாக்குறா. அதுவும் அவ அப்பா இயக்கின முதல் படம்!

``நவி பாப்பா பார்க்கும் முதல் படமே அப்பாவின் படம்” - பூரிக்கும் மாரி செல்வராஜ் மனைவி
``நவி பாப்பா பார்க்கும் முதல் படமே அப்பாவின் படம்” - பூரிக்கும் மாரி செல்வராஜ் மனைவி

 யக்குநர் மாரி செல்வராஜின் 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் வெற்றிகரமாகத் திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் திரைக்கு வருவதற்கு முன்பு வரை படத்தைப் பற்றிய அப்டேட்ஸ்களைத் தொடர்ச்சியாக முகநூலில் வெளியிட்டுக்கொண்டிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா. ஆனால், படம் வெளிவந்த பின் எந்தப் பதிவுகளையும் வெளியிட முடியாதபடி பிஸியாகிவிட்டார். அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.

“நானும் நவி பாப்பாவும் பரியேறும் பெருமாள் பாத்துட்டு இப்போதான் தியேட்டர்ல இருந்து வெளியில வர்றோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு. 'வா ரயில் விட போலாம் வா' பாட்டைத் தினமும் நவிக்குட்டி கேட்டுட்டே இருப்பாங்க. இப்ப அந்தப் பாட்டை தியேட்டர்ல பார்க்கும்போது அவங்க கை, கால அசைச்சு குட்டி ஆட்டம் போட்டுட்டாங்க. பாப்பா பிறந்து 65 நாள்தான் ஆகுது. முதல் முதலா படம் பாக்குறா. அதுவும் அவ அப்பா இயக்கின முதல் படத்தைப் பார்த்ததில் நானும் ஹேப்பி என் வீட்டுக்காரரும் ஹேப்பி” என்று பூரிக்கிறார்.