Published:Updated:

வீக்எண்ட் செலிப்ரேஷனுக்கு நச்சுனு நாலு பாயின்ட்ஸ்!

வீக்எண்ட் செலிப்ரேஷனுக்கு நச்சுனு நாலு பாயின்ட்ஸ்!
News
வீக்எண்ட் செலிப்ரேஷனுக்கு நச்சுனு நாலு பாயின்ட்ஸ்!

வீக்எண்ட் செலிப்ரேஷனுக்கு நச்சுனு நாலு பாயின்ட்ஸ்!

வாரத்தின் ஒவ்வொரு வேலை பொழுதிலும் சிஸ்டமே கஷ்டமாக ஃபீல் பண்ணும் அளவுக்கு வேலைபார்த்து, ஓய்வு நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் உங்களுக்கான உற்சாக வேளைத் தொடங்கிவிட்டது... இந்த நாளில்தான் நாம் நம் இயல்பிலேயே இருப்போம்; நம்மையே நாம் அடையாளம் காண்போம். 6 நாள் வரை நாம் அணிந்திருந்த ஒப்பனைக்கு ஓய்வு கொடுத்து ஒரிஜினல் உணர்வுகளுடன் உறவாடி மகிழ்வோம் வாருங்கள்...

`இந்த நாள் என்னுதுடா... யாரும் என்னை எதுவும் கேட்டுக்க முடியாது. நேரம் காலம் பார்க்காம தூங்கலாம், எங்க வேணும்னாலும் போகலாம், என்ன வேணும்னாலும் சாப்பிடலாம், எந்த நேரத்துல எப்படி வேணும்னாலும் இருக்கலாம், முழுச் சுதந்திரம் நம்ம கையில...' எனக் கொக்கரிக்கக்கூடியவர்களின் உற்சாகம் ரெட்டிப்பாக, உங்கள் நண்பனாக 4 யோசனைகள்...

நாளை திட்டமிடாதீங்க!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முந்தின நாள் தூங்கப்போகும்போதே நாளைய தினத்தைத் திட்டமிடாதீங்க. நல்லா தூங்கணும்னு மட்டும் நினைங்க. என்னடா, எல்லாரும் அதைப் பண்ணுங்க, இதைப் பண்ணுங்கன்னு அட்வைஸ்தான் சொல்வாங்க. இவன் என்னடான்னா, இப்படிச் சொல்றானேன்னு நினைக்கிறீங்களா... ஆமாம், பாஸ், ஒரு மனுஷனுக்கு தூக்கம் ரொம்ப முக்கியம். போதுமான தூக்கத்துக்கு அப்புறம்தான் உடம்பும் அறிவும் சூப்பர் பவர்ல சுறுசுறுப்பாகும். உங்களால முடிக்க முடியாதுன்னு நினைச்ச காரியத்தைக்கூட ஸ்மார்ட்டா செஞ்சுமுடிப்பதற்கான எனர்ஜி உங்களுக்குக் கிடைக்கும். அதனால தூக்கமே உங்களைத் துரத்துற வரைக்கும் தூங்குங்க!

வாழுற மச்சி!

`தூங்கித் தூங்கியே உடம்பு வலிக்கிறது'ன்னு நீங்க நினைக்கும்போது அவசரப்படமா ஆற அமர எந்திரிச்சு, குதூகலக்கொண்டாட்டத்துக்கு ரெடியாகுங்க. அன்னிக்கு செய்யக்கூடிய சின்னச் சின்ன விஷயம்கூட உங்களுக்கு மிகப்பெரிய திருப்தியைத் தரக்கூடியதா அமையுற அளவுக்கு யோசிச்சு செயல்படுங்க. `அட போப்பா... அதான் 6 நாளும் ஆபீஸுக்காக யோசிச்சு யோசிச்சு டையார்டாகிப்போய் டங்குவாரு அந்துபோய் இருக்கிற இன்னிக்குக்கூடவா யோசிக்கணும்?' என்கிறீர்களா... இதுவரைக்கும் யோசிச்சது யாருக்கோ பாஸ், இன்னிக்கு யோசிக்கிறது உங்களுக்காக! ப்ரோ... வாழ்க்கையில நீங்க என்னவெல்லாம் செய்யணும்னு நினைச்சிருந்தீங்களோ, அது அத்தனையும் செய்ய முடியலைன்னாலும், அதுல அர்த்தமுள்ளதை அழுத்தமா செஞ்சு `மச்சி... நீ வாழுறடா..!' என நண்பர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாழுங்க ப்ரோ.

உணர்வுகளைப் பகிர்ந்துக்கங்க...

எல்லாப் பொழுதையும் நாம குதூகலமா கழிச்சாலும், குடும்ப உறவுகளோடு கழிக்கும் அந்த நொடிகள்தான் நம்மை முழுமைப்படுத்தும். ஒரு மகனா, சகோதரனா, கணவனா, தந்தையா, பாதுகாவலனா... இடத்துக்கு ஏற்ப ஏற்றுக்கொண்டிருக்கும் பாத்திரப் பண்புகளுக்கே உரிய உணர்வுகளை உரிமையோடு வெளிப்படுத்துங்க. அது நேர்லயோ, போன்லயோ, ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ஸ்கைப்லயோ எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அப்பதான் உங்களுக்கான வாழ்க்கை அங்கீகாரம் கிடைக்கும். அந்த அங்கீகாரம்தான் உங்களை ஆயுசுக்கும் வாழவைக்கும்.

உங்கக்கிட்ட பேசுங்க...

உங்களை நீங்களே விரும்பக்கூடிய, அறிந்துகொள்ளக்கூடிய நாள்தான் இந்த விடுமுறை நாள். பார்டிக்குப் போறது, டூருக்குப் போவது, பொழுதை தனியா செலவழிப்பது, ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் தொடர்ந்து கடலையைப் போட்டு களி கிண்டுவது, அடுத்த வாரத்துக்குத் தேவையான உடை, வாகனத்தைத் தயார்ப்படுத்துறதுன்னு அடுக்கிக்கிட்டே போகலாம். வார விடுமுறையின் கடைசி நொடிவரை உற்சாகக் கொண்டாத்தில் இருந்துட்டு டையர்டாகிப்போய் டார்க் ரூமைத் தேடும் அந்தத் தருணம்தான் நம்மைப் பற்றி நாமளே தெரிஞ்சுக்கொள்ளக்கூடிய தருணம்; கொஞ்சம் அசதியா இருந்தாலும், எதிர்காலத்துல வசதியா வாழறதுக்கான வழிகளைத் தேடும் தருணம். இந்த நாள் வரைக்கும் நாம என்ன செஞ்சு முடிச்சோம்... நம்ம டிஸ்டினேஷன் எது, போற ரூட் சரியானு உங்களைப் பற்றி உங்ககிட்டயே கேள்விகள் கேட்டு, அதற்கான விடையை உங்களுக்குள்ளேயே தேடுங்க. அந்த விடைதான் அடுத்த ஒரு வாரத்துக்கான எனர்ஜி டானிக்கா அமையும்.

ட்ரை பண்ணிப்பாருங்க... வாழ்க்கையை சூப்பரா டிரைவ் பண்ணலாம்!