Published:Updated:

பட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

பட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

மீ.கண்ணன், நிதி ஆலோசகர்

பட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

மீ.கண்ணன், நிதி ஆலோசகர்

Published:Updated:
பட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

மீபத்தில் வெளியான 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களைப் பாதிக்கிற இரண்டு விஷயங்கள் நடந்துவிட்டன. ஒன்று, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில், நீண்ட கால மூலதன ஆதாய வரியாக, ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட ஆதாயத்துக்கு 10% கட்ட வேண்டும். இதை விலைவாசி உயர்வு சரிகட்டல் செய்ய இயலாது. இரண்டாவது, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் டிவிடெண்ட் விநியோக வரி 10% 1-4-2018 முதல் அமலுக்கு வரும். இந்த இரண்டு விஷயங்களாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்புகள்...

பட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

*  பட்ஜெட்டுக்குப்பின் ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு 10% டிவிடெண்ட் விநியோக வரி இருக்கும்.

* ஈக்விட்டி ஃபண்டுகளில் டிவிடெண்ட் ஃபண்டுகள் மிகவும் பிரபலமான ஒன்று. இந்தப் புதிய வரி விதிப்பினால், டிவிடெண்ட் ஃபண்டுகளின் பிரபலம் சற்றே குறையலாம். குறிப்பாக, பேலன்ஸ்டு ஃபண்டுகளில் மாத வருமானத்தை மனதில் கொண்டு முதலீடு செய்தவர்களுக்கு, மாத டிவிடெண்ட் வருவாய் சற்றுக் குறைய வாய்ப்புள்ளது. உதாரணமாக, மாத டிவிடெண்ட் வருமானம் 1,000 ரூபாயாக இருக்கும் சமயத்தில், ஏப்ரல் மாதத்திலிருந்து அது 900 ரூபாயாகக் குறையலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?

டிவிடெண்ட் விநியோக வரி 1.4.2018 முதல் நடைமுறைக்கு வருவதால், இடைப்பட்ட பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், ஈக்விட்டி ஃபண்ட் களிலிருந்து கணிசமான டிவிடெண்ட், முதலீட்டாளர் களுக்கு வர வாய்ப்புள்ளது. காரணம், 31.3.2018-க்குமுன் ஈக்விட்டி ஃபண்டுகளில் டிவிடண்டுக்கு வரி கிடையாது.

* தற்சமயம் ஈக்விட்டி சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகள், வருங்காலங்களில் கடன் சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகளாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

* சில பங்குச் சந்தை சார்ந்த பேலன்ஸ்டு ஃபண்டுகள் தொடர்ந்து இரண்டு இலக்க (10-12%)  லாபம் கொடுத்துவந்த நிலையில், இனி அந்த லாபம் கிடைக்குமா என்பது கேள்விக் குறியே. 10% டிவிடெண்ட் விநியோக வரி, சந்தையின் போக்கு மற்றும் உலகச் சந்தையில் குரூட் ஆயிலின் விலை மற்றும் தேர்தல் வருடம் போன்றவை லாப விகிதத்தைப் பாதிக்கும் காரணிகளாக உள்ளன.

* டிவிடெண்ட் விநியோக வரியால் ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் லாபம் குறையும். எனவே, இந்த ஃபண்டுகளுக்கு ஆதரவு குறையக்கூடும்.

* நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிப்பில், 31-1-2018 வரை கிடைத்த லாபத்திற்கு வரிச் செலுத்த தேவையில்லை. 1.2.2018 முதல் ஈக்விட்டி ஃபண்டுகளில் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட லாபத்துக்கு 10% வரி கட்ட வேண்டும். லாபத்தைக் கணக்கிடுவதில் சிக்கல் ஏற்படலாம். வரி கட்ட வேண்டிய லாபக் கணக்கீடு செய்வதற்கு இரண்டு என்.ஏ.வி-க்குப் பதிலாக நமக்கு மூன்று என்.ஏ.வி தேவைப்படுகிறது. வாங்கிய என்.ஏ.வி, 31-1-2018 என்.ஏ.வி மற்றும் விற்ற என்.ஏ.வி. இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே லாபத்திற்கு எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்று கணக்கிட முடியும்.

பட்ஜெட் 2018: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு என்ன பாதிப்பு?


* பட்ஜெட்டால் ஈக்விட்டி ஃபண்டுகள் மட்டுமல்ல, கடன் ஃபண்டுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று கூறப்படுவதால், அது பங்குச் சந்தையைப் பாதித்து வருகிறது.

* கடன் சார்ந்த ஃபண்டுகளில் லாபமும் குறைந்து வருகிறது. 10 வருட அரசுக் கடன் பத்திரங்களின் வருமானம் 7.5 சதவிகிதமாக  அதிகரித்துள்ளதால், கடன் சார்ந்த ஃபண்ட்களின் லாபம் குறைந்து, கடந்த ஒரு வருட காலத்தில் கடன் சார்ந்த டைனமிக் பாண்ட் ஃபண்டுகளின் லாபம் 5% அல்லது அதற்குக் குறைவாக உள்ளது.

தற்போதைய சூழலில் குறுகிய கால கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்தால், கூடுதல் வருமானம் கிடைக்கும்.

 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism