Published:Updated:

பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்!
பிரீமியம் ஸ்டோரி

நிதியாண்டு 2018-19-க்கான பட்ஜெட்டை அண்மையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில்  விவசாயம், கல்வி மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான திட்டங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. இந்த பட்ஜெட்டுக்குப் பிறகு சந்தை கடும் சரிவைச் சந்தித்துள்ளது என்றாலும், உலக அளவிலான காரணங்களே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணங் களாக அமைந்தன. எனவே, இந்தச் சரிவை புதிய முதலீட்டை மேற்கொள்வதற்கான ஒரு  வாய்ப்பாகவே முதலீட்டாளர்கள் பார்க்க வேண்டும்.

தற்போது வந்திருக்கும் பட்ஜெட்டின் அடிப்படையில்  கவனிக்க வேண்டிய பங்குகள் எவை எனப் பங்குச் சந்தை நிபுணர்கள் ஏ.கே.பிரபாகர் மற்றும் ஜி.சொக்கலிங்கம் ஆகியோரிடம் கேட்டோம். அவர்கள் பரிந்துரை செய்த பங்குகள் இனி...

முதலில், ஏ.கே.பிரபாகர், தலைமை அனலிஸ்ட் (ஹெட் ரிசர்ச்), ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல், பரிந்துரைத்த ஐந்து பங்குகள்...

பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

டாடா காபி (TATACOFFEE)

இந்த பட்ஜெட் வேளாண் மற்றும் கிராமப்புற வளர்ச்சியை மையமாகக்கொண்டு இருப்பதால்  அதிகம் பயனடையும் நிறுவனமாக டாடா காபி இருக்கிறது. மேலும், டாடா காபி நிறுவனத்தின் தொழில் நன்றாக வளர்ச்சி கண்டுவருகிறது. இதன் தயாரிப்புகளுக்கு வரவேற்பு நன்றாக இருப்பதால், விற்பனையிலும் நல்ல வளர்ச்சியிருக்கிறது. இதனால், கடந்த மூன்றாம் காலாண்டில் 44% நிகர லாப வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. மேலும், இந்தப் பங்கு கடந்த ஐந்து ஆண்டுகளிலும் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. இதன் 12 மாத இலக்கு விலை ரூ.160.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

ரூரல் எலெக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (RECLTD)

கிராமப்புற வளர்ச்சியை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் ரூ. 14 லட்சம் கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது. கிராமப்புற வளர்ச்சியில் இந்த  நிறுவனத்தின் பங்கு மிக முக்கியமானது. எனவே, இந்த பட்ஜெட் மூலம் பயனடையும் பங்குகளில் இதுவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. அரசு நிறுவனமான இந்த நிறுவனம், பலமுறை டிவிடெண்ட் வழங்கி வந்துள்ளது. இதன் 12 மாத கால இலக்கு விலை ரூ.174.

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் ஃபெர்ட்டிலைசர்ஸ் (RCF)

இந்த பட்ஜெட்டில் விவசாயத்துக்குப்  பிரதான முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், விவசாயம் சார்ந்த கெமிக்கல் மற்றும் ஃபெர்ட்டி லைசர்களுக்கு நல்ல தேவை உருவாக வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்த பட்ஜெட் மூலம் ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் மற்றும் ஃபெர்ட்டிலைசர்ஸ் நிறுவனம் பயனடையும். இதன் 12 மாத கால இலக்கு விலை ரூ.100

பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

ஐ.டி.சி (ITC)

எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த ஐ.டி.சி நிறுவனம் ஏற்கெனவே நன்றாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஜி.எஸ்.டி மூலமும் பலனடைந்திருக்கிறது. இந்த நிலையில், இந்த பட்ஜெட்டும் ஐ.டி.சி நிறுவனத்துக்குச் சாதகமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். விவசாயம் சார்ந்த தயாரிப்புகளில் ஐ.டி.சி தற்போது தீவிரமாக இறங்கியுள்ளது. எனவே, இந்தப் பங்கு ஏற்றம் அடைய வாய்ப்புள்ளது. இதன் 12 மாத கால இலக்கு விலை ரூ.350 ஆகும்.

பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

மஹிந்திரா அண்டு மஹிந்திரா ஃபைனான்ஸ் (M&MFIN)

விவசாயத்துறை சார்ந்த மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குச் சந்தையில் வரவேற்பு நன்றாகவே இருக்கிறது. மேலும், அவற்றுக்கான ஃபைனான்ஸ் சேவைகளையும் அந்த நிறுவனமே முன்னெடுத்துச் செயல்படுத்தி வருகிறது. இதனால், இந்த பட்ஜெட் மூலம் பலனடையும் நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா அண்டு மஹிந்திரா ஃபைனான்ஸ் இருக்கிறது. இதன் 12 மாத கால இலக்கு விலை ரூ.500 ஆகும்.

அடுத்து, ஈக்னாமிக்ஸ் ரிசர்ச் & அட்வைஸரி நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜி.சொக்கலிங்கம் பரிந்துரைத்த பங்குகள்...

பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

நாகர்ஜுனா கெமிக்கல்ஸ் மற்றும் ஃபெர்டிலைசர்ஸ் (NAGAFERT)

விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது. ஆனால், மக்கள் தொகை அதிகரித்து உணவுப் பொருள்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால், அதிக விளைச்சலுக்காக கெமிக்கல் மற்றும் ஃபெர்டிலைசர்கள் பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இந்த நிலையில், பட்ஜெட்டில் விவசாயத் துறை வளர்ச்சிக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் பலனடையும் நிறுவனங்களில் ஒன்றாக நாகர்ஜுனா கெமிக்கல் மற்றும் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனமும் இருக்கிறது. ஆனால், நிறுவன இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் போன்ற விவகாரங்கள் இந்த நிறுவனத்திற்கு ரிஸ்க்கை ஏற்படுத்தலாம். ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள், இந்தப் பங்கை வாங்கலாம். இதன் இலக்கு விலை. ரூ.35  

பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

பார்தி இன்ஃப்ராடெல் (INFRATEL)

இந்த நிறுவனம் அலைபேசி சேவைகளுக்கான டவர்களை அமைப்பதில் முன்னணியில் இருக்கிறது. கிராமப்புற வளர்ச்சிக்காக இந்த பட்ஜெட்டில் வைஃபை வழங்கும் திட்டம் போன்றவை முன்னெடுக்கப்பட இருப்பதால், இந்த நிறுவனம் பலனடைய வாய்ப்பு உள்ளது. தற்போது 91,000 டவர்களை இந்த நிறுவனம் நிர்வகித்து வருகிறது. நாடு முழுவதும் 22 டெலிகாம் மண்டலங்களிலும் இதன் சேவை இருக்கிறது. இதன் 12 மாத இலக்கு விலை ரூ.421 ஆகும்.

பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

நெஸ்கோ (NESCO)

இந்த நிறுவனம் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. நெடுஞ்சாலைகள், பெரு நிறுவனங்களுக்கான கட்டுமானங்கள் போன்றவற்றில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த பட்ஜெட்டில் சாலைப் போக்குவரத்து மற்றும் உள்கட்ட மைப்புகளுக்கு கணிசமான முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக் கிறது. மேலும், இந்த நிறுவனத்துக்கு எந்தக் கடனும் இல்லை. ரூ.500 கோடி கையிருப்புடன் சிறப்பான நிதி நிலையுடன் இருக்கிறது. இந்தப் பங்கு அடுத்த மூன்று வருடஙளுக்கு நன்றாக ஏற்றமடை யும் வாய்ப்புகளைக் கொண்டிருக் கிறது. இதன் ஓராண்டு இலக்கு விலை ரூ.700 ஆகும்.

பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

பிஎஸ்இ (BSE)

பி.எஸ்.இ-க்கு நேரடியாக இந்த பட்ஜெட்டில் எந்தப் பலனும் இல்லை. ஆனால், பங்கு வர்த்தக செயல்பாடுகளைப் பொறுத்து இந்த நிறுவனப் பங்கிலும் நகர்வுகள் இருக்கும் என்பதால், இந்தப் பங்கையும் முதலீட் டாளர்கள் கவனிக்கலாம். இதன் ஃபண்டமென்டல் காரணிகள் நன்றாக இருக்கின் றன. கடன் எதுவும் இல்லை. ரூ.2,513 கோடி (செப்டம்பர் மாத நிலவரப்படி) கையிருப் புடன் நல்ல நிதி நிலையில் இருக்கிறது. இதன் ஓராண்டு  இலக்கு விலை ரூ.1,170 ஆகும்.

பட்ஜெட் 2018: விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, மருத்துவம், வங்கி, உள்கட்டமைப்பு, தொழில், சேவை... கவனிக்க வேண்டிய பங்குகள்!

கர்நாடகா பேங்க் (KTKBANK)

வங்கிகள் இனி தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டதால், இதுவரை வங்கியைப் பயன் படுத்தாமல் இருந்த கிராமப்புற பொருளாதாரம் முழுவதும் வங்கிக்கு வரத் தொடங்கி யிருக்கிறது. கிராமப்புற மக்களின் மேம்பாட்டுக்காக அளிக்கப்படும் மானியம் போன்றவையும் வங்கியின் வழியேதான் பயனாளர்களைச் சென்றடைய இருக்கிறது. கர்நாடகா பேங்க், கடந்த 90 வருடங்களாக வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 783 கிளைகளைக் கொண்டிருக்கிறது. மலிவான விலையில் சேவை வழங்கும் வங்கிகளில் ஒன்றாக இது இருக்கிறது. மேலும், இதன் வாராக் கடன் அளவும் குறைவாகவே இருக்கிறது. இதன் ஓராண்டு இலக்கு விலை ரூ.220.

இந்த பட்ஜெட்டில் மருத்துவத் துறை தொடர்பாக சில திட்டங்களும் அறிவிக்கப் பட்டிருப்பதால், மருத்துவம், இன்ஷூரன்ஸ் தொடர்பான  சில பங்குகளையும்  கவனமாகப் பரிசீலிக்கலாம்!

- ஜெ.சரவணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism