Published:Updated:

பட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்!

பட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்!

பட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்!

பட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்!

பட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்!

Published:Updated:
பட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
பட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்!

நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட் எப்படி எனப் பலரும் பலவிதமாகப் பேசிக்கொண்டிருக்க, இந்த பட்ஜெட்டினால் சாதகமான விளைவுகள் ஏற்படுமா அல்லது பாதகமான விளைவுகள் ஏற்படுமா, தொழில் துறையிலும், பங்குச் சந்தையிலும் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை வாசகர்களுக்கு எடுத்துச் சொல்கிறமாதிரி நாணயம் விகடன் கடந்த 4-ம் தேதியன்று சென்னையில் ஒரு கருத்தரங்கை நடத்தியது.

பட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்!

‘‘இந்த பட்ஜெட் மூலம் பல சாதகமான பலன்கள் கிடைக்கும்!’’

இந்தக் கூட்டத்தில் முதலில் பேசினார்  முனைவர் கௌரி ராமச்சந்திரன். ‘‘இந்த பட்ஜெட் டானது அனைத்துத் தரப்பு மக்களையும் திருப்திப்படுத்துகிறமாதிரி உள்ளது.  உலக அளவில் ஜி.எஸ்.டி, பணமதிப்பு இழப்பு போன்றவற்றைக் கொண்டுவந்த நாடுகள் இரண்டு அல்லது மூன்று காலாண்டுகளில் வளர்ச்சியை நோக்கித் திரும்பத் தொடங்கியதைப்போலவே, நம் நாடும் தற்போது வளர்ச்சியை நோக்கித் திரும்புவதை ஜி.டி.பி எண்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். வரும் 2018-19-ம் ஆண்டில், நமது ஜி.டி.பி மேலும் முன்னேற்றம் கண்டு 7% வளர்ச்சியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் நம் நாட்டில் மட்டுமே ஜி.எஸ்.டி மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக கார் விற்பனை 12%, கமர்ஷியல் வாகனங்கள் விற்பனை 23%, இருசக்கர வாகனங் களின் விற்பனை 14% உயர்ந்துள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து 14%, சர்வதேச விமானப் போக்குவரத்து 16% உயர்ந்துள்ளது. தொலைபேசி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 14% உயர்ந்துள்ளது.

இந்த பட்ஜெட்டில், பல துறைகளில் வேலைவாய்ப்புகள் குறித்த தெளிவான பார்வை கிடைத்துள்ளது. விவசாயத் துறையில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாலும், மருத்துவத்துறையில் நிறைய சுகாதார மையங்கள் உருவாக்கப் பட்டுள்ளதாலும், ‘அனைவருக்கும் வீடு’ என்கிற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாலும் புதிதாக பல லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். சுருக்கமாக, இந்த பட்ஜெட் மூலம் பல சாதகமான பலன்கள் ஏற்படும்’’ என்றார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்!

‘‘முதலீடு செய்ய நல்ல வாய்ப்பு’’

அடுத்ததாகப் பேசினார் சோனா ஃபைனான்ஷியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இ.எம்.சி. பழனியப்பன்.

‘‘பங்குச் சந்தையில் ஏற்படும் ஏற்றம் அல்லது இறக்கம் என்பது மக்களின் சென்டிமென்ட்டைப் பொறுத்தது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் சம்பாதிப்பவர்களுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலானவர்களைப் பாதிக்கப் போவதில்லை. அதிக லாபம் சம்பாதிப்பவர்கள் மட்டுமே வரி கட்ட வேண்டியிருக்கும். அதேபோல, இதுவரை ஈட்டிய வருமானம் எதுவும் இந்த வரியினால் பாதிக்கப்படப்போவதில்லை. இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை ஒரு முதலீட்டாளர் என்ன என்ன லாபம் சம்பாதித்திருப்பாரோ, அதற்கு வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை. அதற்குப் பிறகு கிடைக்கும் லாபத்துக்கு மட்டுமே இது பொருந்தும். எனவே, இதில் பயப்படுவதற்கு எதுவும் இல்லை.

இந்த வரியைப் பார்த்து பயந்து போய், பலரும் பங்குகளை விற்க முயற்சி செய்கிறார்கள். இதனால் பங்குச் சந்தை கொஞ்சம் சரியலாம். இந்தத் தற்காலிகச் சரிவை முதலீட்டாளர்கள் ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்க வேண்டும். கையில் பணம் வைத்திருப்பவர்கள்  தற்போது நிறைய முதலீடு செய்யலாம். அப்படிச் செய்தால், மீண்டும் பங்குச் சந்தை மீண்டு வரும்போது லாபமாக அமையும்.

இந்த பட்ஜெட்டில் உள்கட்டமைப்பிற்கான நிறைய அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன. எனவே, இதில் முன்னேற்றங்கள் இருக்கும். வாகன உற்பத்தித் துறையில் பெரிய பாதிப்பு இருக்கப்போவதில்லை. இறக்குமதி வாகனங்களுக்கு மட்டும் வரி அதிகரிக்கப்பட்டு ள்ளது. இதனால், உள்நாட்டில் கார் தயாரிப்பவர்களுக்கு வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வங்கித் துறையில் நல்ல வளர்ச்சியைப் பார்க்க முடியும். மருத்துவக் காப்பீடு, சுகாதார மையங்கள் எனப் பல்வேறு அறிவிப்புகள் வந்துள்ளதால், மருத்துவத் துறை வளர்ச்சியைக் காணலாம். எனவே, இத்தகைய துறைகள் சார்ந்த பங்குகளில் முதலீடு செய்யலாம்’’ என்று பேசி முடித்தார்.

பட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்!

‘‘தனியார் மருத்துவமனைக்கு செக்’’

அடுத்து பேசிய டைகூன் அட்வைஸர்ஸ் நிறுவனர் எம்.சத்ய குமார் விரிவாக எடுத்துரைத்தார்.

‘‘இந்த பட்ஜெட்டை விவசாயத்துக்கு ஆதரவான பட்ஜெட் என்கிறார்கள். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாகக் கிராமப்புற மேம்பாட்டிற்கும், விவசாயத்திற்கும் ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவதே அரசின் நோக்கமாகக் கூறப்பட்டு உள்ளது. இதனை அடைய வேண்டு மென்றால், உற்பத்தித் துறையிலும், ஐ.டி துறையிலும் இருப்பதுபோல, விவசாயத் துறையையும் ஒரு தொழில் துறையாக மாற்ற வேண்டும்.

விவசாயம் என்பது உற்பத்தி செய்வதுடன் முடிந்துவிடுவ தில்லை. விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்பனைக்குக் கொண்டுவந்து, அந்த விற்பனையின் லாபத்தையும் விவசாயிக்கு எட்டும் படி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில்தான் தற்போதைய பட்ஜெட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

நம்மிடம் உழைப்பும், அதற்கேற்ற விளைச்சலும் இருக்கிறது. ஆனால், விவசாயிகள் விளைய வைக்கிற பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விவசாயிகளே நேரடியாக விற்பனையில் ஈடுபட டிஜிட்டல் இந்தியா திட்டம் உதவும். தற்போது சுமார் 50 கோடிக்கும் அதிகமானவர்களிடம்   செல்போன் இருக்கிறது. இந்த செல்போன் வாயிலாக விற்பனையை அதிகரிக்க இ-நாம் (E-Nam) என்ற திட்டம் 2014-லேயே கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டம் குஜராத்தில் நல்லமுறையில் செயல்பட்டு வருகிறது. இ-காமர்ஸ் வழியாக விவசாய விளை பொருள்கள் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன.

பட்ஜெட் 2018... தெளிவை ஏற்படுத்திய நிபுணர்கள்!

‘ஆயுஸ்மான் பாரத்’ என்ற பெயரில், உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இந்தத் திட்டத்தின்படி, ஒரு குடும்பத்திற்கு ரூ5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு செய்யப்படும். இந்தத் திட்டம் மொத்தம் 10 கோடி குடும்பங்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. குடும்பத்திற்கு 5 பேர் எனக் கணக்கில்கொண்டால், 50 கோடி மக்களுக்கு நன்மை தரக் கூடிய திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தை வெறும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக மட்டுமே அனைவரும் பார்க்கிறார்கள். ஆனால், எனது பார்வையில் இது நம் நாட்டிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு வைக்கப் பட்ட ‘செக்’ என்றே சொல்லலாம்.

இந்தத் திட்டம் வந்தால், அரசு மருத்துவமனையின் சுகாதாரமின்மை மற்றும் அதிகக் கூட்டம் காரணமாகத் தனியார் மருத்துவமனைகளை நோக்கி மக்கள் செல்வார்கள். ரூ.5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு இருப்பதால், தனியார் மருத்துவமனைக்குச் செல்வதற்கு அதிகத் தயக்கம் இருக்காது. அப்போது தனியார் நிறுவனமானது மருத்துவ மனையின் சிகிச்சை முறைகள், அறை வசதி, சிகிச்சைக்கான செலவுகள் குறித்துக் கேள்வி எழுப்புவார்கள். அதற்குத் தகுந்த பதில் கிடைத்தால் மட்டுமே இன்ஷூரன்ஸ் தொகை வழங்கப் படும். இதன்மூலம் தனியார் மருத்துவமனைகளை ஒரு ஒழுங்குக் குள் கொண்டுவர இயலும். இதுவே இந்த மருத்துவக் காப்பீட்டின் மறைமுக வெற்றி ஆகும். இந்த மருத்துவக் காப்பீட்டின் நேரடி பலன் என்றால், இந்த அட்டையைப் பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக வைத்திருப்பார்கள். இந்தப் பலனை அடைந்தவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் செய்யலாம்’’ என்றார்.

ஆகமொத்தத்தில், இந்த பட்ஜெட் குறித்து முதலீட்டாளர் களிடையே நல்ல விழிப்பு உணர்வை ஏற்படுத்தியது இந்தக் கூட்டம்.

- தெ.சு.கவுதமன்,

படங்கள்: தே.அசோக்குமார்
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism