Published:Updated:

ரகுராம் ராஜனுக்கு பிறகு சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பொறுப்பில் இரண்டாவது இந்தியர்! #GitaGopinath #IMF

உலகத்தின் முக்கியமான பொருளாதார அமைப்புகளில் சர்வதேச நாணய நிதியமும் ( IMF) ஒன்று. இதன் தலைமை பொருளாதார அதிகாரியாக இந்தியாவில் பிறந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். 

தற்போது தலைமை பதவியில் இருக்கும் மவுரிஸ் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்தார். இதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குநர் கிறிஸ்டின் லாகார்டே, இந்த அறிவிப்பை வெளியிட்டார். அது முதலே கீதாவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.  கீதா குறித்து பேசிய கிறிஸ்டின் லாகார்டே,  ``அவர்உலகின் தலை சிறந்த பொருளாதார நிபுணர் என்பதில் சந்தேகமே இல்லை. அனுபவமும், சிறந்த தலைமை பண்பும் கொண்டவர்” என்றார். 

கர்நாடக மாநிலம் மைரூசில் பிறந்த கீதா, கேரள முதல்வரின் பொருளாதார ஆலோசகராவும் உள்ளார். இவரது நியமனத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பியது. கீதா இடதுசாரி கொள்கைக்கு எதிரான பொருளாதார கொள்கை கொண்டவர் என்பது தான் அந்த எதிர்ப்புக்குக் காரணம். தலைமைப் பொருளாதார அதிகாரி பதவிக்கு வரும் இரண்டாவது இந்தியர் இவர். முன்னதாக இந்தப் பதவியில் இந்தியாவின் முன்னாள் ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கீதா கோபிநாத் பொருளாதாரம் தொடர்பாக 40 -க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். தற்போது இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியையாக உள்ளார். இந்தியாவில் பிறந்து வளர்ந்த இவர், அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். முன்னதாக டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ படிப்பை முடித்தார். பின்னர் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பொருளாதார கல்லூரிகளில் எம். ஏ பட்டம் பெற்றார்.   அதனைத் தொடர்ந்து 2001 -ம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியையாக சேர்ந்தார். 2005 -ம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism