Published:Updated:

ஹிப் ஹாப் தமிழன்ஸ்!

ஹிப் ஹாப் தமிழன்ஸ்!

ஹிப் ஹாப் தமிழன்ஸ்!
ஹிப் ஹாப் தமிழன்ஸ்!

'கொலவெறி’க்கு முன்பே யூ டியூபில் ஹிட் அடித்தவர்கள் 'ஹிப் ஹாப் தமிழா’ டீம்தான். 'கிளப்புல மப்புல’ எனும் ஆல்பம்தான் இவர்களின் லேட்டஸ்ட் சென்சேஷன். யூ டியூப்பில் இதுவரை இரண்டரை லட்சம் பேரும் ஃபேஸ்புக்கில் ஒன்றரை லட்சம் பேரும் பார்த்து இருக்கிறார்கள். தேர்தல் கமிஷனுடன் இணைந்து வாக்குரிமை விழிப்பு உணர்வுக்காக இவர்கள் தயாரித்த 'எழுவோம் தமிழா’ ஆல்பமும் ஏகப் பிரபலம். 'ஹிப் ஹாப் தமிழா’வைத் தொடங்கிய ஆதியிடம் பேசினோம்.

##~##
''அமெரிக்காவில் 70-களில் இனவெறிக்கு எதிராகப் போராடிய கறுப்பின மக்கள் தங்களின் உணர்வுகளை எந்தவிதமான அழகியலும் இல்லாமல் உள்ளதை உள்ளபடி அப்படியே பாட்டாப் படிச்சாங்க. அப்படித்தான் 'ஹிப்ஹாப்’ பிரபலமாச்சு. இதில் தமிழின் அடையாளங்களைச் சேர்க்கணும்னு நண்பர்களோடு சேர்ந்து யோசிச்சப்பத£ன் 'ஹிப்ஹாப் தமிழா’ உருவாச்சு. 'யோகி பி’தான் எங்களின் காட் ஃபாதர்.

30 நாடுகள்ல எங்களோட ஃபாலோயர்ஸ் இருக்காங்க.  கல்லூரிகள், ஷாப்பிங் மால் மாதிரியான மக்கள் கூடும் இடங்களில் லைவ் கான்சர்ட் பண்றோம். சினிமாவைத் தாண்டி இசையை எல்லா மக்கள்கிட்டேயும் கொண்டுசேர்க்கணும். இதுதான் 'ஹிப் ஹாப் தமிழா’வின் இலக்கு!'' என்றபடி தம்ஸ்-அப் சிம்பள் காட்டும் ஆதியுடன் பரத்வாஜ், 'பீட்ஸ் ஜீவா’, பார்கவ் டீம் மெம்பர்ஸும் இணைந்துகொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் சென்னையின் வெவ்வேறு கல்லூரி மாணவர்கள்!

-நாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு