Published:Updated:

காலங்கள் மாறின... கதவுகளும் மாறின!

காலங்கள் மாறின... கதவுகளும் மாறின!

காலங்கள் மாறின... கதவுகளும் மாறின!

காலங்கள் மாறின... கதவுகளும் மாறின!

Published:Updated:

''இன்றைய தியாகராய நகரை அப்படியே புரட்டிப் போட்டால் எப்படி இருக்கும்?’ என்று கற்பனை செய்துகொள் ளுங்கள். அதுதான் அன்றைய தி.நகர். இன்று பரபரப்பாக இயங்கும் உஸ்மான் சாலையில், அன்று அரை மணி நேரத்துக்கு ஒருமுறை தான் பேருந்து தென்படும். வெறிச்சோடிக் கிடக்கும் சாலைகளில் மதிய நேரங்களில் நடந்து செல்லவே பயமாகஇருக்கும். இன்றும் உஸ்மான் சாலை பயத்தைத்தான் தருகிறது. அது, கூட்ட நெரிசலில் சிக்கிவிடுவோமோ என்ற பயம்!'' - அதிரச் சிரித்தபடியே, தான் பிறந்து வளர்ந்த தி.நகர் பற்றி விவரிக்கத் தொடங்குகிறார் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்.

காலங்கள் மாறின... கதவுகளும் மாறின!
##~##
''நான்காம் வகுப்பு படிக்கும்போது தி.நகர் தண்டபாணி தெருவில் குடியேறி னோம். அப்போது அப்பா, ரெங்கநாதன் தெருவில் பழக் கடை வைத்திருந்தார். தட்டி வைத்து அடைத்த சிறிய இடத்தில் அந்தக் கடை இருந்தது. எங்கள் கடை மட்டும் அல்ல... ரெங்கநாதன் தெருவில் இருந்த பழக் கடை, காய்கறிக் கடைகள் அனைத் துமே அன்று இப்படித்தான் இருந்தன. பொருள்களைத் தரையில் போட்டுதான் வியாபாரம் செய்வார்கள். அன்று இந்தத் தெரு விசாலமாக இருக்கும்.

குறிப்பிட்ட இடைவெளிகளில் அமைந்து இருக்கும் வீடுகளில் ஆழ்ந்த நிசப்தம் நிலவும். இன்றைய போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் மிகப் பெரிய காலி மைதானம்இருந் தது. அது சுருங்கிச் சுருங்கி இன்று காணாம லேயே போய்விட்டது. தி.நகர் பேருந்து நிலையத்தை ஒட்டி உள்ள ரவுண்டானாவும் அப்படித்தான். புல்வெளிகளுடன் கூடிய பூங்காவாக அது விஸ்தாரமாக இருக்கும். மாலை நேரங்களில் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டு இருப்போம். அங்கே இன்று பெரியார் சிலை மட்டுமே உள்ளது.

இதே போல்தான் பேருந்து நிலையமும். மிகப்பெரிய இந்தப் பேருந்து நிலையத்தில் அதிகபட்சம் 10 பேருந்துகள் மட்டுமே நிற்கும். அதை உயரமான கட்டடத்தில் நின்று பார்த்தால் பெரிய மைதானத்தில் ஏழெட்டுத் தீப்பெட்டிகளை அருகருகே வைத்தது போல் இருக்கும். இரவு நேரங்களில் உள்ளே போகப் பயந்து, வெளியில் காத்திருந்து, பேருந்து வெளியே வந்ததும் ஓடிச்சென்று ஏறியவர் களும் உண்டு. ஆனால், இன்று பேருந்து நிறுத்த இடம் போதாமல் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகிவிட்டது.

கடைகளை மூடப் பயன்படும் கதவுகளை வைத்தே தி.நகரின் வளர்ச்சியைக் கணக்கிடலாம். அன்று நாங்கள் மூங்கில் தட்டிகளைக்கொண்டு கடைகளை அடைத்தோம். பிறகு சொருகுக் கதவுகள் வந்தன. ஒன்றின் பின் ஒன்றாக மடிக்கும் மரக் கதவுகள், தூக்கி இழுக்கும் இரும்பு ஷட்டர். இப்போது அதே ஷட்டரை பக்கவாட்டில் நின்று சுற்றித் திறந்து மூடுகிறோம். இப்படித்தான் தி.நகரின் முகமும் மாறிவிட்டது.

1973-ல் இங்கு நடந்த கூட்டம்தான் தந்தை பெரியார் கலந்துகொண்ட இறுதிப் பொதுக்கூட் டம். நான் சிறுவனாக இருந்தபோது அந்தக் கூட்டத்தை ஒரு ஓரத்தில் அமர்ந்து அவரின் சொற்பொழிவைக் கேட்டது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. மேட்லி சாலையில் பொதுக் கூட்டம் நடக்கும் இந்த இடத்துக்கு அதனால்தான் பெரியார் நினைவுத் திடல் எனப் பெயர் வந்தது. பெரியார் பேசிய இறுதி உரை, 'மரண சாசனம்’ என்ற பெயரில் நூலாகவும் வெளிவந்துள்ளது.

காலங்கள் மாறின... கதவுகளும் மாறின!

காய்கறிக் கடைகள், பழக் கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்ஸ், பாத்திரக் கடைகள் என வளர்ந்து, கடைசியாகத் துணிக் கடைகள் வரத் தொடங் கியதும் இன்று தி.நகர் முழுவதுமாக மாறிவிட்டது. தி.நகர்க்காரனான எனக்கு இந்த வளர்ச்சி பெருமையை அளித்தாலும் பரபரப்பால் எங்கள் பகுதி மக்களின் அமைதி பறிபோய்விட் டதாகவே நினைக்கிறேன்!''

 • துரைப்பாக்கம் டி.பி. ஜெயின் கல்லூரியில் ஜெ.அன்பழகன் படிக்கும் காலத்தில், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இவரின் வகுப்புத் தோழர்!
   
 • இவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கு நேரில் ஆஜராகிவிடுவார்!
   
 • 2004-ல் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடந்த மறியலில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சென்னை காவல் துறை இவரைக் கைது செய்தது. இதைக் கண்டித்து கருணாநிதியே நேரடியாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் தனி ஆளாக சாலை மறியலில் அமர்ந்து, தன்னை விடுதலை செய்ய வைத்ததைப் பெருமையாகக் குறிப்பிடுகிறார்!
   
 • 2001 சட்டமன்றத் தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். 2006&ல் அதே தொகுதியில் தோல்வி அடைந்தவர். நடந்து முடிந்த தேர்தலில் சேப்-பாக்கம் &திருவல்லிக்-கேணி தொகுதியில் வெற்றிபெற்றார்!
   
 • 'அன்பு பிக்சர்ஸ்’ என்ற பெயரில் அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'ஆதிபகவன்’ படத்தைத் தயாரித்து வருகிறார் இவர். 'எந்திரன்’ படத்தின் சென்னை விநியோக உரிமையை வாங்கி 34 திரையரங்குகளில் திரையிட்டார்!

- ம.கா.செந்தில்குமார்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்