Published:Updated:

இசையால் மகிழ்விப்போம் இதயங்களை...

இசையால் மகிழ்விப்போம் இதயங்களை...

இசையால் மகிழ்விப்போம் இதயங்களை...

இசையால் மகிழ்விப்போம் இதயங்களை...

Published:Updated:
இசையால் மகிழ்விப்போம் இதயங்களை...

ன்புக்காக ஏங்குவோரை இசையால் வசப்படுத்தும் உன்னத பணியில் ஈடுபட்டு உள்ளது, சென்னை வியாசர்பாடி 'ஸ்மைல் ப்ளீஸ்’ அமைப்பு. மனநலம் குன்றியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், முதியோர் போன்ற ஒதுக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தி மகிழ்விக்கிறார்கள்.

##~##
'ஸ்மைல் ப்ளீஸ்’க்கான விதை எங்கு இருந்து விழுந்தது என்பது குறித்துப் பேசுகிறார், அந்த அமைப்பினுடைய செயலாளர் ஜஸ்டின். ''2004 புத்தாண்டு அன்னைக்கு நானும் என் நண்பர் சாய் சதீஷ§ம் 'கில்ட் ஆஃப் சர்வீஸ்’ங்கிற சேவை  இல்லத்தில் உள்ள ஆதரவற்றோருக்கு ஒருநாள் முழுக்க இசை நிகழ்ச்சி நடத்தலாம்னு முடிவு பண்ணினோம். அதைத் தொடர்ந்து நடத்தணும்கிற திட்டம் எதுவும் அப்போது எங்களுக்கு இல்லை. ஆனால், அந்த நிகழ்ச்சி நடந்து முடிஞ்சதும் அவங்க கண்களில் தெரிந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் 'இதை ஏன் நாம் தொடர்ந்து பண்ணக் கூடாது?’ங்கிற எண்ணத்தை உருவாக்குச்சு. அப்புறம் என்ன... இதோ 'ஸ்மைல் ப்ளீஸ்’ தொடங்கி எட்டு வருஷம்  ஓடிடுச்சு. நாங்க எல்லாருமே வெவ்வேறு வேலைகள்ல இருப்பதால் சனி, ஞாயிறுனு லீவு நாட்கள்ல இசை நிகழ்ச்சிகளை நடத்திட்டுவர்றோம். இதுவரை 76 நிகழ்ச்சிகளை முடிச்சிருக்கோம். ஒத்த பைசாகூட கட்டணமா வாங்கினது இல்லை'' என்கிறார்.

''இசை நிகழ்ச்சிகளில் பெரும்பாலான ரசிகர்கள், மெலடி பாட்டைத்தான் விரும்பிக் கேட்பாங்க. சிலர் தங்களை மறந்து ஆடுற மாதிரி அதிரடியான பாட்டை விரும்புவாங்க. ஒருமுறை புழல் சிறையில் பெண் கைதிகளுக்கான இசை நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம். நாங்க பாடிட்டு இருக்கிறப்பவே ஒரு பெண் போலீஸ், 'எனக்கு என் கல்லூரி நாட்கள் ஞாபகத்துக்கு வந்துடுச்சு. நான் ஒரு பாட்டு பாடிக்கலாமா?’னு கேட்டு, 'முஸ்தபா முஸ்தபா’ பாட்டைப் பாடினது மறக்க முடியாத  சம்பவம்'' என்னும் சாய் சதீஷ், 'ஸ்மைல் ப்ளீஸ்’ அமைப்பின் தலைவர்.

இசையால் மகிழ்விப்போம் இதயங்களை...

''நான் அடிப்படையில் ஓர் இசை ஆசிரியர். எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொருத்தரும் முறையா இசைப் பயிற்சி பெற்றவங்கதான். அதனால் யாருக்கும் பெருசா ரிகர்சல் தேவைப்படாது. கச்சேரி இல்லாத நாட்களில் எல்லாரும் குடும்பத்தோட பீச், சினிமானு கிளம்பிடுவோம். ஏதாவது ஓர் இடத்தில் ஒண்ணா கூடி, பாட்டு டான்ஸுனு பட்டையைக் கிளப்பினால் செம கூட்டம் கூடிடும். இந்த அமைப்பில் உள்ள 35 பேர் மட்டும் இல்லாம, எங்க குடும்பத்தில் உள்ள எல்லோரும் கண் தானம் பண்ணிருக்கோம்.

இசைக் கருவிகளைக் கொண்டு போறதுக்கும் ஆடியோவுக்கும் ஆகும் செலவுதான், எங்களோட பெரிய சவால். இதுக்கு மட்டும்தான் ஸ்பான்சர் பிடிப்போம். ஆரம்பத்தில் எங்க வீடுகளுக்குத் தெரியாம நகையை அடகுவெச்சு நிகழ்ச்சி பண்ணியிருக்கோம். மனுஷங்களை சந்தோஷப் படுத்துறதைவிட வேற என்ன சார் சந்தோஷம் வேணும்?'' என்கிறார் சாய் சதீஷ்.

இசையால் மகிழ்விப்போம் இதயங்களை...

- பூ.கொ.சரவணன்
படங்கள்: ப.சரவணகுமார்