பிரீமியம் ஸ்டோரி

ஒரு படம்

Incredibles 2 (2018)  

டெக் பிட்ஸ்

டிஸ்னி மற்றும் பிக்ஸார் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில், The Incredibles என்ற சூப்பர் ஹீரோ அனிமேஷன் திரைப்படம் 2004-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் குட்டிக் குட்டி ரசிகர்களைச் சம்பாதித்ததுபோக, இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் அள்ளிச் சென்றது. உலகமே இதன் இரண்டாம் பாகத்துக்காகக் காத்திருக்க, ஒரு வழியாக அது இந்த வருடம் வெளியாகிறது. புதிய டிரெய்லர் ஒன்றை வெளியிட்ட டிஸ்னி படம் ஜூலை மாதம் ரிலீஸ் என அறிவித்துள்ளது. படத்தின் ஒன் லைன் இதுதான். உலகைக் காக்க எலாஸ்டிக் கேர்ள் (Elasti-Girl) சென்றுவிட, மூன்று குறும்பான குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மிஸ்டர்.இன்க்ரெடிபிளுக்கு (Mr.Incredible) வருகிறது. எப்படி அந்தச் சவாலை அவர் சமாளித்தார்?

டெக் பிட்ஸ்

ஒரு ஆப்

விண்ணை அளப்போமா? (SkyView®Free) 

டெக் பிட்ஸ்

விண்வெளி குறித்துத் தெரிந்துகொள்ள, அந்த நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள நமக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. சரியான ஆசான்தான் கிடைக்கவே மாட்டார்கள். அந்தக் குறையைப் போக்கவே இந்த ஆப். நட்சத்திரங்கள் மற்றும் நட்சத்திர மண்டலங்கள் குறித்து எளிமையான முறையில் இந்த ஆப் கொண்டு தெரிந்துகொள்ளலாம். வானில் தெரியும் நட்சத்திரக் கூட்டத்தை இந்த ஆப்பின் கேமரா மூலம் படமெடுத்தால் போதும். அது எந்த நட்சத்திரக் கூட்டம் அல்லது எந்தக் கிரகம் போன்ற தகவல்களை அடுக்குகிறது. இரவானாலும் சரி, பகலானாலும் சரி, இந்த ஆப்பைப் பயன்படுத்தித் தகவல்களைப் பெறலாம்.

டெக் பிட்ஸ்

ஒரு கேம்

பாண்டா MBBS (Dr. Panda Hospital)


மக்கு மிருகங்கள் பிடிக்கும். கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டிக்கொண்ட டாக்டராக மாற அதைவிட ரொம்பப் பிடிக்கும். இரண்டுமே ஒரே கேமில் வந்தால்? இங்கே பாண்டா டாக்டர் இருக்கிறார். அவரைத் தேடி விதவிதமான விலங்குகள் நோயாளிகளாக வருகின்றன. அவர்களுக்கு ஏற்ற மருத்துவத்தை, பாண்டா டாக்டராக இருந்து நாம் அளிக்க வேண்டும். ஒரு முழு மருத்துவமனை நம் கட்டுப்பாட்டில் இருக்கும். நோயாளி மிருகங்களை அட்மிட் செய்து, அவர்கள் குணமாகும் வரை மருத்துவம் பார்க்க வேண்டும். மருத்துவ உபகரணங்கள், எளிய மருத்துவ முறைகள், முதலுதவி போன்ற விஷயங்களை இதன்மூலம் எளிதில் கற்றுக்கொள்ளலாம்.

டெக் பிட்ஸ்

ஒரு புத்தகம்

டைம் மிஷின் (‘A Wrinkle in Time’ - Madeleine L’Engle)


ந்தையைத் தேடிக் காலப்பயணம் செய்யும் சிறுவர்கள்...

காலப்பயணம் குறித்த கதைகள் எப்போதும் சுவாரஸ்யமானவை. இது  1962-ம் ஆண்டு வெளிவந்த புத்தகம் என்றாலும் இன்றும் பொருந்திப்போகக் கூடிய நிறைய சாகசங்களை உள்ளடக்கி இருக்கிறது. அதனால்தான் தற்போது இந்தப் புத்தகத்தைக் குழந்தைகளுக்கான படமாக எடுத்துக்கொண்டிருக்கிறது டிஸ்னி நிறுவனம். மெக் முர்ரி என்ற 14 வயதுச் சிறுமி, தனது தம்பி சார்லஸ் வாலஸ் மற்றும் பள்ளித் தோழன் கால்வின் ஓ கீஃப் ஆகியோருடன் இணைந்து, தொலைந்து போன விஞ்ஞானியான தன் தந்தையைக் கண்டறிய காலப்பயணம் மேற்கொள்கிறாள். காலப்பயணம், இயற்பியல் கோட்பாடுகள் என்று குழப்பும் விஷயங்களை எல்லா வயதினருக்கும் புரியும் வண்ணம் எழுதியிருப்பது சிறப்பு! இந்தப் புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற ஐந்து புத்தகங்கள்கொண்ட தொடராக இது உருமாறி உலக அரங்கில் ஒரு கிளாசிக் தொடராகிப்போனது.

டெக் பிட்ஸ்

தெரியுமா?

1954-ம் ஆண்டு முதல் பாரத ரத்னா விருது இந்திய அரசால் வழங்கப்படுகிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு