Published:Updated:

"பணக்காரன் என்பதைவிட பதிப்பாளன் என்பதே பெருமை!"

"பணக்காரன் என்பதைவிட பதிப்பாளன் என்பதே பெருமை!"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிப் போன 'சென்னை புத்தகக் காட்சி’ வரும் ஜனவரி 5-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆசியாவிலேயே அதிகமாகப் புத்தகங்கள் விற்பனையாகும் இந்தப் புத்தகக் காட்சியின் வயது 35. இந்த ஆண்டு 10 லட்சம் தலைப்புகளில் 10 கோடி புத்தகங்கள் வாசகர்களின் அறிவுப் பசிக்கு விருந்து அளிக்கக் காத்திருக்கின்றன. இந்தத் திருவிழாவின் நாயகர்களான 'தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க’த்தின் (பபாசி) பொறுப்பாளர்களைச் சந்தித்தோம்.

"பணக்காரன் என்பதைவிட பதிப்பாளன் என்பதே பெருமை!"
##~##

''25 ஆண்டுகளுக்கு முன் பதிப்புத் தொழில் என்பது கடினமான ஒன்று. கணினி வந்த பிறகு 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் புத்தகம் கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கை வளர்ந்து உள்ளது. இதனால் பதிப்பாளர்கள் அதிகரித்து உள்ளனர். எங்கள் சங்கத்தில் மட்டும் 460 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களைத் தவிர தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பதிப்பாளர்கள் உள்ளனர். விளம் பரம் மூலம் புத்தக விற்பனையைப் பெருக்கலாம் என்றால், புத்தகத் தயாரிப்புச் செலவும் விளம்பரச் செலவும் ஒன்றாகவே இருக்கிறது. இந்தப் பிரச்னைகளைப் போக்க வாசகர்களுக்கும் பதிப்பாளர் களுக்கும் நேரடியாக ஓர் உறவை ஏற்படுத்தி, புத்தகம் விற்பனை செய்யவும் வாசிப்பு மீதான நேசத்தை அதிகரிக்கவுமே புத்த கக் காட்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்'' என்கிறார் பபாசியின் தலை வர் சண்முகம்.

''புத்தகக் காட்சியில் ஒவ்வொரு நாளும் பட்டிமன்றம், கலை நிகழ்ச்சி, கவியரங்கம், விநாடி-வினா, மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள், ஓவியப் போட்டிகள்னு ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் நடத்த உள்ளோம். இதைத் தவிர 3 லட்சம் மாணவர்களுக்கு இலவச டிக்கெட் தந்து புத்தகக் காட்சிக்கு

அழைக்க உள்ளோம். வாசகர்களும் எழுத் தாளர்களும் சந்தித்து கலந்துரையாடவும் ஏற்பாடு செய்து உள்ளோம். 30 ஆண்டுகளாகப் பதிப்புத் துறையில் உள்ள பதிப்பாளர்களைக் கௌரவிப்பதோடு, சிறந்த புத்தக விற் பனையாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், குழந்தை எழுத்தாளர், சிறந்த நூலகர் விருதுகளையும் வழங்க உள்ளோம்'' என்கிறார் பொருளாளர் வெங்கடாசலம்.

''கடந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு எட்டு லட்சம் பேர் வந்தனர். இந்த ஆண்டு 10 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஏகப்பட்ட புது எழுத் தாளர்களின் புத்தகங்கள் வந்தாலும் பிர பலங்களின் கவிதை, கட்டுரை புத்தகங் கள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தலைவர் களின் வாழ்க்கை வரலாற்று நூல்களுக்கு அமோக வரவேற்பு உள்ளன. ஆனால், குழந்தை களுக்கான புத்தகங்கள் அதிக அளவில் வரா ததும் அவர்களுக்குப் பிடித்த தொனியில்எழுதும் எழுத்தாளர்கள் அதிகம் இல்லை என்பதும் வருத்தமான விஷயங்கள்'' என்கிறார் பபாசியின் உறுப்பினர்களில் ஒருவரான சீனிவாசன்

''இங்கு புத்தகம் வாங்கும் நபர்கள் குறைவு. ஆனால், விற்பனையாகும் புத்தகங்களின் எண் ணிக்கை அதிகம். பரந்துபட்ட வாசிப்புத் தன்மை இல்லாததே இதற்குக் காரணம்.  பாடப் புத்தகங்கள் தாண்டியும் வாழ்க்கைக்கான கல்வி இருக்கிறது என்பதை மாணவர்களுக்கும் பெற் றோருக்கும் புரியவைக்கும் விதமாக இயக்கங் கள் நடத்தும் எண்ணம் உள்ளது. பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் நூலகங்களையும், பொது நூலகங்களையும் இன்னும் சிறப்பாகப் பராமரித்தால் படிக்கும் பழக்கம் அதிகரிக்கும்'' என்கிறார் இன்னோர் உறுப்பினர் முருகன்.

''பணம் சம்பாதித்து பணக்காரன் என்று சொல்வதைக் காட்டிலும் பதிப்பாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறோம். இன்னும் அதிகப் புத்தகங்களை அரசு நூலகங்களில் வாங்கினால் நல்லது. ஒவ்வொரு பதிப்பாளருக்கும் 500 சதுர அடி நிலம் என நிரந்தரப் புத்தகக் காட்சிக்கு அரசு இடம் ஒதுக்கித் தந்தால், வாசகர்களுக்குத் தேவைப்படும் அனைத்து புத்தகங்களும் கிடைப்பதற்கு வசதியாக இருக்கும். இதை அரசு நிச்சயம் செய்யும் என எதிர்பார்க்கிறோம்'' என்கிறார்கள் ஒரே குரலில் பதிப்பாளர்கள்.  

"பணக்காரன் என்பதைவிட பதிப்பாளன் என்பதே பெருமை!"

- க.நாகப்பன்
படம்: பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு