Published:Updated:

எம்.ஜி.ஆர் முதல் ஜென்டில்மேன் வரை..

எம்.ஜி.ஆர் முதல் ஜென்டில்மேன் வரை..

எம்.ஜி.ஆர் முதல் ஜென்டில்மேன் வரை..

எம்.ஜி.ஆர் முதல் ஜென்டில்மேன் வரை..

Published:Updated:

13 மொழிகளில் திரைப்படங்களை தயாரித்தவர்,அண்ணா முதல் ஜெயலலிதா வரை திரைத் துறையில் இருந்து உருவான எட்டு முதலமைச்சர்களுடன் நட்பாக இருந்தவர், பல விலங்குகளை நடிக்கவைத்தவர் என, சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்தவர் ஆக இருந்தவர் ஆத்தூர் டைகர் கோவிந்தராஜன். சமீபத்தில் காலமான அவருடைய மனைவி சரோஜாவைச் சந்தித்தபோது அழுகையுடன் பேசத் தொடங்கினார்.

எம்.ஜி.ஆர் முதல் ஜென்டில்மேன் வரை..
##~##

''சிங்கம், புலி, சிறுத்தை, மனிதக் குரங்கு, கரடி, மலைப்பாம்புனு எல்லா வகைவிலங்கு களையும் வளர்த்து சினிமாவில் நடிக்கவெச்சார். எங்க வீட்டில் எப்பவும் 30-க்கும் மேற்பட்ட விலங்குகள் இருந்துக்கிட்டே இருக்கும். கடந்த 70 வருஷமா மிருகங்களை தன் குழந்தைகள் போல் நேசிச்சு வாழ்ந்தாரு. அவர் சுத்தாத ஊரே கிடையாது; பழகாத பிரபலங்களே கிடையாது. எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். தொடங்கி இன்றைய கமல், சூர்யா வரை சினிமாவில் இவரைத் தெரியாதவங்களே கிடையாது. அதே மாதிரி அமிதாப்பச்சன், கஜோலுக்கும் இவர் நல்ல பழக்கம். என்னை அவர்தான் தைரியமா சினிமாவில்  ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்டா அறிமுகப்படுத்தினார்'' என்றவர் அதற்குமேல் பேச முடியாமல் விம்மினார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய டைகர் கோவிந்தராஜனின் பேத்தி பேபி ராஜகுமாரி, ''தாத்தா கூடப் பிறந்தவங்க மொத்தம் 13 பேர். அவங்க எல்லாம் வளர்ந்து வந்தப்ப சினிமா, அதிசயமான ஒண்ணா இருந்துச்சாம். பாட்டி சரோஜா, நிறையப் படங்கள்ல  ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்டா இருந்து  இருக்காங்க. அமிதாப்பச்சனை வெச்சு இவர் எடுத்த 'மிஸ்டர் நட்வர்லால்’ படத்துக்கு இன்னைக்கும் இந்தி திரைப்படத் துறையில் நல்ல பேரு. அவருக்குச் சின்ன வயசில் இருந்தே விலங்குகள்னா ரொம்பப் பிரியம். வீட்டில் ஏகப்பட்ட மிருகங்கள் வளர்க்க ஆரம்பிச்சிருக்கார். எம்.ஜி.ஆரோடு 'அடிமைப் பெண்’ணில் நடிச்ச சிங்கம், 'தாயைக் காத்த தனயன்’ல நடிச்ச புலினு, அப்ப சினிமாவில் வந்த விலங்குகள் எல்லாம் எங்க தாத்தாவளர்த்தது தான்.

'ஜென்டில்மேன்’ல 'ஒட்டகத்தைக் கட்டிக்கோ...’ பாட்டில் நடிச்ச ஒட்டகம்கூட, எங்க தாத்தா வளர்ப்புதான். தினமும் இரவு தன்னோட அனுபவங்களைக் கதையாச் சொல்வாரு. எங்க தாத்தா மாதிரி தைரியமான ஆளை என் வாழ்க்கையில நான் பார்த்ததே கிடையாது. என்னை அடிக்கடி ஷூட்டிங்  ஸ்பாட்டுக்குக் கூட்டிட்டுப் போகும்போது எனக்கும் குழந்தை நட்சத்திரமா நடிக்க வாய்ப்பு கிடைச்சுது.  80-க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்கேன். 1996-ல் வந்த 'மிருகவதை தடைச் சட்ட’த்துக்குப் பிறகு வீட்டில் இருந்த எல்லா விலங்குகளை யும்வண்டலூர், கோயம்புத்தூர் மிருகக் காட்சி சாலைகள்ல கொண்டுபோய் விட்டுட்டாரு'' என்கிறார்.

எம்.ஜி.ஆர் முதல் ஜென்டில்மேன் வரை..

இறுதியாக நம்மிடம் பேசிய கொள்ளுப் பேரன் விஜய், ''ஒருமுறை ஒரு சினிமா நிகழ்ச்சிக்குப் போயிருந்தப்ப, ஒரு பிரபல நடிகர் 'உன் தாத்தா நாயை வாக்கிங் கூட்டிட்டுப் போற மாதிரி தினமும் சிறுத்தையை பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து தேவர் தோட்டம் வரைக்கும் வாக்கிங் கூட்டிட்டுப் போவாரு’ன்னார். அப்ப தாத்தாவை நினைச்சு ரொம்பப் பெருமைப்பட்டேன். நண்டு, மீன் குழம்புதான் தாத்தாவுக்குப் பிடிச்ச சாப்பாடு. அவர் ஒருநாள்கூட அசைவம் சாப்பிடாம இருந்ததே கிடையாது. அவர் ரொம்பவே கொடுத்துவெச்சவர். கொள்ளுப் பேரன், பேத்தி வரைக்கும் பார்த்துட்டுத்தான் இந்த உலகத்தைவிட்டு மறைந்து இருக்கார்'' என்கிறார்.

- வே.கிருஷ்ணவேணி
படங்கள்: மகா.தமிழ்ப் பிரபாகரன்