Published:Updated:

ஸ்பெக்ட்ரம்: மார்ச் 24-ல் ஜேபிசி முதல் கூட்டம்

புதுடெல்லி, மார்ச் 10,2011

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டு விசாரணைக் குழுவின் முதல் கூட்டம் மார்ச் 24-ம் தேதி நடைபெறுகிறது என்று அக்குழுவின் குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்துள்ளார். ##~~##

இந்தக் கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாட்சிகளை விசாரணைக்கு அழைப்பது, தேவையான ஆவணங்களைக் கோருவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து இறுதி செய்யப்படவுள்ளது.

தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கியது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது, அதற்கான விலை நிர்ணயம் உள்ளிட்ட 1998 முதல் 2009 வரை பின்பற்றப்பட்ட தொலைத்தொடர்பு கொள்கை குறித்து இக்குழு ஆய்வு விரிவாக ஆய்வு செய்யும்.

நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் முடிவதற்கு முன்பு தனது அறிக்கையை தாக்கல் செய்யுமாறு 30 பேர் கொண்ட இக்குழுவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு