Published:Updated:

புதிய தொடர் : மழைப் பேச்சு!

புதிய தொடர் : மழைப் பேச்சு!

புதிய தொடர் : மழைப் பேச்சு!

புதிய தொடர் : மழைப் பேச்சு!

Published:Updated:
##~##
ழைப் பேச்சு எத்தனை விதம்!
கொட்டித் தீர்க்கும் அடை மழை.
கொஞ்சிப் பேசும் சாரல்.
கெஞ்சிப் போகும் தூறல்.
இழுத்துப் போகும் வெள்ளம்.
புதிய தொடர் : மழைப் பேச்சு!
மழைப் பேச்சு எத்தனை விதம்!

ற்றைப் பார்வைதான் மின்னல்...மரமாய் மனம் கருகிப்போகும் மாயம்என்ன?

இடிதான் சிறு மொழி...
நிலமாய் உடல் அதிரும் மாயமென்ன?

சின்ன மழையின் ஞாபகச் சிலிர்ப் பிலேயே பெருங்கோடைகள் உறங்கு கின்றன. உடையும் குடையும் மழைக்குத் தடை இல்லை. மழை... கரம். நிலம்... உடல்!

மழையும் காமமும் ஒன்றுதான். நனைவது இதம். கரைவது தவம். இதமாய் தவமாய் உடலின் பேரன்பைப் பேசவருகிறது அறிவுமதியின் 'மழைப் பேச்சு.’

காதலில் தொடங்கி தாய்மையில் முடிந்த ஆதிக் காமத்தின் பிள்ளைகள் நாம். உடலைக் கொண்டாடும் நதிக் கலாசாரம் நம்முடையது. ஆண்-பெண்ணின் ஊடலும் கூடலுமே வசந்தமும் கோடையுமாய் வகைப்படுத்தப்பட்ட இலக்கியம் நம்முடையது. அறிவை உதறும் அன்பின் பிரவாகத்தில் இரண்டு உடல்கள் எழுதுவதுதான் உயிர்க் கவிதைகள்!

தீண்டலும் சீண்டலும், மோகமும் தாகமும், முத்தமும் யுத்தமுமாக இரண்டு உடல்கள் திறந்து பூட்டும் பிரியத்தின் மொழியை இன்பத் தமிழாக்கித் தருகிறார் கவிஞர். வார்த்தைகளால் இது குறு மழை. அர்த்தங்களில் பெரு மழை! இது அன்பின் அடைமழை. வாருங்கள்... மழைப் பேச்சு கேட்டு மழையாவோம்!

நிகழ்கையில் சாரல்
நினைக்க நினைக்கத்தான் மழை

னசை அவிழுங்கள் முதலில்

நீ வருவதற்கு முன் இந்தப் படுக்கை
இதனைவிடவும் அதிகமாய்க் கசங்கியிருந்தது

புதிய தொடர் : மழைப் பேச்சு!

குளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறோம்
வியர்க்க

ல்லாம் கண்ணாடிச் செயல்கள்

வழப்பாறைச் செடி நான்
கடலுக்கு மேலே உயரத்தில் சூரியன் நீ
அசைகிறேன்

விண்மீன்கள் விழுங்கிச் சிலிர்க்கிறது
உச்சத்தில் நிலா

நுனி நாக்கில் முளைக்கின்றன
பறப்பதற்கான சிறகுகள்

வ்வோர் அசைவுக்கும்
ஒவ்வொரு கோலம் போடுகிறது மெல்லிய சங்கிலி

ப்பொழுது நாம்
வெள்ளத்தில் மூழ்கிய மரங்கள்

ஓவியம் : எஸ்.இளையராஜா