Published:Updated:

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்!"

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்!"

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்!"

'மெல்லிசை மன்னர் தலைமையில் வில்லிசை மன்னருக்குப் பாராட்டு விழா!’ - கடந்த வாரம் வடபழனியில் இசை அமைப்பாளர் எம்.எஸ்.வி. தலைமையில் டி.கே.ராமமூர்த்திக்கு நடந்த பாராட்டு விழாவை இப்படித்தான் அழைத்தனர்.

##~##

ராமமூர்த்தியின் காலில் விழுந்து வணங்கி பேசத் தொடங்கிய எம்.எஸ்.வி-யின் பேச்சில் அவ்வளவு நெகிழ்ச்சி. ''இவர் என் வழிகாட்டி. என் தெய்வம். அருமை அண்ணன். அவருக்கு நான் எப்போதும் பாத பூஜை செய்ய வேண்டும். இவரைப் போல் சங்கீதமும் இங்கிதமும் கற்றுக் கொண்டு நலமாக வாழ வேண்டும்'' என்றார்.  

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்!"

பி.பி.ஸ்ரீனிவாஸ் பேசும்போது, ''ஒருநாள் நள்ளிரவு. டி.வி-யில் 'அனுபவம் புதுமை’ பாட்டைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்தப் பாட்டு முடிந்ததும் ஒரு போன் கால். 'டி.வி-யில் நீங்களும் சுசீலாவும் போட்டிப் போட்டு பாடின 'அனுபவம் புதுமை...’ பாட்டு கேட்டேன். எவ்வளவு பிரமாதமாகப் பாடி இருக்கீங்க’னு அழுதபடி பேசினாங்க. 'ஏம்மா அழறீங்க?’னு கேட்டேன். 'ஆனந்த கண்ணீர்’னு சொன்னாங்க'' என்று நிறுத்தியவர், ''அது வேற யாரும் இல்லை. எஸ்.ஜானகிதான் அது'' என்றதும் அரங்கில் அப்ளாஸ் அள்ளியது.

அடுத்து ராமமூர்த்தியின் ஏற்புரை. ''எம்.ஜி.ஆர், சிவாஜி, டி.எம்.எஸ், பி.பி.எஸ், சுசீலா, ஜானகி, எம்.எஸ்.வி. இந்த மூன்று எழுத்துக்களால்தான் எனக்குப் பெருமை. நான் திருச்சியில் பிறந்தவன். விஸ்வநாதன் திருச்சியில் வளர்ந்தவர். இது இருவருக்குமான ஒற்றுமை. விஸ்வநாதன் பெரிய ஜீனியஸ்!'' பேசிவிட்டு அமர்ந்தவரின் காலில், மீண்டும் ஒருமுறை விழுந்து வணங்கினார் எம்.எஸ்.வி!

- க.நாகப்பன்

அடுத்த கட்டுரைக்கு