Published:Updated:

``ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தா, அவரைத் தேடுவேன்!" - `பரியேறும் பெருமாள்' கதிர் #LetsRelieveStress

``ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தா, அவரைத் தேடுவேன்!" - `பரியேறும் பெருமாள்' கதிர் #LetsRelieveStress

``ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தா, அவரைத் தேடுவேன்!" - `பரியேறும் பெருமாள்' கதிர் #LetsRelieveStress

``ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தா, அவரைத் தேடுவேன்!" - `பரியேறும் பெருமாள்' கதிர் #LetsRelieveStress

``ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தா, அவரைத் தேடுவேன்!" - `பரியேறும் பெருமாள்' கதிர் #LetsRelieveStress

Published:Updated:
``ரொம்ப ஸ்ட்ரெஸ்ல இருந்தா, அவரைத் தேடுவேன்!" - `பரியேறும் பெருமாள்' கதிர் #LetsRelieveStress

மிழ் சினிமாவில் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெடுபவர்கள் மிகச் சிலரே. அதில் நடிகர் கதிரும் முக்கியமானவர். `மதயானைக் கூட்டம்`, `கிருமி`, `என்னோடு விளையாடு’, `விக்ரம் வேதா’ போன்ற படங்களின் மூலம், தனி அடையாளம் பெற்றவர். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான `பரியேறும் பெருமாள்’ மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கடும் போராட்டங்களுக்கு மத்தியில் திரைத்துறையில் கால்பதித்து வெளிச்சத்துக்கு வந்துள்ள கதிரிடம் மன அழுத்தம் தந்த தருணங்களையும், அதிலிருந்து மீண்ட ரகசியத்தையும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டோம்.  

``சினிமாவுல நடிக்கிறதுக்கு முன்னால எதையும் மனசுல சுமக்கிறதில்லை. போற போக்குல எல்லாத்தையும் எதிர்கொண்டு பழகியாச்சு. ஆனா, `மதயானைக் கூட்டம்’ படத்துல நடிச்சதுக்குப் பிறகு எனக்குக் கிடைத்த அங்கீகாரம் நிறையப் பொறுப்புகளை கொண்டு வந்துச்சு. அடுத்தடுத்த படங்களை சரியாச் செய்யணும். அதற்காக, நிறைய மெனக்கெடணும்ங்கிற அக்கறை வந்துச்சு. அப்போதான், எனக்கு எந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கிறது. எந்தக் கதையைத் தவிர்க்கிறதுன்னு நிறைய ஆலோசனையும் வழிகாட்டுதலும் தேவைப்பட்டுச்சு. அதுதான் நான் மன அழுத்தத்தை உணர்ந்த தருணம். அதிலிருந்து வெளியே வர்றதுக்கு நண்பர்கள் உதவியா இருந்தாங்க. அதற்குப் பிறகு சினிமாவுல என்னை எப்படி நிலைநிறுத்திக்கணும்னு ஒரு தெளிவு வந்துடுச்சு. 

ஒரு கதையைக் கேட்டதும், அதுல நடிக்கிறதைப் பத்தி என்னோட நண்பர்களிடம் ஆலோசனை கேட்பேன். குறிப்பா, விஜய் சேதுபதி அண்ணா... அவர்தான் எனக்கு ஆலோசகர். அட்லி, புஷ்கர் சார், காயத்ரி மேடம், ஜெகதீஷ் அண்ணா போன்றவர்களும் எனக்கு நிறைய டிப்ஸ் தருவாங்க. `ஹார்ட்வொர்க் பண்ணு.. மக்களுக்குப் பிடித்த மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடி.. எதைச் செஞ்சாலும் அதுல ஒரு புதுமை இருக்கான்னு பாரு..’ன்னு சொல்லுவாங்க. இப்படி, அவங்க தர்ற ஊக்கமும், ஆலோசனையும் என்னோட மன அழுத்தத்தைப் போக்கியிருக்கு. 

ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கிறதா உணர்ந்தேன்னா மனசுக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவேன். வாரத்தில் ஒரு நாள் கோயிலுக்குப் போவேன். பொதுவா, ஒரு படத்தில் நாம நடிக்கும்போது அந்தப் படத்தோட பாத்திரத்துக்கு நேர்மையா இருக்கணும்னு நினைப்பேன். அந்தப் பாத்திரத்துக்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். அதுக்கு நிறைய பாடுபடணும். அப்போ மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அந்த மன அழுத்தத்தை நாம ஏத்துக்கத்தான் வேணும். அதை பாசிட்டிவா மாத்திக்கணும். ஏன்னா, அப்போதான் நாம கதாபாத்திரத்துக்காக நிறைய மெனக்கெட முடியும். அதை உத்வேகமாக எடுத்துக்கிட்டோம்னா, மக்களிடம் நாம் சீக்கிரமாப் போய் சேர்ந்திட முடியும். மன அழுத்தம் ஏற்படும்போது உடல்ரீதியாகவும் நமக்குப் பாதிப்பு வரும். அதைக் கடக்கும்போதுதான் வெற்றி சாத்தியமாகும். அதுதான் உண்மையான வெற்றியாகவும் இருக்கும். மக்களும் நம்மைக் கொண்டாடுவாங்க. `பரியேறும் பெருமாள்’ படத்துல அதுதான் நடந்துச்சு. 

ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான பாத்திரத்தில் நடிக்க வேண்டியிருக்கு. அதனால, அந்தந்தப் படத்துக்கு ஏற்றவாறு உடல் எடையைக் கூட்டவோ, குறைக்கவோ செய்யணும். அதனால டயட் விஷயத்துல அக்கறை எடுத்துப்பேன். நம்ம உடம்பு சரியா இருந்தாத்தானே நாம பண்ற கேரக்டரும் சரியா இருக்கும். அதனால, காலையில் அவித்த முட்டை இரண்டும் அதோடு கொஞ்சம் பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பும் சாப்பிடுவேன். பகல் உணவா சாதம், சாம்பார், காரக்குழம்பு, ரசம், தயிர், மோர் சாப்பிட பிடிக்கும். 
அரிசி சோற்றுக்குப் பதிலா சில நேரங்களில் சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளையும் விரும்பி உண்ணுவேன். இரவு உணவாக சிக்கன் சாப்பிடுவேன். பிரியாணி ரொம்பப் பிடிக்கும். அது சிக்கனோ, மட்டனோ எதுவாக இருந்தாலும் ஒரு பிடி பிடிச்சுடுவேன். ஃபிட்னெஸ்ஸைப் பொறுத்தவரைக்கும் உடம்பு ஃபிட்டா இருந்தா போதும்னு நினைப்பேன். அதனால், `வெயிட் லிப்டிங் எக்ஸர்சைஸ்' எல்லாம் செய்ய மாட்டேன். பெரும்பாலும் `கார்டியோ எக்ஸர்சைஸ்' தான். அதுல`ஜாக்கிங்', `ரன்னிங்', `ஸ்குவாட்ஸ்', `புஷ் அப்ஸ்' அதிகமாகச் செய்வேன்’’ என்கிறார் கதிர்