Published:Updated:

ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி!
ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி!

ஆசிஃப் பிரியாணி கிச்சனுக்கு சீல் - ஜூ.வி ஆக்‌ஷன் பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கிண்டியில் செயல்பட்டுவந்த ஆசிஃப் பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து, ஜூனியர் விகடன் ஏற்கெனவே களஆய்வு நடத்தி புகார் அளித்தது.

சென்னையில், 18-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது ஆசிஃப் பிரியாணி ஹோட்டல். இவற்றுக்கு கிண்டியில் உள்ள தலைமை கிச்சனில் இருந்துதான் பிரியாணி தயாரித்து தினமும் அனுப்புகிறார்கள். சமீபத்தில் ஒரு நாள், ஜூ.வி வாசகர் ஒருவர் கோயம்பேடு ஏரியாவில் உள்ள ஆசிஃப் பிரியாணி கடைக்குப் போயிருக்கிறார். மட்டன் பிரியாணி கேட்டிருக்கிறார். அவருக்கு பரிமாறப்பட்ட பிரியாணியில் இருந்த மட்டன் துண்டுகள் தரமில்லாததைக் கவனித்து விசாரித்திருக்கிறார். அங்கே, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியதைக் கவனித்திருக்கிறார். இதுபற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது,  சரியான பதில் இல்லை. உடனே, ஜூ.வி அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தார். அடுத்த நிமிடமே ஜூ.வி சிறப்புக் குழு ஆக்ஷனில் இறங்கியது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில உணவு பாதுகாப்பு கமிஷனர் அமுதா ஐஏஎஸ் ஆபீஸில் இயங்கும் கன்ட்ரோல் ரூமுக்கு (வாட்ஸ்அப்/ செல் எண் 94440 42322) தகவல் தெரிவித்தோம்.

அதிகாரிகள் குழு விரைந்து சென்று ஆய்வு நடத்தியிருக்கிறார்கள். அங்கே, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியதை நேரில் பார்த்து எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். அதேசமயம், கிண்டியில் செயல்படும் தலைமை கிச்சன் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய அங்கும் சர்ப்ரைஸ் விசிட் செய்திருக்கிறார்கள். அங்கேயும் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவியதைப் பார்த்து எச்சரித்து, நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள். இதுபற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, " எங்கள் மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் ஆய்வு நடந்தது. உணவு பாதுகாப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி உரிய காலஅவகாசம் கொடுத்திருந்தோம். ஆனாலும், அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் தங்கள் தரப்பு தவறுகளைத் திருத்திக்கொள்ளவில்லை. இதுகுறித்து கமிஷனர் அமுதாவிடம் ஆதாரத்துடன் எடுத்துச்சொல்லி, அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அனுமதி கேட்டோம். அவரும் ஆதாரங்களைப் பரிசீலித்து, கிச்சனுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், கிச்சனுக்கு சீல் வைத்தோம் " என்றார்.

சென்னையின் பிரபல பிரியாணி ஹோட்டல்கள் பலவும் ஏராளமான கிளைகளைத் திறந்துவிடுகின்றனர். அவற்றுக்கு சென்ட்ரலைஸ்டு கிச்சன் ஒன்று இருக்கும். அங்கிருந்து பிரியாணி தயாரித்து சப்ளை செய்கிறார்கள். இங்குதான் பிரச்னையே வருகிறது. சென்ட்ரலைஸ்டு கிச்சனில் வைக்கப்பட்டிருக்கும் இறைச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும். ஃப்ரிட்ஜ் சரியாகச் செயல்பட வேண்டும். அதேபோல, உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய், அரிசி, பருப்பு, நெய் உள்ளிட்ட பொருள்கள் லைசென்ஸ் பெற்ற கடைகளில் வாங்கியதற்கான பில்களைப் பத்திரப்படுத்தியிருக்க வேண்டும்.

அதேபோல, மீதமாகும் உணவுப் பொருள்களை எப்படி அப்புறப்படுத்துகிறார்கள் என்பதை அடையாளம் காட்ட வேண்டும். இதுமாதிரியான நடைமுறைகள் இருந்தும், சில ஹோட்டல்காரர்கள் அதுபற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஹோட்டலுக்குச் செல்லும் மக்கள் தரப்பில் புகார் வந்தபிறகுதான், நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்குப் போகிறார்கள். இனியாவது, சாப்பிடப் போகும்போது உணவு தரமில்லாமலோ, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவினாலோ, உடனே உணவு பாதுகாப்புத் துறை கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுங்கள். நீங்கள் பார்த்த காட்சியைப் படம்பிடித்து, குறிப்புடன் மேலே குறிப்பிட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு