Published:Updated:

இனி க்ளைமாக்ஸை நாமே முடிவு செய்யலாம்... நெட்ஃப்ளிக்ஸின் `வாவ்' ஐடியா!

இனி க்ளைமாக்ஸை நாமே முடிவு செய்யலாம்... நெட்ஃப்ளிக்ஸின் `வாவ்' ஐடியா!

ரஜினி ஒரு காயினை சுழற்றிப் பூ விழுந்தால் பூ பாதை, தலை விழுந்தால் சிங்கப்பாதை என்று சொல்லுவார். படத்தில் தலை விழுந்து சிங்கப்பாதையில் செல்வார் அவர். இதுவே காயினில் விழப்போகும் பக்கம் பூவா இல்லை தலையா என்பதை நம்மால் நிர்ணயிக்க முடிந்தால் அதுவே இந்த இன்ட்ராக்ட்டிவ் முயற்சி.

இனி க்ளைமாக்ஸை நாமே முடிவு செய்யலாம்... நெட்ஃப்ளிக்ஸின் `வாவ்' ஐடியா!

ரஜினி ஒரு காயினை சுழற்றிப் பூ விழுந்தால் பூ பாதை, தலை விழுந்தால் சிங்கப்பாதை என்று சொல்லுவார். படத்தில் தலை விழுந்து சிங்கப்பாதையில் செல்வார் அவர். இதுவே காயினில் விழப்போகும் பக்கம் பூவா இல்லை தலையா என்பதை நம்மால் நிர்ணயிக்க முடிந்தால் அதுவே இந்த இன்ட்ராக்ட்டிவ் முயற்சி.

Published:Updated:
இனி க்ளைமாக்ஸை நாமே முடிவு செய்யலாம்... நெட்ஃப்ளிக்ஸின் `வாவ்' ஐடியா!

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தங்கள் தளத்தில் புதிய முயற்சியாகப் பார்வையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கதை நகரும் வண்ணம் இன்ட்ராக்ட்டிவ்வாக தங்களின் நிகழ்ச்சிகளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அதாவது புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். நீங்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'சிவாஜி' படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இடைவேளையை நெருங்கும்போது ரஜினி ஒரு காயினை சுழற்றிப் பூ விழுந்தால் பூ பாதை, தலை விழுந்தால் சிங்கப்பாதை என்று சொல்லுவார். படத்தில் தலை விழுந்து சிங்கப்பாதையில் செல்வார் அவர். இதுவே அந்தக் காயினில் விழப்போகும் பக்கம் பூவா இல்லை தலையா என்பதை நம்மால் நிர்ணயிக்க முடிந்தால்...? அதுதான் இந்த இன்ட்ராக்ட்டிவ் முயற்சி. அதாவது நீங்கள் பூ விழும் என்று தேர்ந்தெடுத்தால் பின்வரும் கதை பூப்பாதையில் செல்லும், தலை விழும் என்று தேர்ந்தெடுத்தால் சிங்கப்பாதையில் கதை நகரும். கேம்களில் பிரபலமான இந்த நடைமுறை இப்போது படங்கள் மட்டும் டிவி தொடர்களுக்கும் வரத் தொடங்கியுள்ளது. 

ஏற்கெனவே குழந்தைகளுக்கான சில நிகழ்ச்சிகளில் இதை முயற்சி செய்து பார்த்துள்ள நெட்ஃப்ளிக்ஸ் இப்போது அவர்களின் முக்கிய 'ப்ளாக் மிரர்' தொடரின் ஐந்தாவது சீசனின் ஒரு முக்கிய எபிசொடில் இதைச் செய்யவுள்ளனர். ஏற்கெனவே 2017-ல் வந்த 'Puss in Book' என்ற அனிமேஷன் படத்தில் இதைத் தொடங்கியது நெட்ஃப்ளிக்ஸ். அதில் அவ்வப்போது புத்தகத்தின் இரு பக்கங்களைக் கொடுத்து அதில் ஒரு பக்கத்தை நம்மை செலக்ட் செய்யச் சொல்லும். பார்க்கும் குழந்தைகள் செலக்ட் செய்யும் பக்கத்தை வைத்துக் கதை நகரும். அதன் பின்னும் 'Buddy Thunderstruck: The Maybe Pile' மற்றும் 'Stretch Armstrong: The Breakout' எனக் குழந்தைகளுக்கான இரண்டு நிகழ்ச்சிகளும் இந்த முறையில் நெட்ஃப்ளிக்ஸில் வெளிவந்துள்ளன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுபோக 'லேட் ஷிபிட்' என்ற திரைப்படம் இதைப் பெரிய திரையிலேயே முயற்சி செய்திருந்தது. பொதுவாகத் தியேட்டரில் மொபைல்கள் பயன்படுத்துவதை ஓர் அநாகரிக செயலாகத்தான் பார்ப்பார்கள். ஆனால், இந்தப் படம் பார்க்கையில் கேட்கப்படும் இடங்களில் ஒரு ஆப் மூலம் உங்கள் முடிவுகளைப் படத்தின்போது பதிவு செய்ய வேண்டும். அதிகம் பதியப்பட்ட முடிவை வைத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு கதை நகரும். இதைக் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் செய்திருந்தனர். மற்ற இடங்களில் இயக்குநரின் விருப்பத்துக்கேற்ப கதை நகரும்.

நெட்ஃப்ளிக்ஸின் போட்டி நிறுவனமாகப் பார்க்கப்படும் HBO, 'Mosaic' என்ற தொடரில் இந்த இன்டராக்ட்டிவ் முயற்சியைச் செய்தது. இந்தத் தொடருக்கென்றே வெளியிடப்பட்ட தனி ஆப் மூலம் மட்டுமே இன்ட்ராக்ட்டிவ் வழிமுறையில் பார்க்க முடியும். இதில் வித்தியாசமாக, கதையின் போக்கை நம்மால் மாற்ற முடியாது. ஆனால், எந்தக் கதாபாத்திரத்தின் பார்வையில் இருந்து கதை நகர வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்கலாம். மர்டர் மிஸ்டரி கதையான இதை இப்படி வெவ்வேறு கோணங்களில் நாமே அணுகுவதன் மூலம் குற்றவாளியை நாமே கண்டுபிடித்துவிட முடியும். ஒரு கேம் போல விரியும் இந்த ஆப் வெர்ஷனுடன், தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப ஏதுவாக சாதாரண டிவி டிராமாவாக நீளும் வெர்ஷனும் சேர்ந்தே வெளியிடப்பட்டது.

எனவே, இதை டிஜிட்டலில் அதுவும் குறிப்பாக நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஒரு தளத்தால்தான் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும். முழுமையாக ஸ்ட்ரீமிங்கை மட்டுமே நம்பி இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் மூலம் மக்களால் எளிதாக ஒரு நிகழ்ச்சியுடனோ, படத்துடனோ இன்ட்ராக்ட் செய்ய முடியும்.

மேலும் 'ப்ளாக் மிரர்' என்னும் இந்தத் தொடரே மாறும் தொழில்நுட்பங்களையும், வருங்காலத்தையும் மையப்படுத்திய ஒரு கதையை கொண்டதுதான். அதனால் இந்த இன்ட்ராக்ட்டிவ் விஷயம் என்பது கதையோட்டத்தோடு ஒன்றிப்போக வாய்ப்புகள் உண்டு. இந்த வருடம் 4 எம்மி விருதுகளும் இந்த சீரிஸ் கைவசம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆனால், உருவாக்கும்போதே பல்வேறு கிளைகள் பிரிந்து கதை செல்லும் என்பதால் அவை அனைத்தையுமே படம்பிடிக்க வேண்டும். எந்தளவு கிளைகள் பிரிகிறதோ அந்த அளவு மக்கள் கதையுடன் ஒன்ற முடியும். ஆனால், அதே சமயம் செலவும் எகிறிவிடும். எனவே, இவை இரண்டுக்குமான சமநிலையைக் கண்டுபிடிப்பதுதான் இதில் இருக்கும் பெரிய சிக்கல். எப்படியும் இந்தப் புதிய கதை சொல்லும் முறை பல புதிய வாய்ப்புகளுக்கு வழிவிடும். இது திரைத்துறைக்கு ஓர் ஆரோக்கியமான வரவாகத்தான் இருக்கும். இருப்பினும் இதன் சாத்தியக்கூறுகள் என்னென்ன என்பதை எதிர்காலம்தான் புரிய வைக்கும்.

இது குறித்து அமெரிக்க ஊடகங்கள் நெட்ஃப்ளிக்ஸை தொடர்புகொண்டபோது, உங்களுக்கு வேண்டிய பதிலை நீங்களே தேர்ந்தெடுங்கள் என இரு ஆப்ஷன்களைத் தந்து விளையாடியிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். ஒன்றில் 10 மணிநேரம் ஒலிக்கும் பூச்சிகளின் சத்தத்தையும், இன்னொன்றில் ஒரு GIF-ஐயும் வைத்துள்ளது. இதன் மூலம் இந்தத் தகவலை சூசகமாக உறுதி செய்திருக்கிறது நெட்ஃபிளிக்ஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism