Published:Updated:

`பணம் இல்லை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதுதான்'' - சாரு நிவேதிதா #LetsRelieveStress

`பணம் இல்லை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதுதான்'' - சாரு நிவேதிதா #LetsRelieveStress

`பணம் இல்லை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதுதான்'' - சாரு நிவேதிதா #LetsRelieveStress

`பணம் இல்லை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதுதான்'' - சாரு நிவேதிதா #LetsRelieveStress

`பணம் இல்லை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதுதான்'' - சாரு நிவேதிதா #LetsRelieveStress

Published:Updated:
`பணம் இல்லை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதுதான்'' - சாரு நிவேதிதா #LetsRelieveStress

வீன இலக்கியத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை சாரு நிவேதிதா. `எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்', `ஸீரோ டிகிரி', `ராஸ லீலா', `காமரூப கதைகள்', `தேகம்', `எக்ஸைல்' உள்ளிட்ட நாவல்கள் மற்றும் ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகளை எழுதியவர். தொடர்ந்து சமூகத்தில் நிலவும் பிரச்னைகள் பற்றித் தன்னுடைய கருத்துகளைப் பதிவு செய்து வருபவர். வாழ்க்கையில் மன அழுத்தம் தந்த தருணங்களை எப்படி எதிர்கொண்டு வென்றார், என்பதை இங்கே பகிர்கிறார்.

 ``நாம் ஒரு விஷயத்தை எதிர்பார்த்து அது நடக்கவில்லை என்றால் மன அழுத்தம் வரும். பொதுவாக, நம்முடைய சமூகத்தில் இளைஞர்கள், நடுத்தர வயதினர்கள்தான் அதிகமான மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். ஆண் பெண்ணிடமோ பெண் ஆணிடமோ எதிர்பார்க்கும் விஷயம் நடக்காதபோது அங்கே மன அழுத்தம் வந்துவிடுகிறது. இதில், `லவ் அஃப்பையர்’ பெரும்பங்கு வகிக்கிறது. இன்றைய சூழலில், பெரும்பாலான இளைஞர்கள் திருமணமாகி ஒரு வருடத்துக்குள் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுகிறார்கள். இதற்கு, மன அழுத்தமே முக்கியக் காரணம். எனக்கும் மன அழுத்தம் வந்திருக்கிறது. அந்த மாதிரியான சமயங்களில் எல்லாம் நான் புத்தா ஸ்டைலுக்குப் மாறிவிடுவேன். 

வாழ்க்கையை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். பூமியில் வாழப்போவது கொஞ்ச நாள்கள்தான். படிப்பிலேயே 20 வருடம் போய்விடும். அப்போது நமக்கு யோசிக்கவே நேரமிருந்திருக்காது. அதற்குப் பிறகு வேலையில் 20 வருடத்தைக் கடந்துவிடுகிறோம். அதன்பிறகு, இருக்கிற காலகட்டங்கள் மிகவும் குறைவு. இந்தியா போன்ற நாடுகளில் எல்லாம் நோயுடன் போராட வேண்டியிருக்கும். 40 வயதுக்கு மேல் நோயில்லாத மனிதனைப் பார்ப்பதே அபூர்வமாக இருக்கும். இப்படிக் குறைவான வருடங்களே இருக்கிற வாழ்க்கையில் சந்தோஷமும் இல்லையென்றால், அந்த வாழ்க்கை எப்படியிருக்கும்? அதனால் மன அழுத்தம் தரக் கூடிய எதிர்பார்ப்புகளிலிருந்து தள்ளியே இருப்பேன். 

கண்ணிவெடி இருக்கும் பாதையில் போக யாராவது முற்படுவார்களா? அதுபோலத்தான், மன அழுத்தம் வருவதற்கான நினைவுகளில் இருந்து விலகி இருப்பேன். ஒரு எழுத்தாளர் 18 மணி நேரம் வரைக்கும் தனியாக உட்கார்ந்து எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதுவே, மன அழுத்தம் தரக்கூடியதுதான். எனக்கான மன அழுத்தம் என்பது அப்படித்தான். உதாரணத்துக்கு, டெல்லியில் பேருந்தில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறாள். இதை, மீடியாவில் செய்தியாகப் பார்க்கிற பொதுஜனம் இரண்டொரு நாள்களில் அதைக் கடந்து போய்விடுவார்கள். ஆனால், என்னால் அப்படிக் கடக்க முடியாது. பெண்கள் தனியாக வெளியில் செல்லவே முடியவில்லை என்பதே மன அழுத்தத்தை எனக்குக் கொண்டு வந்திடும். ஏனென்றால், எழுத்தாளராக இருக்கிறேன் என்பதால்தான். இதை பந்தாவுக்காகச் சொல்லவில்லை. 

அப்படி, முன்பு மன அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் நண்பர்களோடு மது அருந்தும் பழக்கம் இருந்தது. ஆனால், கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் மது அருந்துவது சமூக நோயாக ஆகிவிட்டது. அதைப் பற்றிப் பேசுவதே சமூக நோயை இன்னும் அதிகப்படுத்துவதாக ஆகிவிடும். ஆகையால், மது அருந்துவதையும் விட்டுவிட்டேன். ஏற்கெனவே, தனிமையில் எழுதுவது மன அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது. இதில், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவதும் நின்று போனால், இன்னும் அழுத்தம் கூடவே செய்யும். இதெல்லாம் எனக்கு தொழில்ரீதியாக ஏற்படுகிற மன அழுத்தங்கள். இதிலிருந்து விடுபடுவதற்கு ஓஷோ மற்றும் ரிஷிகள் எல்லாம் சொன்ன தியானத்தில் ஈடுபடுவேன். இந்தப் பிரபஞ்சத்தோடு நம்மை இணைத்துக்கொள்வதுதான் தியானம். `அண்டத்தில் பிண்டம் பிண்டத்தில் அண்டம்’ என்று சொல்லுவார்கள். அதாவது இந்தப் பிரபஞ்சத்துக்குள் நான்.. எனக்குள் பிரபஞ்சம். இதுதான் தியானம். 

சரி, இந்த மன அழுத்தம் ஏன் வருகிறது?

நான் ஒரு பயணி. உலகம் முழுவதும் சுற்ற வேண்டும் என்று ஆசைப்படுபவன். அந்தக் காலம் மாதிரி நேரடியாக நாம் போய்விட முடியாது. இப்போது விசா தேவை. நம்முடைய பேங்க் பேலன்ஸைப் பார்த்துதான் விசாவே நமக்குக் கிடைக்கும். எனக்குக் கனடா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்குச் செல்ல விசா மறுக்கப்பட்டிருக்கிறது. `அங்கே, என்னை வரவேற்க நண்பர்கள் இருக்கிறார்கள்’ என்பதையெல்லாம் தூதரக அதிகாரிகளிடம் சொன்னாலும் ஏற்க, மறுக்கிறார்கள். என்னுடைய பேங்க் பேலன்ஸை மட்டும்தான் பார்த்து, மறுக்கிறார்கள். இந்தச் சூழலில் ஒரு பயணிக்குப் பணம் இல்லை என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதுதான்!

`எதெல்லாம் நம்மிடம் இல்லையோ.. அதனால் வருகிற துன்பங்களும் நம்மிடம் இல்லை’ என்று திருக்குறள் ஒன்றில் வள்ளுவர் சொல்கிறார். அதனால், நாம் அம்பானி மாதிரி ஆக முடியவில்லையே என்றெண்ணி, வருத்தப்படக் கூடாது. காலையில் எழுந்ததும் சூரியனைப் பார்த்து, தூய்மையான காற்றைச் சுவாசிக்க வேண்டும். அதற்காக, இயற்கைக்கு நன்றி சொல்ல வேண்டும். அதைவிட்டுவிட்டு என்னால் காற்றில் பறக்க முடியலையே என்று வருத்தப்பட்டுக்கொண்டிருக்கக் கூடாது. 

என் நண்பர் ஒருவர் ஏழை. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு அவர் அடிக்கடி செல்வார். அவர் கோயிலுக்குள் நுழைந்ததும், அங்கேயுள்ள குருக்கள் `இவருக்கிட்ட எதுவும் தேராது’ என்று எண்ணிக்கொண்டு வெளியே போய்விடுவாராம். அங்கே சந்நிதிக்குள் பெருமாள் முன்னால் நண்பர் மட்டும் தனியே நின்று, வணங்கிக்கொண்டிருப்பாராம். `பெருமாள் முன்னால் ஒருத்தர் தனியாக நின்றுகொண்டிருந்தார்’ என்று, இப்போது சொன்னால், யாரும் நம்பக் கூட மாட்டார்கள். இது ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை. 

`சின்ன வயசில் பெருமாளோடு கண்ணாமூச்சி ஆடுவேன்.. அவர் எனக்கு விளையாட்டுத் தோழன்’ என்று, என்னுடைய மனைவி அவந்திகாவும் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். கூட்டமே இல்லாமல் இருந்த பார்த்தசாரதி கோயில், இப்போது திருப்பதி போலப் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. காரணம், மன அழுத்தம். இறைவனிடம், `எனக்கு அதைக் கொடுங்கள்.. இதைச் செய்யுங்கள்’ என்று வேண்டுதல்தான் பிரார்த்தனைதான். 

நானும் போய், `எனக்கு லண்டன், அமெரிக்கா, கனடா போக வேண்டும்.. ஏன் விசா மறுத்தீர்?’ என்று கேட்க முடியுமா? அங்கேதான் எனக்குத் திருக்குறள் உதவி செய்கிறது. 

ஒரு பெண்மணி தன்னுடைய காதலனோடு ஓடிப்போகிறாள். அவளைப் போய், `குழந்தைகளுடைய எதிர்காலம் பாழாயிடும்.. வாமா..’ன்னு சொல்லி, அழைத்து வருகிறார்கள். அவள் குழந்தைகளைக் கொன்று விடுகிறாள். அது ஒரு பெரிய சோகத்தில்தானே போய் முடிந்தது. எதற்காக ஓடிப்போன துன்பத்தைத் திருப்பி அழைத்து வர வேண்டும்? அதனால்தான் திருவள்ளுவர் சொல்கிறார் `இல்லையா.. நிம்மதி..!’ எனக்குப் பயணம் இல்லையா.. நிம்மதி. அப்படித்தான் மன அழுத்தத்தை எதிர்கொண்டும் கடந்தும்போய்க்கொண்டிருக்கிறேன்!” என்கிறார் சாரு நிவேதிதா