Published:Updated:

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

அண்டன் பிரகாஷ்

Published:Updated:
##~##

ந்த வாரம் இரண்டு சுவாரஸ்யமான இடையீடுகளை அலசலாம்.

 அலைபேசியில் இருந்து இணையத்துக்குத் தங்கு தடையின்றிச் செல்லலாம் என்றிருக்க, இணையத்தைப் பயன்படுத்திப் பேச வேண்டுமானால், கணினி அல்லது அதற்கென்றே பிரத்யேகமாகத் தேவைப்படும் சாதனம் அல்லாமல் பேச முடியாது என்ற நிலைதான் இதுவரை இருந்துவந்தது.

இந்தக் குறையை நிவர்த்திசெய்வதன் மூலம் அலைபேசித் தொழில்நுட்பத்தில் இடையீடு ஏற்படுத்தும் சாத்தியக்கூறை ஏற்படுத்தி இருக்கிறது ரிபப்ளிக் வயர்லெஸ் என்ற நிறுவனம் (http://www.republicwireless.com/) தடையில்லாப் பேச்சு, குறுஞ்செய்தி மற்றும் டேட்டா ஆகியவற்றைக் கொண்டு இருக்கும் இந்தத் தொழில்நுட்பம், இணையம் மற்றும் அலைபேசித் தொழில்நுட்பங்களைத் தேவைக்கேற்றபடி ஆட்டோமேட்டிக்காகப்  பயன்படுத்திக்கொள்கிறது.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

உதாரணத்துக்கு, நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள். வீட்டில் இணையம் செல்லும் வயர்லெஸ் வசதி இருக்கிறது. ரிபப்ளிக்கின் அலைபேசியைப் பயன்படுத்தினால், அது உங்கள் வீட்டில் இருக்கும் இணைய இணைப்பை முழுமையாகப் பயன்படுத்தி, பேசவோ வலைதலங்களுக்குச் செல்லவோ வசதி செய்யும். அடுத்து, வீட்டைவிட்டு வெளியே வந்து பீச்சில் வாக்கிங் போகிறீர்கள். இப்போது, ரிபப்ளிக் அலைபேசி நெட்வொர்க்கில் இணைந்துகொண்டு இயங்க ஆரம்பிக்கும். வாக்கிங் முடித்து, அலுவலகம் செல்கிறீர்கள். அங்கே இணைய இணைப்பு இருப்பதால், ரிபப்ளிக் தானாகவே அந்த இணைப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்.

இப்போதைக்கு அவர்கள் கொடுக்கும் ஆண்ட்ராய்ட் அலைபேசி சாதனத்தைத்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் இருந்தாலும், ரிபப்ளிக்கின் முயற்சி, அலைபேசி மற்றும் இணையம் இரண்டையும் நெருக்கமாகக் கொண்டுவந்து இணையத்தை முக்கியமான ஊடகமாகப் பயன்படுத்தும் இடையூட்டுக்குக் காரணமாக அமையும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். ரிபப்ளிக்கின் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி பல ஈயடிச் சான் காப்பிகள் இன்னும் சில மாதங்களில் வரத் தொடங்கும்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்ட ரிபப்ளிக்கை ஆர்டர் செய்துவிட்டேன். அடுத்த வாரம் கிடைத்ததும் பரிசோதனை கள் செய்துவிட்டுப் பகிர்ந்துகொள்கிறேன்.

இடையீடு செய்யப் புறப்பட்டு இருக்கும் மற்ற நிறுவனம் ட்வால்லா (www.dwolla.com). இது இறங்கியிருக்கும் களம் அனைவருக்கும் பரிச்சயமானதுதான். கிரெடிட் கார்டு இண்டஸ்ட்ரி. கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்திப் பணம் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் மூன்று சதவிகிதம் வரை கமிஷனாகக் கொடுக்க வேண்டியிருப்பது இன்றைய சூழ்நிலை. இதனால், பல வணிக நிறுவனங்கள், குறிப்பாக, சிறிய நிறுவனங்கள் கிரெடிட் கார்டு வழியாகப் பணம் வாங்குவது இல்லை. கிரெடிட் கார்டு என்பது எளிதாகப் பயன்படுத்த உதவுகிறது என்பதால், அதை ஏற்க மறுக்கும் வணிகத் தளங்களை நுகர்வோர் புறக்கணிக்க வாய்ப்பு உண்டு என்பதால், வணிக நிறுவனங்கள் அதை ஓர் அத்தியாவசியமானதாக எடுத்துக்கொள்வது நடைமுறையில் இருக்கிறது.

இந்த கமிஷனை எதற்காகக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறதா? விளக்குகிறேன்.

இன்டர்நெட் எப்படி அனைவருக்கும் பொதுவானதாக இருக்கிறதோ, அது போல தனிப்பட்ட நெட்வொர்க்குகள் சிலவும் இருக்கின்றன. வங்கிகள் உள்ளிட்ட பணம் கையாளும் நிறுவனங்களுக்கு இடையே பணப்பரிவர்த்தனை நிகழ்வதற்கெனத் தனிப்பட்ட நெட்வொர்க் இருக்கிறது. நீங்கள் சென்ற வாரம் வரிசையில் நின்று பணம் எடுத்த ஏடிஎம் சாதனம் இந்த நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டதே. யாருக்காவது செக் மூலம் பணம் கொடுத்து, அவர் அந்த செக்கை காசாக்குவதற்காகத் தனது வங்கியில் கொடுக்கும்போது, உங்களது கணக்கில் இருந்து அவரது கணக்குக்குப் பணம் மாறுவது இந்த நெட்வொர்க் மூலமாகத்தான் நிகழ்கிறது.

இந்த நெட்வொர்க்கின் மீது கிரெடிட் கார்டு நிறுவனங்களான விசா, மாஸ்டர், டிஸ்கவர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போன்றவை தங்களது நெட்வொர்க்கைக் கட்டியிருக்கின்றன. உதாரணத்துக்கு, ஜவுளிக் கடையில் புது வருடத் துணிமணி வாங்கிவிட்டு, கிரெடிட் கார்டு கொடுத்தால், அதை உரசி, அதன்

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

தகவல்களைப் பெற்றுக் கொண்டு உங்களது கணக்கில் கடனாக வைக்கும் அந்த சாதனம், கிரெடிட் கார்டு நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டது.

இந்த நெட்வொர்க்குகள் இணையத்துக்கு முந்தைய காலத்தவை. இவற்றை இயக்க ஆகும் செலவை இதைப் பயன்படுத்துபவர்கள்தான் கொடுத்தாக வேண்டும். அது இருக்கட்டும், பேபால், கூகுள் செக் அவுட் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கும் கமிஷன் அழ வேண்டி இருக்கிறதே என்று கேட்கலாம். இதற்குக் காரணம், இந்த ஆன்லைன் சேவைகளும் மேற்படி நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துகின்றன என்பதால்தான்!

ட்வால்லா புதுமையான நெட்வொர்க் ஒன்றைக் கட்டியிருப்பதாகச் சொல்கிறது. அவர்களது நெட்வொர்க்கை இயக்க அத்தனை செலவாகாது என்று உறுதியளிக்கிறது. அதை நம்பித்தான் ஆக வேண்டிஇருக்கிறது. காரணம், அவர்கள் பரிவர்த்தனைகளுக்கு வாங்கும் கமிஷன்.

WWW - வருங்காலத் தொழில்நுட்பம்

தனிப்பட்ட நபர்கள் தங்களுக்குள் பணம் பரிமாறிக்கொள்ள எந்த கமிஷனும் கிடையாது. 10 டாலர்களுக்குக் குறைவான வணிகப் பரிவர்த்தனைகளுக்கும் எந்த கமிஷனும் கிடையாது. அதற்கு மேற்பட்டதற்கு - அது எவ்வளவு பெரிய தொகை ஆனாலும் - அவர்கள் வசூலிப்பது டாலரில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே ($0.25)! சென்ற வருடம் நிறுவப்பட்ட நிறுவனம் இன்றைய நாளில் நாளன்றுக்கு 10 மில்லியனுக்கு மேல் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறது. அயோவா மாநிலத்தில் மட்டுமே இயங்கிய ட்வால்லா, இப்போது அமெரிக்கா முழுவதும் சில மாதங்களுக்கு முன்னால் இயங்கத் தொடங்கி இருக்கிறது. அடுத்த வருடத்தில் உலகம் முழுவதும் வரலாம் என்பது எனது கணிப்பு!

கிரெடிட் கார்டு நிறுவனங்கள் திகிலாக ட்வால்லாவைப் பார்த்தபடி இருக்கின்றன. ட்வால்லா வென்றால் திவாலாகப்போவது அவர்கள்தான்!

LOG OFF