Published:Updated:

கானகக் கலைஞர்!

கானகக் கலைஞர்!

கானகக் கலைஞர்!

கானகக் கலைஞர்!

Published:Updated:

வைல்டு லைஃப் போட்டோகிராஃபி சவாலானது மட்டுமல்ல; பொறுமையைச் சோதிக்கும் விஷயமும்கூட! மாதம் முழுக்கக் காட்டுக்குள் மிருகம்போல அலைந்தாலும் ஒரு படம்கூட எடுக்க முடியாமல் திரும்ப நேர்வது எல்லாம் இதில் சகஜம்!  

கானகக் கலைஞர்!
##~##

நமது காடுகளில் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் மிக அரிதாகத்தான் காணக்கிடைக்கும். அதனால், இந்த விலங்குகளை படம் எடுத்துவிட்டால் கொண்டாடிவிடுவார்கள். ஆனால், இந்தத் துறைக்குள் நுழைந்த ஓர் ஆண்டுக்குள்ளேயே பல வகையான வன விலங்குகள், பறவைகள் என்று சுட்டுத் தள்ளியிருக்கிறார் (கேமராவில் தான்!) சரவணன்.

''சிறு வயதில் இருந்தே காட்டுக்குள் செல்வதிலும் செல்லப் பிராணி கள் வளர்ப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். கோவையில் வசிப்பதால் அடிக்கடி முதுமலை காட்டுக்குச் செல்வேன். அப்போது சாதாரண டிஜிட்டல் கேமராவில் படங்கள் எடுத்து, அதை 'ஆர்குட்’ வலைப் பக்கத்தில் ஏற்றுவேன். 'ஆர்குட்’ மூலம் முழு நேர வனப் புகைப்படக் கலைஞரான ஜெய்யுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவருடன் ஒரு முறை பந்திப்பூர் சென்றபோதுதான், முதன்முதலாகக் காட்டில் உலவும் புலியை நேரில் பார்த்தேன்.

ஆர்வம் அதிகமாக நவீன டிஜிட்டல் கேமரா வாங்கி, நிறைய வன விலங்குகளைப் பலவித கோணங்களில் படம் பிடித் தேன். அதன்பின் மீண்டும் தனியாக பந்திப்பூர் சரணாலயம் சென்றபோது புலியைப் படம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தச் சந்தோஷம் கொடுத்த உற்சாகத்தில், எனது காப்பீடு நிறுவனப் பணியை விட்டுவிட்டு, இப்போது  முழுக்கவே காடுகளில்சுற்றிக் கொண்டு இருக்கிறேன். காட்டில் வன விலங்குகளின் மன நிலைக்கு ஏற்ப நடந்துகொள்வது ரொம்பவும் முக்கியம். ஆரம்பத்தில் ஒரு முறை, யானை எங்கள் வாகனத்தைத் துரத்தியபோது ரொம்பவும் பயந்துவிட்டேன். இப்போதுஎல்லாம் அது எனக்கு சர்வசாதாரண நிகழ்ச்சி. துரத்தும்போது வாகனத்தை நிறுத்திவிட்டால் போதும், அருகில் வந்து பார்த்து விட்டுத் திரும்பிச் சென்றுவிடும்.  

கானகக் கலைஞர்!

புலிகளை மட்டும் 25 முறைக்கும் மேல் படம் எடுத்து இருக்கிறேன். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என அலைந்து திரிந்து நான் புகைப் படம் எடுத்துக் குவித்துக்கொண்டு இருக்கிறேன். நண்பர் மோகன்தாஸுடன் சமீபத்தில் ஆப்பிரிக்கக் காடுகளுக்குச் சென்றேன். ஒவ்வொரு வன உயிரின புகைப்படக் கலைஞரும் செல்ல விரும்பும் இடம் அது. அந்த கென்ய காட்டுக்குள் ஐந்து நாட்கள் அலைந்தோம். அங்கு 'பிக் ஃபைவ்’ எனப்படும் யானை, சிங்கம், காட்டெருமை, சிறுத்தை, காண்டாமிருகம் ஆகியவற்றைப் படம் எடுத்தேன். அப்போதே வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட்ட நிறைவு''

- சிலிர்ப்புடன் சிரிக்கிறார் சரவணன்.

கானகக் கலைஞர்!
  • காட்டுக்குள் சென்று படம் எடுக்க விரும்பும் போட்டோகிராஃபர்களை ஃபேஸ்புக் மூலம் ஒருங்கிணைத்து அடிக்கடி பந்திப்பூர் சரணாலயத்துக்கு அழைத்துச் செல்கிறார் இவர்!
  •  
  • புலிகளிடம் ஒரு பழக்கம். ஒவ்வொரு புலியும் தனக்கென தனியாக ஏரியா பிரித்துக்கொள்ளும். வேறு புலிகளோ அல்லது விலங்கினங்களோ அங்கு வந்து டேரா போட்டால், அமளிதுமளி ஆகிவிடும். அந்த ஏரியாவில்  சிறுநீரைக் கழித்து எல்லை வகுத்துக்கொள்கின்றன புலிகள். மழை பெய்து முடித்தவுடன், புலிகள் அவசர அவசரமாகச் சிறுநீர் கழித்து மீண்டும் எல்லையை நிர்ணயித்துவிடும்!

- கா.பாலமுருகன்