வண்டிக்காரச் சட்னி

தேவை: காய்ந்த மிளகாய் - 6 புளி - நெல்லிக்காய் அளவு பெருங்காயத்தூள் - சிறிதளவு கறிவேப்பிலை - ஒரு கப் கடுகு - கால் டீஸ்பூன் நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.

செய்முறை: காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, சட்னியுடன் சேர்த்துக் கலக்கவும்.

குறிப்பு: பயணங்களின்போது இட்லி, தோசை, தயிர் சாதத்துக்குத் தொட்டுக் கொள்ள எடுத்துச்செல்வதால் `வண்டிகாரச் சட்னி’ என்ற பெயர் பெற்றது.

உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

மோர்க்கூழ்

தேவை:  மாவு பச்சரிசி - அரை கப் லேசாகப் புளித்த தயிர் - ஒரு கப் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் அல்லது மோர் மிளகாய் (ஒரு இன்ச் துண்டுகள்) – 4 கறிவேப்பிலை - சிறிதளவு கடுகு - கால் டீஸ்பூன் தண்ணீர் - இரண்டரை கப் நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியைக் கழுவி, தயிரில் அரை மணி நேரம் ஊறவிடவும். அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்தெடுக்கவும். பிறகு தண்ணீர், உப்பு சேர்த்துக் கரைக்கவும். அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு, கரைத்த மாவைச் சேர்த்துக் கிளறவும். மாவு நன்கு வெந்து சுருண்டு வரும்போது இறக்கி, எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகளாக்கவும்..

குறிப்பு:  மோர்க்கூழை கம்பு மாவு, கேழ்வரகு மாவிலும் செய்யலாம்.

கவுனி அரிசிப் பொங்கல்

தேவை:  கறுப்பு அரிசி அல்லது கவுனி அரிசி - ஒரு கப் தண்ணீர் - 4 கப் வெல்லம் - ஒரு கப் தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன் நெய் - ஒன்றரை டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

செய்முறை: கவுனி அரிசியை நன்கு கழுவி, தண்ணீரில் நான்கு மணி நேரம் ஊறவிடவும். ஊறவைத்த தண்ணீருடன் அரிசியை குக்கரில் சேர்த்துக் குழைய வேகவிடவும். வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும். அதனுடன் கவுனி அரிசி சாதம், தேங்காய்த் துருவல், நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு: நார்ச் சத்தும் இரும்புச் சத்தும் நறுமணமும் அதிகமாக இருப்பதால் உடல்நலத்துக்கு நல்லது.

இலை வடக தோசை

தேவை: இட்லி அரிசி - 2 கப் ஓமம் - ஒன்றரை டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அரிசியைக் கழுவி நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, களைந்து நைஸாக அரைத்து உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். அதனுடன் ஓமத்தைக் கசக்கிச் சேர்க்கவும். தட்டுகளில் எண்ணெய் தடவி மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி, ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான இலை வடக தோசை ரெடி.

குறிப்பு: இலையை வட்ட வடிவமாக வெட்டி அதில் மாவை ஊற்றி இட்லி கொப்பரையில் அவித்துச் சாப்பிட்டதனால் இலை வடக தோசை என்ற பெயர் பெற்றது. இப்போது வட்ட இலை வடக ஸ்டாண்டு கிடைப்பதால் அதில் மாவை ஊற்றி வேகவைத்துச் சாப்பிடலாம்.

கறிவேப்பிலை - எள் துவையல்

தேவை: வறுத்த கறுப்பு எள் - ஒரு டேபிள்ஸ்பூன் கறிவேப்பிலை - ஒரு கப் தோல் சீவி, துருவிய இஞ்சி - 2 டேபிள்ஸ்பூன் புளி, வெல்லம் - சிறிதளவு உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எள்ளை மிக்ஸியில் பொடிக்கவும். அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும். பிறகு உப்பு, புளி, இஞ்சித் துருவல், வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் கெட்டியாக நன்கு அரைத்து எடுக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கலாம்).

குறிப்பு:  இரும்புச் சத்து நிறைந்தது. ஜீரணச் சக்தியையும் மேம்படுத்தும்.

தேங்காய் மாவு

தேவை: பதப்படுத்திய அரிசி மாவு (அரிசியை ஊறவைத்து, நிழலில் உலர்த்தி அரைத்த மாவு) - ஒன்றரை கப் தேங்காய்த் துருவல் - அரை கப் சுடுநீர், பால், நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: அடிகனமான இரும்பு வாணலியில் அரிசி மாவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கருகாமல் சிவக்க வறுத்து எடுக்கவும். அதனுடன் பால், சுடுநீர், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். தேங்காய்
மாவு ரெடி.

குறிப்பு:  தீர்த்த யாத்திரை செல்லும் வயதானவர்கள் வழியில் வெளி உணவு எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதனால் ஊறுகாய், பொடி வகைகளுடன் இந்தத் தேங்காய் மாவையும் எடுத்துச்செல்வார்கள்.

புளிப் பொங்கல்

தேவை: பச்சரிசிக் குருணை - ஒரு கப் நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் புளிக்கரைசல் (ஒரு நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்துக் கரைத்தது) - இரண்டரை கப் பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை வெந்தயம் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு கடுகு - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் (ஒரு இன்ச் துண்டுகள்) – 4 காய்ந்த மிளகாய் (ஒரு இன்ச் துண்டுகள்) – 4 உப்பு – தேவையான அளவு.

செய்முறை: குக்கரில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை வெந்தயம், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளிக்கவும். அதனுடன் பச்சரிசிக் குருணை, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, புளிக்கரைசல் சேர்த்து, கொதிக்கும்போது, தீயைக் குறைத்து 7 - 8 நிமிடங்கள் நன்கு வேகவிடவும். மூடியைத் திறந்த பின் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: புளி சாதத்தின் சுவையோடு இருக்கும். வயதானவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள். தாளிப்பில் பருப்பு வகைகள் சேர்க்கத் தேவையில்லை.

களி கஞ்சி தோசை

தேவை: இட்லி அரிசி - ஒன்றரை கப் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைத்து எடுத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு கரண்டி மாவுடன் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றிக் கரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் இந்த மாவுக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிடவும். மாவு, கஞ்சி பதத்துக்கு வந்த பிறகு இறக்கி, மீதமுள்ள மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

டாங்கர் பச்சடி

தேவை: வறுத்துப் பொடித்த உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் (கைகளால் கசக்கவும்) நறுக்கிய பச்சை மிளகாய் - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன் தயிர் - ஒரு கப் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

குறிப்பு: உளுத்தம்பருப்பில் இரும்புச் சத்து அதிகமுள்ளதால் பெண் குழந்தைகளின் இடுப்புக்கு அதிகம் பலம் சேர்க்கும்.

இரும்பு வாணலி ஊத்தப்பம்

தேவை: தோசை மாவு - 2 கப் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: தோசை மாவுடன் மிளகுத்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்துக் கலக்கவும். இரும்பு வாணலியில் எண்ணெய் தடவி, மாவைச் சற்றுக் கனமான தோசையாக ஊற்றவும். பிறகு சுற்றிலும் எண்ணெய்விட்டு, வாணலியை மூடி மிதமான சூட்டில் வைத்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

ராகி - பால் கஞ்சி

தேவை: ராகி (கேழ்வரகு) - அரை கப் காய்ச்சிய பால், சர்க்கரை – தேவையான அளவு.

செய்முறை: ராகியை நன்கு கழுவி எட்டு மணி நேரம் ஊறவிடவும். பிறகு, மிக்ஸியில் அரைத்துப் பால் எடுத்து வடிகட்டவும். அதை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கிப் பருகவும்.

குறிப்பு: பால், சர்க்கரைக்குப் பதிலாக மோர், உப்பு சேர்த்தும் இந்தக் கஞ்சியைத் தயாரிக்கலாம். இரும்புச் சத்துமிக்கது. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

துவரம்பருப்புப் பொங்கல்

தேவை: பச்சரிசி – ஒரு கப் துவரம்பருப்பு - 1/3 கப் தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை உப்பு – தேவையான அளவு தண்ணீர் - 3 கப்.

செய்முறை: அரிசி, துவரம்பருப்பை நன்கு களையவும். குக்கரில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி அரிசி, துவரம்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வறுக்கவும். அதனுடன் தண்ணீர், உப்பு சேர்த்து 8-10 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். துவரம்பருப்புப் பொங்கல் தயார்.

குறிப்பு:  தென் தமிழ்நாட்டில் ஆடி, தை மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் வழிபாட்டுக்கு உகந்த நாள்களாகக் கொண்டாடப்படுகின்றன. அந்த நாள்களில் பெண் குழந்தைகளுக்கு எண்ணெய் நீராட்டி, பாதங்களில் நலுங்கு வைப்பதுடன் இந்தச் சுவையான துவரம்பருப்புப் பொங்கலும், `தாளகம்' எனப்படும் எள் சேர்த்த குழம்பும் சமைப்பார்கள். கூடவே பாயசமும் உண்டு.

அரிசி - தேங்காய்ப் பாயசம்

தேவை: பச்சரிசி - கால் கப் தேங்காய்த் துருவல் – அரை கப் பொடித்த வெல்லம் – முக்கால் கப் நெய் - 2 டீஸ்பூன் முந்திரி – தேவையான அளவு ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை: வாணலியில் நெய்விட்டு முந்திரி சேர்த்து வறுத்துத் தனியாக எடுத்து வைக்கவும். அரிசியைக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். வெல்லத்துடன் தேவையான அளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். மிக்ஸியில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து சில விநாடிகள் சுற்றவிட்டு, அதனுடன் ஊறவைத்த அரிசி சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் நெய் தடவி, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். அதனுடன் அரைத்த தேங்காய் - அரிசி விழுது சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வேகவிடவும். பிறகு வெல்லக் கரைசல், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

குறிப்பு: அரிசிக்கும் தேங்காய்க்கும் உரிய இயல்பான நறுமணத்தோடு இருக்கும் இந்தப் பாயசத்துக்கு அரைக்கையில் கொரகொரப்பாக அரைக்க வேண்டியது மிகவும் முக்கியம். இல்லையேல், கஞ்சி போன்ற சுவையாகி விடும். இந்தப் பாயசத்தைப் பால் சேர்த்தும் செய்யலாம்.

குழம்பு மாவு உப்புமா

தேவை: அரிசி மாவு - ஒரு கப் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை கடுகு – அரை டீஸ்பூன் வெந்தயப் பொடி – ஒரு சிட்டிகை கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு பச்சை மிளகாய் (ஒரு இன்ச் துண்டுகள்) – 3 நீட்டு சிவப்பு மிளகாய் (ஒரு இன்ச் துண்டுகள்) – 3 புளிக்கரைசல் (நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து, கரைத்தது) – ஒரு கப் நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: அடிகனமான வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயப் பொடி தாளித்து, மஞ்சள்தூள் சேர்க்கவும். அதனுடன் அரிசி மாவு சேர்த்து நன்றாக வறுக்கவும். பிறகு உப்பு, புளிக்கரைசல் சேர்த்துக் கிளறவும். (தேவையானால் சிறிதளவு தண்ணீர் தெளிக்கலாம்). மாவு நன்கு வெந்ததும் இறக்கி ஆறவிடவும். கரண்டியால் மசித்தால் பொலபொலவென மணல் போல உதிரும்.

குறிப்பு:  அந்தக் காலத்தில் அனைவரது வீட்டிலும் உலர்த்திய மாவு எப்போதும் இருக்கும். அரிசி மாவைக் குழம்பு மாவு என்றே குறிப்பிடுவார்கள். இந்த மாவைக்கொண்டு எளிமையான, சுவையான இன்ஸ்டன்ட் உணவுகள், பலகார வகைகளை நம் முன்னோர்கள் செய்தார்கள். நன்கு பழக்கிய வார்ப்பிரும்பு வாணலியில் இந்த உணவை நன்றாகச் சமைக்க முடியும். சமைத்து முடித்தபின் வேறு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ளலாம்.

வெண்டைக்காய் புளிப் பச்சடி

தேவை: நறுக்கிய வெண்டைக்காய்த் துண்டுகள் - ஒரு கப் நீட்டு சிவப்பு மிளகாய் (அரை இன்ச் துண்டுகள்) – 8 கடுகு – அரை டீஸ்பூன் வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை கறிவேப்பிலை – சிறிதளவு பொடித்த வெல்லம் – ஒன்றரை டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் புளிக்கரைசல் (சிறிய நெல்லிக்காய் அளவு புளியை ஊறவைத்து கரைத்தது) – அரை கப் மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை அரிசி மாவு – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, வெந்தயப் பொடி, மிளகாய் துண்டுகள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் வெண்டைக்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளிக்கரைசல், வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிடவும். அரிசி மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து இதில் ஊற்றி ஒரு கொதிவிட்டு இறக்கவும். வெண்டைக்காய் புளிப் பச்சடி தயார்.

பொரி விளங்காய் உருண்டை

தேவை: கோதுமை மாவு, பாசிப்பருப்பு – தலா அரை கப் பாகு வெல்லம் – அரை கப் முதல் முக்கால் கப் வரை பல்லு பல்லாகக் கீறிய தேங்காய்த் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன் நெய் – சிறிதளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கோதுமை மாவு, பாசிப்பருப்பைத் தனித்தனியாகச் சேர்த்து வறுத்தெடுக்கவும். பாசிப்பருப்பு ஆறியதும் மிக்ஸியில் மாவாக அரைத்தெடுத்து, கோதுமை மாவுடன் சேர்த்துக் கலக்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டி ஒரு கம்பிப் பதத்துக்குப் பாகு காய்ச்சி இறக்கவும். அதனுடன் தேங்காய்த் துண்டுகள் சேர்த்துக் கலந்து ஆறவிடவும். பிறகு, மாவைக் கொட்டிக் கலந்து உருண்டைகள் பிடிக்கவும். நெய் தடவிய தட்டில் அடுக்கி உலரவிடவும். உருண்டைகள் கையில் ஒட்டாமல் கெட்டியான பிறகு சேகரிக்கவும்.

குறிப்பு: `பொருள் விளங்கா உருண்டை' என்றும் அழைக்கப்படும் இது, இரும்புச் சத்து மிகுந்த சுவையான பழங்காலத் தின்பண்டம்.

ஓலன்

தேவை: தட்டைப் பயறு - கால் கப் சதுர துண்டுகளாக்கிய பறங்கிக்காய் - 3 கப் பச்சை மிளகாய் (ஒன்றரை இன்ச் துண்டுகள்) – 4 அல்லது 5 மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு முதல் தேங்காய்ப் பால் - அரை கப் இரண்டாவது தேங்காய்ப்பால் - கால் கப் உப்பு – தேவையான அளவு.

செய்முறை: தட்டைப் பயறை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் களைந்து அதனுடன் மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, பறங்கித்
துண்டுகள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உப்பு, இரண்டாவது தேங்காய்ப்பால் சேர்த்துக் குழையாமல் வேகவிடவும். அதனுடன் வேகவைத்த பயறு, முதல் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிவிட்டு இறக்கவும்.

குறிப்பு: கேரளா, திருநெல்வேலி பகுதிகளில் வெள்ளைப் பூசணி, பறங்கிக்காயுடன் செய்யப்படும் இரும்புச் சத்துமிக்க இந்த உணவில், தட்டைப் பயறுக்குப் பதிலாக பாசிப்பருப்பு சேர்த்தும் செய்யலாம்.

உக்காரை

தேவை: கடலைப்பருப்பு - அரை கப் பாகு வெல்லத்தூள் - அரை கப் நல்லெண்ணெய் (அ) வேறு சமையல் எண்ணெய் - 3 டீஸ்பூன் நெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்துடன் மூழ்கும் அளவு தண்ணீர்விட்டுக் கரைத்து வடிகட்டவும். வெறும் வாணலியில் கடலைப்பருப்பைச் சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வறுத்தெடுத்துக் களையவும். அதனுடன் வெந்நீர் சேர்த்து அரை மணி நேரம் (கிள்ளு பதம் வரும் வரை) ஊறவிடவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அடிகனமான வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்துச் சூடாக்கி அரைத்த மாவைச் சேர்த்து உதிர் உதிராக வரும் வரை கிளறவும். மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லத்தை ஊற்றி ஒரு கம்பி பதத்துக்குப் பாகு காய்ச்சி, உதிர்த்த மாவுடன் சேர்த்து நன்கு கிளறி ஆறவிடவும்.

குறிப்பு: உக்காரை தீபாவளிக்குச் செய்யப்படும் எளிமையான, பாரம்பர்யமான இனிப்பு வகை. நீண்ட நாள்கள் வைத்திருக்க முடியாததால் தீபாவளிக்கு முன்தினம் இதைச் செய்து பலகாரத்துடன் பரிமாறுவார்கள்.

கல்கண்டு வடை

தேவை: தோல் நீக்கிய முழு உளுத்தம்பருப்பு - அரை கப் பொடித்த கல்கண்டு – முக்கால் கப் நெய் – ஒரு டீஸ்பூன் அரிசி மாவு - 1 அல்லது 2 டீஸ்பூன் எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பைக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். பிறகு தண்ணீரை வடித்து, கல்கண்டு சேர்த்துக் கெட்டியாக அரைத்தெடுக்கவும் (தேவையானால் தண்ணீர் தெளித்து அரைக்கலாம்). அதனுடன் தேவையான அளவு அரிசி மாவு தூவிக் கலக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு, மாவை வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

குறிப்பு: உளுந்துடன் காரம் சேர்த்து அரைத்துக் கார வடையும் செய்யலாம். இரும்புச் சத்துமிக்கது இந்தக் கல்கண்டு அடை.

கொள்ளு சாம்பார்

தேவை: கொள்ளு, துவரம் பருப்பு – தலா கால் கப் சாம்பார் பொடி – 4 டீஸ்பூன் புளிக் கரைசல் – கால் கப் விருப்ப மான காய்கறி துண்டுகள் – கால் கிலோ தக்காளி – 3 (பொடியாக நறுக்கவும்) கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயப் பொடி - ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை நெய் – சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு மஞ்சள்தூள் - 2 சிட்டிகை பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்) உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொள்ளைக் களைந்து இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய கொள்ளுடன் துவரம்பருப்பு சேர்த்துத் தேய்த்துக் கழுவி குழைய வேகவிடவும். குக்கரில் விருப்பமான காய்கறி துண்டுகள், தக்காளி துண்டுகள், பச்சை மிளகாய், சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, புளிக் கரைசல், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி இரண்டு விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் மூடியைத் திறந்து அதனுடன் வேகவைத்த பருப்பைச் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். வாணலியில் நெய்விட்டு கடுகு, வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, சாம்பாரில் சேர்க்கவும். மேலே கொத்தமல்லித்தழையைத் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு: நார்ச் சத்தும் இரும்புச் சத்தும் கொண்ட கொள்ளு சாம்பார், ஊளைச்சதையைக் குறைக்க உதவும்..

இது மாமியார் - மருமகள் சமையல்!

பாரம்பர்ய உணவு வகைகள் நமது ஆரோக்கியத்துக்கு உகந்தவையாகவும் நாவுக்கு ருசியாகவும் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டுவதாகவும் இருந்தன. இன்று புதிது புதிதாக அறிமுகமாகும் பொருள்களைப் பயன்படுத்தி நாம் தயாரிக்கும் பல உணவு வகைகளும் சுவாரஸ்யமானவையே. எனினும், அந்தந்தப் பருவ காலங்களுக்கேற்ப விளையும் உணவுப் பொருள்களில் அன்பையும் குடும்ப நலத்தையும் கருத்தில் கொண்டு நம் முன்னோர் சமைத்த உணவு வகைகளுக்கு என்றும் ஓர் உயரிய இடம் உண்டு. நம் மூதாதையர் நமக்கு ஊட்டி வளர்த்த அந்தச் சுவை இன்றும் நம் நினைவில் நிற்பவை. ஆனால், அந்த உணவு வகைகளில் பலவற்றை இன்று நாம் செய்ய விழைவதில்லை. அப்படிப்பட்ட சுவையான உணவுக் குறிப்புகளை இந்த இணைப்பில் படங்கள் மற்றும் வீடியோக்களுடன் நமக்கு வழங்குகிறார்கள் ‘மதுரை மீனாட்சி ரெசிப்பீஸ்’ யூடியூப் சேனல் மற்றும் முகநூல் பக்க நிர்வாகிகளான மாமியார் மீனாட்சியும் மருமகள் ஸ்ரீநர்தனியும்.

“கணவரும் நானும் திருச்சியில் வங்கியில் பணிபுரிந்தோம். எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அதனால் இரண்டு தேவதைகள் மருமகள்களாகக் கிடைத்தார்கள். நான் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் ஹைதராபாத்தில் வசிக்கும் மூத்த மகன் வீட்டுக்கு வந்துவிட்டேன். மூத்த மருமகள் ஸ்ரீநர்தனி மாஸ் கம்யூனிகேஷன் படித்தவர். ஐ.டி, பத்திரிகைத் துறைகளில் பணிபுரிந்தவர். இப்போது சுயமாகத் தொழில்செய்து வருகிறார்.

நான் இங்கு வந்த பிறகு, இருவரும் தோழிகளாகவும் ஆனோம். ஒரு பண்டிகை தினத்தன்று நான் சமைத்த உணவு வகைகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தார் ஸ்ரீநர்தனி. என் சமையல் பக்குவத்தையும் மருமகளின் வீடியோ, புகைப்பட நேர்த்தியையும் வியந்து பாராட்டிய என் மகன், ‘நீங்கள் இருவரும் சேர்ந்து யூடியூபில் சமையல் சேனல் ஒன்றை ஆரம்பிக்கலாமே’ என ஆலோசனை கூற, உற்சாகமும் ஆர்வமும் எங்களைத் தொற்றிக் கொண்டன.

உணவை மருந்தாகப் பயன்படுத்தும் பாரம்பர்ய சைவ உணவு வகைகளை நான் சமைக்க, என் மருமகள் அவற்றை ஷூட் செய்து, எடிட்டிங் வேலைகள் முடித்து, யூடியூப் மற்றும் முகநூல் பக்கங்களில் போஸ்ட் செய்தார். அந்த
ரெசிப்பிகளுக்கு வந்த கமென்ட்டுகளைக் காட்டிய மருமகள், ‘அத்தை... சமையல் குறித்துச் சந்தேகம் கேட்டிருப்பவர்களுக்கும் பதில் அளியுங்கள்’ என்றார். அதன்படியே செய்ய,
லைக்ஸும் ஷேர்ஸும் குவிய ஆரம்பித்தன. இவற்றைப் பார்க்கும்போது நாங்கள் அடையும் சந்தோஷத்துக்கு அளவேயில்லை’’ என்று பரவசமாகப் பேசி, மருமகளை அணைத்துக் கொள்கிறார் மாமியார் மீனாட்சி.

‘`நான் கோயம்புத்தூர் பெண். பெரிய கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தேன். என் மாமியார், இன்னொரு தாயாக இருக்கிறார். ஒருவரையொருவர் மதித்து, மற்றவர் சுதந்திரத்தில் தலையிடாமல் நல்ல புரிந்துணர்வுடன் கடந்த ஒன்பது வருடங்களாக வாழ்ந்துவருகிறோம். எங்களின் இணைய முயற்சி வெற்றிகரமாக அதுதான் காரணம்’’ என்கிறார் மருமகள் ஸ்ரீநர்தனி, தன் அத்தைக்கு ஒரு புன்னகையைப் பரிசளித்தவாறே.

- ஸ்ரீ அகத்திய ஸ்ரீதர்

படங்கள், வீடியோக்கள்: ஸ்ரீநர்தனி

டிப்ஸ்... டிப்ஸ்...

ஃப்ருட் சாலடில் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை சேர்த்தால் கூடுதல் சுவையுடன் உடலுக்குத் தேவை யான இரும்புச் சத்தும் கிடைக்கும்.

- கவிதா சரவணன், திருச்சி-6

பூந்தி லட்டுக்குப் பூந்தி செய்யும்போது பூந்தி தேய்க்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் தடவி, பின் கரைத்து வைத்துள்ள மாவைச் சிறு கரண்டியால் எடுத்து ஊற்றி லேசாக தட்டினால் பூந்தி முத்துமுத்தாகத் தடையின்றி விழும்.

- பிரபாகர், சென்னை-20

வெங்காயத்தை நறுக்கிய பிறகு சிறிதளவு பாலில் நனைத்துவிட்டு வறுத்தால், மணமும் நிறமும் நன்றாக இருக்கும்.

- அ. பவானி, வயலூர்-1

எந்த வகை சூப் செய்தாலும் கொதிக்கும்போது சிறிது பொட்டுக்கடலை மாவை நீரில் கலந்து சேர்த்தால் சூப் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.

- கவிதா சரவணன், திருச்சி-6

இட்லிப்பொடி அரைக்கும்போது ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தையும் வறுத்துப் பருப்புடன் சேர்த்து அரைத்தால் வாசனை யாக இருக்கும்.

- ஜி.விஜயலெட்சுமி, கும்பகோணம்-1

கொத்தமல்லித்தழையை வாழை இலையில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் ஒரு வாரம் வரை பசுமையாக இருக்கும்.

- பகவதி பிரவின், சென்னை-94